தவறு செய்தவர்கள் யாராயிருந்தால் என்ன அது யாரிடம் என்றால் என்ன ? அப்படிக் கேட்பது தானே முறை .என்று ஒரே வார்த்தையில் தீர்ப்பு எழுதிவிட்டு வேறு எதாவது சினிமா விமர்சனம் படிக்கப் போய்விடலாம் .ஆனால் யார் தவறு செய்தார்கள் என்று தெரியவே இப்போதெல்லாம் வெகு நாளாகிவிட்டது .ஆடிட்டர் செய்த தவறுக்கு ஒரு முதல்வர் , பதவியையே இழக்க வேண்டியாதாக இருக்கிறது என்று ஒரு பக்கம் நாம் கவலை படுகிறோம் .இன்னொறு பக்கம் இலவசங்களை அள்ளித்தரும் ஓர் அரசு வெள்ளை அறிக்கை சமர்பிக்கச் சொல்லி (எதிர்கட்சி அந்தஸ்த்து இல்லாத) ஒரு கட்சி ஆளும் கட்சியைக் கேட்கிறது . இது நாட்டில் .சரி அது பெரிய விசயம் .அதைப் புரிந்துகொள்ளப் புரிந்து கொள்ளத்தான் சிக்கல் வலுக்கும் .சரி நாம் தலைப்புக்கு வருவோமே.
இன்று பையனுக்குப் பள்ளி அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கிறார்கள் .காலையில் 7.30 க்குப் பள்ளியெழுச்சி பாடிய போது அவன் சரியாக விழித்துக் கூடப் பார்க்காமல் கேட்ட முதல் வார்த்தை , இன்னைக்கு லீவ் போட்டுக்கறேன்ப்பா...
எழுப்பி உட்காரவைத்து கேட்டதர்க்கு அவன் சொன்ன காரணம் . நாழு ப்ராஜெட் கொடுத்து இருந்தார்களாம் ஒன்றூ கூடச் செய்யலையாம் இன்று ஒரு நாள் லீவ் எடுத்து பண்ணிட்டு நாளைக்குப் போறானாம் .கடந்த 24 முதல் நேற்று 1 ஆம் தேதி வரை அவனுக்கு ஏறக்குறைய 9 நாட்கள் விடுமுறையில் செய்யாத ப்ராஜெட் ஒர்க்கை இன்று லீவ் போட்டுச் செய்ய அனுமதி கேட்கிறான் .இத்தனைக்கும் அவனுக்கு லீவ் ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் கேட்டபோது எழுத்துப் பயிற்சி மட்டும்தான் என்று காட்டினான் .எனக்கும் எழுத வேண்டிய வேலை இருந்த போது அழகாக எழுதி முடித்து விட்டான் .ஆனால் அப்போது கூட ப்ராஜெக்ட் பற்றி மூச் விடவில்லை . இதை அவன் டைரியில் எழுதி அனுப்பி இருப்பார்கள் .அதை எப்போதும் கவனிக்கும் அவன் அம்மா சமீபத்தில் வேலைக்குப் போவதால் வேலை பளு கவனிக்கவில்லை .
இதைக் கேட்டால் சட்டெனெ யாருக்கும் கோபம் வரும்.அது மட்டுமா வரும் நம் மேல் பச்சாதாபமும் - சுய இரக்கம் அப்புறம் கழிவிறக்கம் எல்லாம் வந்தது கூடவே இவற்றின் விளைவாய் கோழைத்தனமான - இயலாமையில் அவனை அடிக்க வேண்டும் என்ற் ஆத்திரம் வந்தது .அதை எல்லாம் தள்ளி போட குளிக்கப் போனேன் . அவன் அம்மா அவனை நான் விட்ட இடத்திலிருந்து திட்டி தீர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டு இருந்தது குளியலறை கேட்டது.இத்தனை பணம் கட்டி என்ன பிரோயோஜனம் , வெறும் டி.வி பார்த்துடுக்கிட்டு இருந்துவிட்டுச் சொல்லாமல் மறைத்து இருந்த விட்டாய் நேற்றாவது செய்து இருகலாமே என்றும் சில வார்த்தைகள் காதில் விழுந்தது அப்புறம் பெரிய மவுனம் தொடர்ந்தது .ஒரு வேளை காதில் சோப்பு நுறை பட்டதால் கேட்கவில்லை என்று நினைத்து வீட்டுக்குள் நுழைந்தால் ..
அவனுக்கு எந்த ப்ராஜெக்ட் முதல்ல பண்ணனும் அடுத்து என்ன பண்ணனுங்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்து கொண்டு இருந்தது ! குளிதத போது கரைந்து போன கோப குரங்கு இப்போது வேறு கிளைக்குத் தாவி மனைவி மேல் தொற்றிக்கொண்டது..
அவனைக் கவனித்தது போக நேரம் இருப்பதால் வேலைக்குப் போவேன் என்று சொல்லிவிட்டு ,அவன் டைரி கூடப் படிக்காமல் விட்டு விட்டு அவனுடன் விடுமுறை உடன் பாடு போட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கமால் என்ன செய்யும் ?
