சனி, 9 மார்ச், 2013

கணவனின் பிரசவம்                   ‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும்' - பொதுவாக இந்த பழமொழி வெகு காலமாக பேசப்படும் விசயம் இதன் முழு ஆராய்சியை இந்த பதிவில் மிக அழகாக ஆழமாக விவரித்து இருக்கிறார் பாருங்கள் !
http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special5.3.htm 
 நம்பிகை.
                  அதனால் நாம் இங்கு பேசப்போவது அந்த பழமொழி பற்றியல்ல . நாம்  விதியை பற்றி என்னதான் நம்பிகை கொண்டு வளர்ந்தாலும் முயற்சி என்பது நம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து சொல்லும் மரபணு விதை அல்லவா ? அதனால் அதை தவிர்ப்பது நியாயம் இல்லை அல்லவா ? அதை என் மனைவியின் பிரசவத்தில் பிரயோகப்படுத்தி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .
மருத்துவர் காலக்கெடு.
                     2006 ஆம் ஆண்டு ஜூலை 23 ல் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்பதாக மருத்துவர் காலக்கெடு நிர்ணயம் செய்து இருந்தார்கள்  .இரண்டு பக்க பெற்றோர்களும் எங்கள் அருகில் இல்லை .ஆனால் இதுவரை எண்ணிலடங்கா பிரசவத்திர்க்கு உடன் இருந்த மனைவியின் பாட்டி  (சுமார் 70 வயதுக்கும் மேல் இருக்கும்-மனைவியின் அம்மாவின் தாய் ) ஒரு மாதத்திர்க்கு முந்தியிருந்து பார்த்துக்கொள்ள வந்து உடன் இருந்தார்கள் .
 ESIC மருத்துவமனை .
                    ஜூன் மாத இறுதியில் எனக்கு கம்பெனி மூலம் ESIC ( எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ் யூரன்ஸ் கார்ப்பரேஷனில்) வசதி இருப்பதால் அங்கு முதலில் சிகிச்சை மற்றும் பரிசோதனை ஆரம்பம் முதல் செய்துகொண்டு இருந்தோம் .ஒருவேளை கொடுக்கப்பட்ட காலக்கெடுவிர்க்கு முன்னரே பிரசவ வாய்ப்பு ஏற்பட்டால், இங்கேயே பார்த்து கொள்வதர்காக.

   திண்டுக்கல்..              
                    அடுத்து எனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் எங்கள் வீட்டில் இருந்து பிரசவம் பார்ப்பதாக நாங்கள் முன்னரே தீர்மானித்து இருந்தோம்  . தேனி அரசு மருத்த்துவமனையில் எனது அண்ணி நர்ஸ். அங்கும் பரிசோதித்து பதிவு செய்துகொண்டோம்.மேலும் அவசரமாக பிரசவ வாய்ப்பு ஏற்பட்டால்  எங்கள் குடும்ப மருத்துவரிடம் ( அருகே இருப்பதால்) அங்கும் பரிசோதனை தொடர்ந்தது - அவர் பெண் மருத்துவரும் கூட .
வாடகை வாகனங்கள் ஓட்டுனர்..
         இதர்க்கு இடையில் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் சேகரித்து கையில் வைத்துகொண்டேன் .இதில் ஒரு நண்பர் தன்னுடைய முழு சம்பள தொகையையும்கொடுத்து இருந்தார். நான் வசிக்கும் அருள்புரதிலிருந்து  பிரதான சாலைக்கு வரவும் ,அடுத்து கோவை - சிங்காநல்லூர் ESIC போக 37 கி.மீ தூரம் இருக்கும் .இரவில் அதிக வாகனங்கள் அருள்புரம் பிரதான சாலையில் அவசரத்திர்க்கு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என யோசித்து ,  அங்குள்ள வாடகை வாகனங்கள் ஓட்டுனர் பலரிடம்  போன் நம்பர் சேகரித்தோம் .மிகவும் சந்தோசமாக தந்ததோடு, எப்போது வேண்டுமானலும் கவலைப்படாமல் அழையுங்கள் என்று அறிவுரையும் சொன்னார்கள் .இத்தனையும் தயார் நிலையில்...

