வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சொந்த வீட்டிற்கு வழி ...


                              ஏதோ  ஆன்மீக தலைப்பை போல இருந்தாலும் இது ஒரு சுய அவஸ்தை  எனக்கு .பலவருடம் இந்த அவஸ்த்தையை சுமந்தாலும் பாரம் மட்டும் குறையவில்லை .ஒரு சிலருக்கு ஒருமுறை சென்ற வழியை வாழ்நாளில் எப்போது மறுமுறை சென்றாலும் ஞாபகம் வைத்துகொள்ளும் திறமையும் ,தந்திரமும் தெரியும் .நான் அப்படியில்லை .பூஜ்யம் .அது பற்றித்தான் இந்த பகுதி

                           மதுரை  R.I வகுப்பு இரண்டு மாதத்திற்க்கு பத்து  நாட்கள் நடக்கும் போதெல்லாம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள் .இதை முதல் முறை புரிந்து கொண்டு ,பாண்டிச்சேரியில் பணிபுரியும் நண்பரிடம் சொன்னபோது அப்படியானால் முதல் வகுப்புக்கு போ ,வருகை பதிவேடும் எட்டு நாட்களுக்கு ரூபாய் 80 /- கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறிவா என்று "நல்ல"அறிவுரை தந்தார் .வருகை பதிவேடு இல்லாவிட்டால் தொழில் பழகுனருக்கான இறுதி தேர்வும் எழுத முடியாது ,நான் தொ.ப.வேலை செய்யும் பழனி ராணிமங்கம்மாள் போக்குவரத்தில் அந்த நாட்களுக்கு உறிய  சம்பளமும் பெற முடியாது ( சம்பளம் மாதம் 750 /-)


                                                    அதன்படி நானும் திண்டுக்கல் -திருச்சி -விழுப்புரம் போனேன் .அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி என்ற பெயரில் வரும் வண்டிக்காக காத்திருந்தேன் .அப்போது செல் வசதி இல்லை என்பதால் நான்குமுறை தொலைபேசியில் காத்திருப்பதாக அவருக்கு சொன்னேன்  .ஒன்றரை மணிநேரம் காத்திருந்து நண்பரிடம் போய்  சேர்ந்ததும் நண்பர் கேட்டார் .நீ போன் செய்தபிறகு மூன்று வண்டி வந்ததே ஏன் வரவில்லை என்றபோதுதான் தெரிந்தது பாண்டி ,புதுவை ,புதுச்சேரி என்ற மேலும் பல பெயர்கள் இருப்பதாக .போச்சா , ஆரம்பமே இப்படியா ?

                                          நண்பரின் வேளைப்படி சில சமயம் காலையில் சென்றுவிட்டால் மாலைதான் திரும்புவார் .அதுவரை நான் இளையராஜாவின் How to Name It ,மற்றும்  Mozart, Beethoven என்று அப்போது சோனி வாக்மேனில் கேட்டுக்கொண்டு சொக்கி கிடப்பேன் .

அதிலும் நண்பர் சிம்பொனி கேட்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு  உயரமான நீண்ட, பரந்த இடத்தில புல் வெளியில்  நடப்பது போல கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும் என்பார் .அதுவும் Breave Heart படத்தில் மெல்கிப்சன் அந்த திமிரான குதிரையில் ஒரு உயர்ந்த புல்வெளிக்கு குதிரையை செலுத்துவதுபோல் காட்சி வரும் ,அதை உதாரணமாக சொல்வார் .என்னால் அப்படி காட்சியுடன் உணர முடியவில்லை கடைசிவரை !( அப்படிதான் ரசிக்கவேண்டும் என்று பலநாள் முட்டாள்தனமாய் நம்பியிருக்கேன் -   என்பது வேறு விசயம் )

                                               ஒருநாள் நண்பர் வெகு காலையில் போனதால் நல்ல பசி .மாலை வீட்டை விட்டு வெளியே வந்தேன் .புதுவைக்குள் -விழுப்புரம் வழியாக நுழையும் போது ,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின்  சிலைக்கு அடுத்து (கடலூர் சாலை செல்லும் வழியில் ) குண்டு சாலையிலிருந்து மெயின் வந்து காலை  மதியம் இரண்டுக்கும் சேர்த்து உணவு உண்டபின் வரும் வழி தொலைந்து போய்விட்டது .நானும் எந்த இடத்தில திரும்ப வேண்டும் என பலமுறை நடந்தும் ,அந்த வீதி கிடைத்தபாடில்லை .வெறுத்துபோய் மீண்டும் மெயின்  ரோடு வந்த பொது .சுத்தமாக் வெறுத்துப்போன நிலையில் ஒரு யோசனை பளிச்சிட்டது .எப்போதோ வேறு ஒரு நண்பரின் சகோதரர்  அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது .

                                                       நல்லவேளை மெயின் ரோட்டில் இருந்ததால் தயங்கி தயங்கி கண்டுபிடித்துவிட்டேன் .நேரிடையாய் கேட்டால் மானம் போய்விடுமே அதனால் மெல்ல வேறு விசயத்தை பேசிக்கொண்டு நடுவே அவரிடம் நண்பரின் வீட்டுக்கு எது ஈசியா போகலாம் என்று ஏதோ G .K  கேள்விபோல கேட்க்க அவர் வழி  சொல்ல மெல்ல வந்து சேர்ந்தேன் .
இன்றும் ,ஐந்து முறை திருப்பூரில் உள்ள சொந்தகார வீட்டுக்கு - நான் தேடி அலைவது வழக்கம் கடைசியில் செல்லில் அழைத்து கூப்பிட்ட பிறகு அவர்கள் வந்துதான் அழைத்து செல்கிறார்கள்  எப்படி ?தெரிந்து போச்சே !
                                                 
                                         மறதி நோய்  ,ஒருவேளை மட்டும் பல்துலக்குபவர்களுக்கு வருவதாக  http://www.eegarai.net/t88963-3 பதிவில் படித்தேன் .அப்படியானால் சில ஆட்கள் பல்லே  விளக்குவதில்லை  .அவர்கள் மறந்து போய் யார் வீட்டுக்கு போகிறார்கள்  காலையில் யார் வீட்டிளிருந்து வருகிறார்கள் ? யோசிக்கவேண்டும் .


புதன், 12 செப்டம்பர், 2012

காதல் ஜாதகம்

               எனது நண்பரின்- நண்பர் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்போது ,ஒரு நல்ல ஜோசியர் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார் .ஆனால் அடிக்கடி இந்த மாதிரி கேள்விகளை நான் சந்திக்கும்போது எனக்குள் ஒரு அவஸ்தையும் ,கோபமும் பொங்கும் .காரணம் "நல்ல "என்ற வார்த்தை யார் பயன்படுத்தலாம் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி சாலமன் பாப்பையா அவர்களை பார்க்கும்போது நிச்சயம் கேட்கவேண்டும் .

                            என்னை  பொறுத்தவரையில் நிறைய பேர் நாம் எதாக இருந்தாலும்  அளவுகோலை கட்டிக்கொண்டு அழுவதாக தோன்றுகிறது .நல்ல ஜோசியரை ஆய்வு செய்யும் அறிவு இருந்தால் நாம் ஏன் அவருக்கு காசு கொடுத்து வரிசையில் காத்து கொண்டு இருக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இங்கு நாம் கொண்டுபோகும் ஜாதகத்தில் நாம் பிறந்த நேரம் சரியான நேரம் என்பதுவும் (கம்யூட்டரில் கணித்தாலும் இது அவசியமே ) ,அதை கணித்த ஜோதிடர் சரியாக அவருக்கு சந்திராஷ்டமம் இல்லாத காலத்தில் கணித்தாரா என்பது போன்ற விசயங்களை  உறுதி செய்யபடாத நமக்கு நல்ல ஜோசியரை இனம் கண்டுகொள்ள ஏதாவது புது Scale இருக்கா ? அல்லது நமக்கு சொல்லும் ஜோசியர் மனோதத்துவ முறையில் எட்டுக்கு உரியவன் திசை நடக்கிறது ஆனாலும் உங்கள் திறமையால் நீங்கள் வென்று விடுவீர்கள் என்று சொன்னால் மட்டும்தான் நல்ல ஜோசியரா ?( இத்தனையும் மனசுக்குள் யுத்தம் செய்தாலும் பொறுத்துக்கொண்டேன் கொண்டேன் ) ஆனால் நட்பில் அதுவும் நல்ல நண்பரின் நண்பர் எதற்கு என்று பொறுமையாக தெரியும் என்றேன் .

                        அப்புறம்தான் தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிந்தது .அவர் காதல் கொண்டு இருகிறாராம் .அந்த பெண்ணின் ஜாதகத்தை இவர் ஜாதகத்துக்கு ஏற்றது போல தயார் செய்து தர வேண்டுமாம் (எப்படித்தான் என்னை கண்டு பிடிப்பார்களோ தெரியவில்லை ) எனக்கு உடன் பாடு இல்லை .மெல்ல அவரைப்பார்பதை தவிர்த்து வந்தேன் .காரணம் காதல் செய்யும்போது இருக்கும் அந்த பந்தா அப்புறம் வீட்டை கண்டவுடன் எப்படி வாலை சுருட்டி கொள்ளுமோ ?
பொதுவாக பொருத்தம் பார்க்க ..
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.(விரிவான விபரங்களுக்கு - http://www.livingextra.com/2011/05/020.html இந்த தொடுப்பில் தொடரவும் ) இத்தனையிலும்  எட்டாவது வஸ்யப்-பொருத்தம் மட்டுமே கூட இருந்தாலே ஜாதகத்தை கூட மாற்றும் சக்தி வந்து விடுகிறது .
                       கடைசியில் அவருக்கு ஒத்துவந்த ஒருவரிடம் ஒரு பொத்தமான ! ஜாதககட்டதை தயார் செய்துகொண்டு அவர்கள் குடுமப் ஜோதிடரை சந்திக்க அவர்குடும்பத்துடன்  உள்ளே நுழைந்தவுடன் அப்போதைய ஹோரையை பார்த்தவுடன் ஜாதகத்தை ஓரங்கட்டிவிட்டு கைரேகை பார்த்திருக்கிறார் . அதில் உள்ள தோஷங்களை சொல்லி சில பரிகாரங்களை சொல்லி அனுப்பிவிட்டார் .

மீண்டும் (என கெட்ட நேரத்தில் ) ஒரு முறை அவரை பார்க்கும்போது.இதை சொல்லி விட்டு ஜாதகம் தயார் செய்த மெனக்கெட்டதை பெருமையாக சொன்னார் .எப்படியோ காதல் ஜெயித்து விட்டதாம்  !
                      நம் வீட்டில் உள்ளவர்கள் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை .ஆனால் பத்துக்கு ஒன்பது பொருத்தம் பார்த்து ,ஒரே ஒரு முக்கியமான பொருத்தம்   வஸ்யப்-பொருத்தம் இல்லாமல் எத்தனை பேர் இந்த சமூகத்திற்கும் ,பெற்ற குழந்தைகளுக்காகவும் ஒப்புக்கு கணவனாகவும் - மனைவியாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது காதலுக்கு ஜாதகத்தை தேடாமல் இனியாவது  விட்டுவிடுங்களேன் .

 ஒருவேளை ...இப்படியே போனால் காதல் ஜாதகம் இங்கு  தயார் செய்து தரப்படும் என்று விளம்பரத்தை பார்க்க நேரிடலாம் .