ஒரு விசயத்தை உருப்படியா செய்ய தெரியாம ஆரமபத்திலேயே சொதப்பி முதல் கோணலை ஏற்படுத்திய அனுபவம் .
முழுப்படம் பார்க்கவில்லை .ஒரு ஆற்றில் தோணி ஓட்டுகிறான் ஒருவன் .அவனுக்கு மூலிகை சேகரித்து அதை வயித்தியம் செய்வது பழக்கம் .இந்த நிலையில் ஒரு மலைமேல் மூலிகை பறிக்கும்போது தவறி ஆற்றில் விழுகிறான் .விழுந்தவனை கடல் மச்சகன்னி போல ஒருத்தி வாய் வழியாக மூச்சை செலுத்தி காப்பாற்றுகிறாள் ..அப்புறம் அவள் அவனை தேடி வருகிறாள் .கதை அப்புறமாய் போகிறது ....
ஆனால் விஷயம் அதுவல்ல அப்படி அந்த லோக்கல் லோக்கல் சேனலில் அது திருடப்பட்ட வெப் அட்ரஸ் தெரிந்தது .சரி ஆபீசில் ஒரு மேடம் இந்த மொழிபெயர்ப்பு படங்களை மிக உசத்தியாக பேசுவார்கள் சரி அவர்களுக்கு போன் பண்ணி சொன்னேன் .அந்த முகவரி சொன்னேன் .
இங்கு நான பண்ணிய தப்பு அதை நான் சோதித்து சொல்லியிருக்க வேண்டும் .நான் கொடுத்த முகவரி எதார்த்தமாக இருந்தது . எனவே போனில் சொல்லிவிட்டேன் .அப்புறம் சில பேங்க் வேலை .மறந்தே விட்டேன் .
நான் ஆபிஸ் வந்தபோது அவர்கள் இல்லை .மறந்துவிட்டேன் .ஆனால் இந்த பதிவுக்கு சில மணி நேரத்திற்கு முன்னாள் போனில் அழைத்து எவன் சார் இந்த அட்ரஸ் உங்களுக்கு கொடுத்தான் என்ற போதுதான் எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது .நமக்குத்தான் நல்ல பெயர் நாம் செய்ததாகவும் கெட்டது செய்தால் முகம் தெரியாத எவனையாவது இழுத்து விட்டுருவேமே ?ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து ,நான் அந்த முகவரியை இன்டர்நெட்டில் தேடிப்பார்த்தால் அடபாவிகளா ?
அத்தனையும் நீலப்பட விவகாரங்கள் .நான் மட்டும் பார்த்திருந்தால் ஒருவேளை சந்தோசப்பட்டு இருப்பேன் .ஆனால் இப்போ மானம்,மரியாதை கப்பலேற்றிவிட்டேனே ?இது என் தப்புதான் ஆனா யோசிச்சு பாருங்கள் .திருட்டுமசாலா என்பது ஒரு தப்பாகா இருக்குமுன்னு என்னால தப்பாக நினைக்க முடியலே !
ஒரு வேளை உங்களுக்கு இப்படி அவஸ்தை ஏற்பட்டு இருக்கா ?