ஆண்களை விடப் பெண்கள் வருமானம் கூட இருந்தாலும் பல கம்பெனி மாறாமல் இருக்கக் காரணம் இது தானோ ? சட்டெனெ ஒட்டி கொள்Laaal குறை நிறை சொல்லி விட்டு அப்புறம் மெல்ல கம்பெனியே கதி என்பதாய் ஒட்டி கொள்கிறார்கள் .அவர்கள் சிங்கர் வேலை செய்யச் சேர்ந்து முழுதாய் 6 மாதம் கூட ஆகவில்லை .ஆனால் கம்பெனி மேல் இருந்த பேச்சு அக்கறை மெல்ல வீட்டின் மேல் இருந்து திசை விலகி விட்டது .இந்த இடைவெளியை நிரப்ப அவனை டூயுசன் சேர சொல்லி கட்டாயப் படுத்தியும் பார்த்தார்கள்.அவன் மசியவில்லை .என்னிடம் கேட்டார்கள் .அவன் போதிய அளவுக்கு அக்கறையாகப் படித்துக் கொண்டு இருந்ததாகப் பட்டதால் .நான் அவன் முடிவுக்கு விட்டு விட்டேன் .ஆனால் இந்த விவாத விசாரணையில்(! ) அதைக் காரணம் காட்டியதோடு விட்டார்களா இல்லை .
அறிவு திருக்கோயிலில் நேற்று 01-01-2015 முதல் மகா உறசவ விழா 2015 முன்னிட்டு , அவனுக்கு விடுமுறை விட்ட நாளிலிருந்து காலை 7.30 - 9.00 மணிவரை தினமும் யோகசன பயிற்சி நடந்தது அதர்க்குப் போனதால்தான் அவன் ப்ராஜக்ட் செய்யவில்லை என்று ஒரு புதுவிதமான புத்தகத்தைப் பார்த்து தவறாக முயற்சி செய்த சமையல் பதார்த்தம் மாதிரி பதில் தந்தார்கள் .
சரி இனி விவாதம் எந்தத் தீர்வும் தராது என்ற அவனை அடிப்பதாகச் சொல்லி கொஞ்சம் பயமுறுத்தி குளித்துக் கிளம்பச் செய்தேன் அழுது கொண்டே கிளம்பினான்.
நாங்கள் தவறு செய்து கொண்டு இருக்கிறோம் . புதிதாய் வேலைக்குப் போவதால் மனைவியும் அவனைக் கவனிக்க நேரம் எடுத்துக் கொள்ள முடியவில்லை .மேலும் நான் புதிதாய் சேர்ந்த பயிற்சி வகுப்புகள் அவனோடு செலவிடும் நேரத்தை விழுங்கி விட்டது .
இப்போதெல்லாம்ஆண்களை விடப் பெண்கள் பிரைவசி வேணும் என்பதால் - கோவில் இல்லாத ஊர்களைப் போலப் பெரியவர்கள் இல்லாத வீடுகள் பெருகி வருகிறது .வீட்டில் பெரியவர்கள் தவிர்க்க பட்டு வருவதைப் பள்ளி விடும்போது குழந்தைகளை அழைத்துச் செல்லவரும் பெரும்பாலான தாய்மார்களின் இடுப்பிலும் ,டூ வீலர் சாவியோடு கோர்த்து இருக்கும் வீட்டுச் சாவிகள் சாட்சிகள் சொல்கின்றன.
வீட்டில் என் மகன் ஒருவன் மட்டுமே . பல வீட்டில் ,குழந்தைகள் படும் பாடு என் வீட்டில் என் மகனுக்கு ஏற்படுவது போல இன்னும் தனிமை அதிகம். அவன் தனிமை அவனைவிட அனாதையாக இருக்கிறது அந்தத் தனிமையை ,சோட்டா பீம், மிஸ்டர் பீன் ,போகோ , டிஸ்கவரி சேனல்கள் நிரப்பிக் கொண்டு வருகிறது .அவனை , எங்களை விட டி.வி தான் அதிகம் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம் !
குழந்தைகள் யாரோ செய்த ப்ராஜெட் ஒர்க் போல வளர்கிறார்க்ள் .அதிக நேரம் பள்ளி , ஹோம் இதனால்தான் விடுமுறையின் போது அவர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் சேட்டை என்ற முரண்பாடக வள்ர்கிறார்கள் .அதிகம் சேட்டை செய்யும் பையனுக்குப் பிட்யூட்டரி சுரப்பில் குளறுபடி என்று நவீன விஞ்ஞானம் கருத்து சொல்லி கலாய்க்கிறது .
எனவே இந்தச் சூழலுக்கு அவன் காரணம் இல்லை நாங்கள் தான் காரணம் அதை விட நானே ஒரு காரணம். கதை இல்லாத படம் போல போய்க் கொண்டு இருக்கும் அவன் வாழ்க்கையை ஜெனரேசன் கேப் என்ற ஒரு வார்த்தை மூலம் அத்தனை முடிச்சுகளிலிருந்தும் ஒரேடியாகத் தப்பித்துக் கொள்ள நான் விரும்பவில்லை.எதாவது செய்ய வேண்டும் .இரவு அவனைப் பார்க்கும் போது முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்க்க வேண்டும். அது அவனுக்கு முன்னால் செய்த தவறுக்காக இல்லை. வருங்காலத்தில் எதுவும் இந்த மாதிரி தவறுகள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதர்க்காக ..