கண்களில் தொலைந்து...
வைரமுத்துவை பார்த்தவுடன் ,நான் அவரின் கண்களில் தொலைந்து போவேன் .அந்த கண்கள் பேசிகொண்டு இருக்கும் வைரமுத்துவை தாண்டி ஏதோ ஒரு ஏகாந்தத்தில் உலாவி கொண்டு இருக்கும் அந்த கட்டற்ற தேடல் பின்னால் போய் தொலைந்து போய்விடுவேன் .அதனால் பலமுறை அவரின் பேசும் வார்த்தைகள் கூட ஒரு வித இடைஞ்சலாக தோன்றும் .ஆனால் இன்று மிக கவனமாக அவரின் பேச்சை கவனிக்க வேண்டும் என்பதை முடிவெடுத்து கொண்டேன் .
தடைகல்லை படிக்கல்லாக்கு!
எனது 17 வயதில், இந்திய சோவியத் கலாச்சார அமைப்பின் மூலம் சென்னை சென்ற போது திண்டுக்கல் கவுன்சிலர் தோழர் முத்துலக்கையன் ஐயா கவிஞரின் இல்லத்திர்க்கு அழைத்து சென்று என்னை அந்த அமைப்பின் இளைஞர் அமைப்பின் செயலாளர் என்று அறிமுகப்படுத்தினார்.(வேடிக்கை என்னவென்றால் எனக்கே அது அப்போதுதான் தெரியும்) .எனது தோளில் தட்டி கொடுத்து விட்டு .அப்போது என் கையில் வைத்து இருந்த ’லெனின் வாழ்க்கை வரலாறில்’ தனது கையெழுத்தை இட்டு -”தடைகல்லை படிக்கல்லாக்கு” என்று பொன்மொழியை கவிஞர் பதிவு செய்தார் .நான் பெற்ற முதல் ஆட்டோகிராப் அதுதான்..
அதே உற்சாகம் .
மனப்பாடம் சுமையல்ல!
கேட்க படாத கேள்வி!
கவிதை எழுதும் மனோநிலையை கேட்கும் போது மெல்ல யோசித்தார் .இதுவரை என்னிடம் கேட்க படாத கேள்வி இது .இதர்க்காக பெரிதாய் மெனக்கெடுவதில்லை .ஆனால் யாரையும் காயப்படுத்துவதுமில்லை ,காயப்பட்டும் கொள்வதிலை என்பதாகவும் ,அப்போது எழுந்த் கோபம,எல்லாவற்றையும் தள்ளிவைத்து விட்டு ,தலைக்கு மேல் செல்லும் மேகம், அப்படிப்பட்ட மனோ நிலையை காத்து வருகிறேன்.ஒருவேளை நான் எழுதிகொண்டு இருக்கும் போது அருகே பாம்பு ஊர்ந்து போயிருந்தாலும் நான் பார்க்கவில்லை .கவிதை எழுதும் மன நிலை எப்போதும் இருந்து வருகிறது.ஒரு இடத்தில் கூட நான் எதுவும் எழுத முடியவில்லை என்கிறார் கவிஞர் .கொடைகானல் கீழேயுள்ள மஞ்சள் ஆற்றில் இருந்துதான் தண்ணீர் தேசம் போன்ற நாவல் பிறந்தது என்கிறார் கவிஞர் .
எதிர்கால பார்வையாக!
தனது கருவாச்சி காவியம் ,தண்ணீர் தேசம்,மூன்றாம் உலகப்போர் அனைத்தும் வெகு நீண்ட எதிர்கால பார்வையாக தண்ணீரின் அவசியத்தை பற்றி சொல்லப்பட்டது என்றார். அவை வெறும் நாவல் அல்ல . எதிர் கால உலகின் 97 சதவிகித தண்ணீர் கடலின் நீர் என்றும் மீதி மூன்றில் 1% நீர் பனியாக உறைந்து கிடப்பதாகவும் ,அடுத்த 1% நீர் தொட முடியாத ஆழத்தில் கிடப்பதாகவும் 1% நீர் குடி நீராக பயன்படுகிறது.
உங்கள் முதல் காதல் கவிதை எந்த பெண்ணால் வந்தது என்பதர்க்கு கவிதைக்கு பொய் அழகு என்பது போல அது ஒரு பெண்ணால் வந்தது இல்லை .முதல் கவிதை ஒரு பெண்ணால் வருவது இல்லை என்பதாக சொல்லி தப்பினார் . குழந்தைகளுக்கு 5 வயதிர்க்குள் தமிழ் கற்பிக்க வேண்டும் .உடல் மட்டுமல்ல 5ல் வளையாத மனமும் 50ல் வளையாது என்றார் .அதோடு பள்ளியில் கண்டிப்பாகவும் வீட்டில் கனிவாகவும் கல்வி சொல்லி தரப்பட வேண்டும் என்கிறார் கவிஞர்.
உங்கள் விருதுகளை பற்றி சொல்லுங்கள் என்பதர்க்கு ,தனது 6 தேசிய விருதுகளும் ,6 மாநில விருதுகளும் ,மூன்று பல்கலைகழக டாக்டர் பட்டத்தையும் ,இன்னும் பல விருதுகளும் என் வீட்டின் சுவற்றில் மாட்டி கொள்ளவில்லை .பீரோவில் வைத்து பூட்டியிருக்கிறேன் .விருது அறிவித்த 24 மணி நேரம் அந்த சந்தோசம் நீடிக்கும் .அப்புறம் அதை மறந்து விடுவேன் என்கிறார் இந்த கவிதைக்காரர் .
கடைசியாக ஒரு முக்கியமான கேள்விக்கான அற்புதமான பதிலை தந்தார் .சமீபத்தில் உங்கள் பாடல்களில் விஞ்ஞானம் அதிகம் மேலோங்குகிறதே என்றதர்க்கு ,விஞ்ஞானம் ஏற்று கொள்ளப்பாடாதவன் நிகழ் காலத்தை விட்டு விலகுகிறான் என்றார்
வாசிப்பவனுக்கு எப்போது ம் ஒரு குணம் இருக்க வேண்டும்.அது எழுதியவனை அவன் எழுத்தின் மூலம் தன்னுள் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே அது . இன்று காலை ஓசோவின் - பதஞ்சலியோக சூத்திரத்தில் நாம் யாரையும் நம்முள அனுமதிக்காததால் எதுவும் நாம் உணர்வதில்லை .இயேசுவோ ,புத்தரோ, நபிகளோ நம்முள் பேச அனுமதியாது நாம் வேறு அவர் வேறாக இருக்கிறோம்.வாசிப்பின் விளைவு அதை வேலை செய்ய அனுமதிப்பது .அதை தவறுவதன் மூலம் வாசிப்பவன் தவறு செய்கிறான் என்கிறார் .இன்று உலக புத்தக தினம் . இது யோசிக்க வேண்டிய விசயம்தானே ?