ஒரு வாடகை வேன்.
       ஜுலை 13, ( பிரசவம் ஆகும் என கொடுக்கப்பட்ட காலத்திர்க்கு 10 தினங்களுக்கு முன்னரே ) பணி முடிந்து இரவு 8.30 வீட்டுக்கு போனால் ,மனைவியின் பாட்டி துணியெல்லாம் எடுத்து சேகரித்து கொண்டு் -  உடனே ஏதாவது வண்டி பாருங்கள் என்று சொல்லவும்  எனக்கு கொஞ்சம் பயம் உடனே தொற்றிகொள்ள , விரைந்து செயல்பட        (அப்போது என்னிடமும் , பைக் இல்லை) சைக்கிள் எடுத்துகொண்டு எனது நண்பனை அழைத்துகொண்டு பிரதான சாலைக்கு வந்தால், அங்கு எந்த வண்டியும் இல்லை . ஏற்கனவே நாங்கள் சேகரித்து வைத்து இருந்த அலைபேசி எண்களில்  அனைவரிடமும் தொடர்புகொள்ள தொடங்கினோம் ஒரு சிலர் வேறு ஊரில் இருந்தார்கள் ,சிலரிடம் ’நாட் ரீச்சபில்’பதில்வந்தது .உடனே ஒரு யோசனை தோன்றியது ,அங்கு அருள்புரத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் மருந்துக்கடை வைத்து இருக்கிறார் -பெயர்  ஜெயம் மெடிக்கல் .  நானும் எனது மனைவியின் ,குடும்பமும் அவருக்கு நல்ல பழக்கம் .எனவே அவரிடம் சென்று எனது வேண்டுகோளை சொன்னேன் .அவரிடம் ஒரு ஆம்னி வேன் இருக்கிறது. அவருக்கும் அவரது சகோதரருக்கும் கடை மூடிய பிறகு சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ள அவர்கள்  வீட்டுக்கு அந்த இரவில் செல்ல அது மட்டுமே .உடனே சம்மதித்தார் .ஆனாலும் ஒரு வாடகை வேன் இருப்பவரிடம் (அவர் நம்பர் எப்படி விட்டோம் என தெரியவில்லை,நாங்கள் விசாரிக்குபோது அவர் இல்லை போல!)முயன்று பார்க்கலாமே என சொன்னார். போனோம். அவர் மாடி அறையில் தூங்கிகொண்டு இருந்தார்.அவர் கிளம்பி வருவதர்க்குள் கைதாங்களாக பக்கத்து வீட்டாரின் துணையோடு பாட்டி என் மனவியை பிரதான சாலைக்கு நடத்தியே அழைத்து வந்துவிட்டர்கள். காரணம் கேட்டதர்க்கு நீர்குடம் உடைந்து விட்டதாகவும்  நீங்கள் வர தாமதம் ஆனதால் ,அழைத்து வந்துவிட்டதாகவும் வண்டி கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று நினைத்தார்களாம்.

பேப்பரை விரித்து உறங்க ..
      கோவை சிங்காநல்லூர் ESIC மருத்துவமனை நானும் கூடவே என் நண்பன் ,மனைவி ,பாட்டி (அப்புறம் - விதி ) போகும்போது ,12 மணியை நெருங்கிவிட்டது .மனைவியையும் பாட்டியையும் உள்ளே அனுப்பிவிட்டு எங்கள் பதிவு அட்டையை பதிய வரவேற்ப்பு பகுதிக்கு அனுப்பினார்கள் .தூங்கிகொண்டு இருந்த ஹிந்தி காவலரை ( நண்பன் ஹிந்தி அறிவான் ) எழுப்பி பதிந்து விட்டு வந்து வெளியே வந்த பாட்டியிடம் விசாரித்தால் ,இரவு பணிக்கு ஒரே ஒரு டாக்டர் இருப்பதால் இப்போது முடியாது,ரொம்ப அவசரபட்டால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் அங்கு ஆப்ரேசன் தவிர வழியில்லை என்று பயமுறுத்த ,அதுவரை ஆம்னி வாடகை வாங்குவதர்க்கு காத்து இருந்த ,அதன் ஓட்டுனரும்  உரிமையாளாருமானவர் , என்னை தனியாக மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே அழைத்து சென்று பயப்பாடாதீர்கள் ,பெரிய உயிர் (மனைவி ) முக்கியம் .ஆப்ரேசன் என்று கேட்டால் தயங்காமல் கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்ப அவருக்கு ஒரு டீ வாங்கி தர கடை தேடினோம் ஒரு கடையும் இல்லை . (நல்லவேலை நண்பன் எற்கனவே சாப்பாடு சாப்பிட்டு இருந்தான் .)அவரை அனுப்பி விட்டு திரும்பினோம் .வெளியே ஒரு காத்திருக்கும் இடம் இருந்தது.கூட வந்த நண்பன் ஒரு சின்ன தினசரி பேப்பரை விரித்து உறங்க ..

வானத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

              நான் எவ்வளவு நேரம் அப்படியே அந்த கோபமான கொசுக்களுடன் வானத்தை பார்த்து கொண்டு இருந்தேன் என்பது தெரியவில்லை .காலை 5 மணிக்கு  இருக்கும்  (அதர்க்குள் ஏற்கனவே இரவில் ,அதிகாலை  என இரண்டுமுறை யாருக்கு என தெரியவில்லை ) காப்பி வாங்கி வர அனுப்பினார்கள் .
விசாரித்து போகலான்னு வந்தேன்.

                   காலை 9  மணிக்கும் மேல் டாக்டர் வருவதாக சொல்லவே பதற்றத்தை அடக்கி கொண்டு காத்து இருந்தேன் .பாட்டிக்கு நம்பிக்கை சுகம் பிரசவம் என்பதாக.அதனால் அனேகமாக அவர்கள் மறந்த சாமிகளிடமெல்லாம் கோரிக்கை வைத்து கொண்டு இருக்க .நேரம் நகர மருத்தது . .மணி 10.10 சார் குழந்தை பிறந்தாச்சா என்ற குரல் கேட்டு திரும்பினால் ,இரவு எங்களை பத்திரமாக இங்கு அழைத்து வந்த ஆம்னி ஓட்டுனரும்  உரிமையாளாருமானவர். இங்கு ஒரு வாடகை வந்தேன் அப்படியே விசாரித்து போகலான்னு வந்தேன் என்றார் .நான் சொன்னேன் .எனக்கு இரவு அவருக்கு ஒரு டீ கூட வாங்கி தராமல் அனுப்பிய ஞாபகம் வரவே மருத்துவமனையை விட்டு வெளியேறி வாங்கிகொடுத்து அனுப்பினேன் .
 சிசுவை கையில் ஏந்தி ..                                                   
                                     10.30 மருத்துவமனைக்கு மணியை பார்த்து கொண்டே ,நான் திரும்பிகொண்டு இருக்கும்போதே அவசரமாக பாட்டி எதிரே தேடி கொண்டு வருவதை பார்த்தேன் .எங்க போயீட்டீங்க குழந்தை பிறந்துருச்சாம் ,உங்கள கூப்பிடுறாங்க என்றார் பதஷ்டமாக .விரைந்து போனோம் .பெயரை கேட்ட பிரசவ உதவியாளர் அந்த பெண், ஒரு சிசுவை கையில் ஏந்தி கொண்டு வர ,எனக்கு கண்ணீர் வராத குறை ஆனால் பாட்டி ஆனந்த அழுகையோடு அந்த சிசுவை  வாங்கி பார்த்து விட்டு ,ஏதோ சோதித்து விட்டு திருப்பி கொடுத்து விட்டு சிசுவை காட்டிய அந்த பெண்ணுக்கு பணம் தர சொன்னார்கள் .அந்த சயத்தில் எவ்வளவு தந்தேன் என்பதை நான் அறியேன் பராபரமே !


கட்டி கொடுக்கற அவஸ்த்தை !!
                  பாட்டி வெளியே வந்த கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்ன வார்த்தை, நான் வேண்டாத கடவுள் இல்லை நல்லபடியா ஆம்பள பிள்ளையே பிறந்துருச்சு .காசு கொடுங்க  என் மகளிடம் மொதல்ல சொல்லனும் என்று கேட்டார்கள் .எந்த பிள்ளையா இருந்தா என்ன என்றேன் .அது சரி உங்களுக்கு என்ன தெரியும் நீங்களே காதல் கல்யாணம், இன்னொன்னு பொம்பள பிள்ளையா பிறந்து அதை கட்டி கொடுக்கற அவஸ்த்தை வரணுமா ? என்றார்கள் .இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் பெண்கள் தினம் வெறும் பண்டிகை தினமாக மட்டுமே இருக்குமோ, தெரியவில்லை ?

கடவுளுக்கு  எங்களால் எத்தனை சிரமம் .....?

                         யோசித்து கொண்டே ...எங்கள் மீது அக்கறையுடன் மீண்டும் விசாரித்து போன அந்த பெயர் தெரியாத வேன் உரிமையாளருக்கு  முதன் முதலாக குழந்தை பிறந்த விசயத்தை போனின் சொன்னேன் ..அப்புறம் மெடிக்கல் நண்பர் பிறகு -  ஒவ்வொருவராக போனில் சொல்ல தொடங்கினேன்...

செவ்வாய், 5 மார்ச், 2013

சூரிய வணக்கத்திர்க்கு - ஒரு சூடான கேள்வி


          வழக்கம் போல இன்று பேசப்போவது சூரிய வணக்கம் பற்றியது .சில மாற்றங்களை அந்த நிகழ்சியில் செய்து பொலிவு பெற செய்தாலும்  அந்த நிகழ்சி பற்றிய கேள்விகள் நிறைய வருகிறது ...

         பொதுவாக ஒரு வரை பேட்டி காணும்போது அடிப்படைமரபில் தெரியாத விசயத்தை   அதை பற்றி தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் கேட்டு நமக்கு  புரியவைப்பது .அதை  நடிகை மற்றும் நடிகர்களாக இருப்பவர்களிடம் பேட்டி காணும்போது  மீறுவதாக உணர்கிறேன்.

               நேற்று காலை தலைவாசல் விஜய் அவர்களின் மகள் ஜெயவீணா பேட்டி ஒளிபரப்பபட்டது .நீச்சல் குளத்தின் இளவரசி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பெண் பல சாதனைகளை  இந்திய மற்றும் உலக  அளவிலும் பல சாதனைகளை  சமீபத்தில் துருக்கியின் - இஸ்தான்புல் நகரில் கடந்த உலகஅளவிலான போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார் .ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என்று தீவிரமாக பேசுகிறார்...


       இந்த மாதிரி தனி சாதனையாளர்கள் மற்றும் வித்தியாசமான பேட்டியை காலை நேரத்தில் பார்க்கும் போது நிறைய நல்ல விசயங்கள் , உத்வேகம் அனைத்து தரப்பினருக்கும் வரும்


                    அதை விட்டு விட்டு ஒரு நடிகரை அல்லது நடிகயையோ பேட்டி எடுக்கப்படும்போது கவர்ச்சி மட்டுமே பிரதானமாய் இருக்கிறது .காரணம் அவர்கள் உழைப்பு தனிப்பட்டது இல்லை அவர்களுக்காக ஒரு மேக்கப் மேன் ,ஒருகதை ,வசனம் ,அவர்களை அழகாக காட்டும் கேமரா மேன் உடை அலங்காரம் ,இவர்களை பயன்படுத்தினால் இந்த ஏரியா நல்லா போகும் என்று காசு போடும் தயாரிப்பாளர் ,இந்த கதைக்கு சரியானவர் என்று யோசித்த இயக்குனர் இத்தனை பேர் இருக்கும் போது அவர்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன சாத்திக்க போகிறார்கள்? அதுவும் சமீபத்தில் நடிகை ஓவியா பேட்டி பார்த்தேன் .அடேங்கப்பா !எனக்கு தமிழ் தெரியாது என்பதை மிக கௌரவமாக சொல்லிக்கொண்டு இருந்தார் .கணக்கே தன்க்கு வராது ,கோஎஜுக்கேசன் படிக்ககாததால் பெரிய இழப்பு என்ற கூடுதல் தகவல் வேறு ...இது எந்த அளவுக்கு தேவை?

யோசிக்க வேண்டும் சூரிய வணக்கமே..