Follow by Email

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கற்பு ..


அழகான ஆணாதிக்க வார்த்தை
பெண்ணுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய அம்பு ..
 பெண்ணை மட்டுமே உண்ணும் முதலை ..


                                 இப்படியெல்லாம் எழுத ஆசை ஆனால் அதிகம் படிப்பறிவு இல்லாததால் நான் குரோமோசோம் கட்சி . ( தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது ) எனவே தலைப்பை பற்றி உண்மையில் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அருமையான வலைப்பூவை பாருங்கள் http://thangathamiz.blogspot.in/2008/08/blog-post_5109.html
             சில வருடங்களுக்கு முன் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் .அங்கே பகல் - இரவு மிக சாதாரணம் எனவே ஆண்கள் பெண்கள் நிறைய சேர்ந்து வேலை பார்ப்பதால் அங்கு ஒருவரை பற்றி ஒருவர் கட்டாயமாக ஒரு ஈர்ப்பு இருந்தது .சில வயதில் சில ஈர்ப்பு மாதிரி .அங்கு எனக்கு தொடர்புடைய ஒரு நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது . விசாரித்தேன் ..ஒப்புக்கொண்டான் .ஆனால் அவனைப்பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் மேல் பாதிப்பில்லாமல் கல்யாணமான பெண்களிடம் அவன் வலை வீசுவதில் கில்லாடி .இதை பற்றி நாங்கள் பலமுறை கண்டித்ததால் கம்பனியில் எங்களுக்கு கொடுத்த ரூமைகூட காலிசெய்துவிட்டு வெளியே தங்கி கொண்டான் .( அது கூட வேறு காரணம் சொன்னார்கள் ) ஊரில் உள்ள அவன் குடும்பம் வரை எனக்கு பழக்கம் .இருந்ததால் .வேறு வழியில்லை பேசிக்கொள்வோம் .எனக்கு அந்த பெண்ணை பற்றி கவலை தொற்றிக்கொண்டது.

     ஒரு நாள்  நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த பெண்ணையும் ,நண்பனை பற்றியும் சொன்னார் .உங்கள் நண்பனும் அந்தபெண்ணும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிமாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் மேய்கிற ஆட்கள் .இதுக எப்படி குடும்பம் பண்ணபோகிறதோ என்று அங்கலாய்த்தார் .இதுபற்றி நான் அவனின் மேல் உள்ள அக்கரையில் அவனுக்கு மிகவும் நெருங்கிய அதே சமயம் நல்ல  புத்திசாலி நண்பர் மூலமாக அவனுக்கு அறிவுரை சொல்ல அனுப்பினேன் .அவன் சொன்ன பதிலை கேட்டபோது  "நான் சந்தோசப்பட்டேன் .
அது "நானும் ராமனில்லை அவளும் சீதையாக எப்படி எதிர்ப்பாபது "
இருவருக்கும் திருமணம் ஆகி அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள்

             பல்வேறு காரணங்கள் காரணமாக வேலையே விட்டுவிட்டுஅவர்கள் சொந்த ஊருக்கு போன பிறகு மீண்டும் திரும்பி இருவரும் எங்கள் கம்பனிக்கே பழைய பணிக்கு தொடர ..( கையில் காசும் , கண்டிப்பை விரும்பாதவகளுக்கு சொந்த ஊர் முடியாது ) சரி இப்போது பையன் பழையமாதிரி இருக்கமாட்டான் என நினைத்தால் கொஞ்ச நாளில் மீண்டும் அவன் வேலையை தொடங்கிவிட்டான் ..அந்த பெண்ணும் ...      இதில்  ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் விசயம் இவனுக்கு தெரியாது .ஆனால் இவன் விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியும் .

ஒருநாள் இவன் அறிந்தபோது வீட்டுக்குள் அடிதடி  ரகளை .நீ யோக்கியமா ? என அந்த பெண் கேட்டதால் .
எனக்கு கோபம் வந்து விட்டது நேரில் சென்று என்னடா அப்போ கேட்டப்ப பெரிசா வசனம் பேசின இப்ப அதெல்லாம் எங்க போச்சு என்ற போது மிக சாதரணமாக சொன்னான் .அது பொம்பள பிள்ளை, நாளைக்கு பொறக்க  போகிற குழைந்தைக்கு நான்மட்டுந்தான் அப்பனா இருக்கணும்னு ஆசைப்படறேன் ...
எனக்கு பேச எதுவுமே  இல்லை என தோன்றியது .அப்படியானால் இவனோடு தொடர்பினால் எங்கோ பிறந்த குழைந்தைகளுக்காக எப்போது வருந்துவான் ?

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக