திங்கள், 3 அக்டோபர், 2016

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ - விளையாட்டும் , பந்தயமும் .


                      உங்கள் காலில் சின்னதாக ஒரு கட்டி வந்துவிட்டது .அட்டா நான் எவ்வளவு நல்லவன் எனக்குப் போய் இந்தக் கட்டி வந்துவிட்டதே என்று வருத்தப்படுவீர்கள் .ஒரு கட்டத்தில் காய்ச்சல் அளவுக்கு வந்து விட்டால் வீட்டில் இருப்பவர்கள் அல்லது வெளியே இருப்பவர்கள் என்னங்க இது இப்படி விட்டுடீங்கன்னு ஆதங்கப்பட்டதற்குப் பிறகு மருத்துவரிடம் போவீர்கள் .அவர் அந்தக் கட்டியின் தன்மைப் பொறுத்து உங்களுக்குச் சிகிச்சையளிப்பார்.சில சமயம் நாளாகிவிட்டால் சின்னதாக ஒரு அறுவைச் சிகிச்சை நடக்கும் . 

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ 

                      அப்படிப்பட்ட சின்ன அறுவைச் சிகிச்சைதான் நமது சிறப்பு ராணுவப்படை Parachute Regiment Special Forces மூலம் புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு ஹெலிகாப்டர்கள் வீரர்கள் மூலம் பாராசூட் உதவியுடன் இறங்கித் தீவிரவாதிகளின் முகாம்களைக் குறிப்பிட்ட நேரத்தில் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு அங்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்கோ சேதம் ஏற்படாமல் அதே சமயம் துல்லியமான தாக்குதலை யாரும் நினைத்துப் பார்க்காமல் தாக்கி நிலைகுலையச் செய்து விட்டு மீண்டும் நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள் . இந்த ‘துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) மூலம் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

எங்கு நடந்தது ? 

                      இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வகுத்த இராணுவப் போர் நிறுத்த கோடு Line of Control - LoC நமது இந்தியக் காஷ்மீர எல்லைப்பகுதியில் ஏழு இடங்களில் உள்ள முகாமிலும் எல்லைமீறி ஊடுறுவல்களுக்கான வழிகாட்டிகள் மற்றும் தீவிரவாதிகள் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுப் பதுங்கியிருப்பதாகவும் உளவுத் துறையினருக்கு உறுதியான தகவல் கிடைத்தது. அதை முறியடிக்கவும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பார முல்லா மாவட்டம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18-ம் தேதி அதிகாலை 4 பாகிஸ்தான் தீவிர வாதிகள் திடீர்த் தாக்குதல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும்விதமாகத் தளபதி தல்பீர் சிங் கண்காணிப்பு மற்றும் வழிநடத்தலின் மூலம் நம் இந்திய எல்லைப் பகுதியிலிருந்து 500 மீட்டர் முதல் 3 கி.மீ. தொலைவுவரையுள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்டப் பகுதிகள் மிகவும் சிக்கலான மலைப்பகுதியில் அமைந்திருந் தீவிரவாத முகாம்களைத்தான் இந்தியச் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்களால் செய்யப்பட்ட ரகசிய ராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டு இருக்கிறது . 

               பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீர்ப் பகுதிக்குள் இந்திய ராணுவ வீரர்கள் நள்ளிரவில் வான்வழியாகத் தரையிறங்கித் திடீர்த் தாக்குதல் நடத்துவது அவ்வளவு சுலபமா ? 

இல்லை ஆனால் நம் நாட்டின் சிறப்புப் படையின் துல்லியமான தாக்குதல் மூலம் இது சாதிக்கப்பட்டு இருக்கிறது .உலகின் ராணுவச் சிறப்பு அதிரடிப் படையில் நாம் 7ஆவது இடத்தைப் பெற்றது ராணுவம் . நம்மிடம் ஒன்பது வகைச் சிறப்புப் படைகள் இருக்கிறது .

1.MARCOS - Marine Commandos 
2.Para Commandos- Parachute Regiment 
3.Ghatak Force - 'killer' in Hindi 
4.COBRA -Commando Battalion for Resolute Action 
5.Force One 
6. Special Frontier Force 
7. National Security Guard 
8. Garud Commando Force 
9. The Special Protection Group 

             

                       அதில் இரண்டாவது வகை  Para Commandos பாகிஸ்தான் முப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவி ஹெலிகாப்டர்கள் மூலம் பாராசூட் வீரர்கள் ஆக்கிரமிப்புக் காஷ்மீரின் 7 இடங்களில் தரையிறங்கி 7 பகுதிகளில் அமை கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்துத் தாக் குதல் நடத்தியதன் மூலம் 7 முகாம் களும் முழுமையாக அழிக்கப் பட்டன. சுமார் 4 மணி நேரச் சண்டைக்குப் பிறகு வியாழக் கிழமை அதிகாலை 4.30 மணிக்குத் தாக்கித் திரும்பியிருக்கிறார்கள் .காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்திய ராணுவத் தாக்குதல் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை எப்போது, எங்கு வெளியிட வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். உரிய நேரத்தில் வீடியோ வெளியிட இருக்கிறது. 

                   இங்கு நடத்தப்பட்டது போல்தான் அல்கொய்தாத் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமாப் பின்லேடன் 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த ரகசியத் தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த 'நேவி சீல்' என்கிற சிறப்புப்படைச் செய்தது. 

 ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட அரசு - பாக் !

                 அதே போலதான் இந்தியா ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் செய்துள்ளது .இது முழுக்க முழுக்கத் தீவிரவாதிகளைக் கொல்லும் நடவடிக்கை மட்டுமே .பாகிஸ்தான் அரசு ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாக இருந்தாலும் அது ராணுவத்துக்குக் கட்டுப்பட்ட அரசுதான் .சில சமயம் அங்குத் தளபதி அசிம் பஜ்வா போன்ற ராணுவத் தளபதிகள்தான் பிரதமரைக் கட்டுப்படுத்துகிறார்கள் .அந்த ராணுவத்தின் தளபதிகள் ஏதோ பல காரணங்களுக்காக அப்பாவி மக்களைக்கொல்லும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் மற்றும் வழிகாட்டிகளை நியமித்து இப்போது நாம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா போன்ற உயரமான பகுதிகள் மூலம் எல்லைப்பகுதிக்குள் ஊடுறுவுகிறார்கள் . சும்மாவாவது துப்பாகிச் சூடு நடத்தி எல்லைப்பகுதியில் நம் ராணுவத்தின் கவனத்தைத் திசைத் திருப்பி விட்டு இளம் வயது இளைஞர்களை மூளைச் சலவைச் செய்து தீவிரவாதத்தை மனதில் புகுத்தி அனுப்பி வைக்கிறார்கள் . கடந்த ஓராண்டில் மட்டும் காஷ்மீர் எல்லையில் 20 ஊடுருவல் முயற்சிகளை முறியடித்துள்ளோம்.பல பேர்க் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.இந்தியாவுக்கு எதிரான தீவிர வாதிகள். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற் றவில்லை. இந்தியா மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.. 

தாக்குதலின் விளைவு ! 

          இந்திய ராணுவத் தாக்குதலால் இரு நாடுகளிடையேயும் தற்போது போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. இந்தியத் தரப்பில் பஞ்சாப், காஷ்மீர் எல்லையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் வெளியேற்றம் 

         எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுவதால் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையை ஒட்டிச் சுமார் 10 கி.மீ. வரை உள்ளக் கிராமங் களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்’

               பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தரு வதையும் உடந்தையாய் இரு பதையும் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கைச் செய்துள்ளார் .ஆனால் இதோடு போகாது .தீவிரவாதிகள் முதுகில் குத்திப்பழகியவர்கள் .அதனால் மெல்ல மெல்ல ஊடுறுவித் தங்கள் தாக்குதலுக்குத் தயாராவர்கள் .இந்தியாவும் காத்துக்கொண்டு இருக்கிறது …



இங்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது . 

ஹஸ்வான் என்ற சீன மன்னனுக்குச் சேவல் சண்டயில் விருப்பம் அதிகம் அவன் தன்னுடைய சேவல் சண்டைப் பயிற்சியாளனாக ஷி ஷ்ஸிங் என்ற தாவோ ஞானியை வேலைக்கு வைத்து இருந்தார் .அவரிடம் சேவல் கொடுக்கப்பட்டதாம்.
சேவலைக் கொடுத்த முதல்நாளிருந்து மன்னன் தினமும் சேவல் சண்டைக்குத் தயாரா எனக் கேட்க ஆரம்பித்து விட்டாராம்..
முதல் நாள் வந்தவுடன் அரசனின் சேவல் மற்ற சேவலுடன் சண்டையிடத் துடித்துக்கொண்டு இருந்ததாம்.அடுத்த சேவல் கூவினால் தன் சிறகுகளைச் சிலுப்பிகொண்டு சண்டைக்குத் தயாராகுமாம் .
அதனால் இன்னும் சேவல் தயாராகவில்லை என்று சொல்லி அனுப்பினாராம் அந்தத் தாவோ பயிற்சியாளர்.
இப்படியே பத்து நாளுக்குப் பிறகு அடுத்தச் சேவலைக் கண்டால் கோபப் பார்வையுடன் தாக்கத் தயாராகுமாம்.
இன்னும் சேவல் தயாராகவில்லை என்று சொல்லி அனுப்பினாராம் .
இன்னும் பத்து நாளாகிவிட்டது பிறகு மற்றொரு சேவல் கூவினாலோ எதிரே வந்தால் கூடக் கண்களைக்கூட இமைப்பதைத் தவிர்த்ததாம்.மேலும் தன்னுடைய அசைவை ஒரு மரக்கட்டையைபோல அசைவற்று வைத்து இருந்ததாம். அப்போதுதான் அந்தப் பயிற்சியாளான் அரசனுக்கு இந்தச் சேவல் சண்டைக்கு ஏறக்குறையத் தயாராகி விட்டது என்று கொடுத்து அனுப்பினாராம் !.

           பயிற்சியாளனுக்கு அது விளையாட்டு .ஆனால் மன்னனுக்கு அது பந்தயம் . அதாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மூலம் ஜெயிக்க விரும்பும் மன்னன்.நாம் தீவிரவாதத்திலிருந்து பாகிஸ்தானையும் அதன் மக்களைக் காப்பாற்றும் தாவோ பயிற்சியாளன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக