வழக்கம் போல இன்று பேசப்போவது சூரிய வணக்கம் பற்றியது .சில மாற்றங்களை அந்த நிகழ்சியில் செய்து பொலிவு பெற செய்தாலும் அந்த நிகழ்சி பற்றிய கேள்விகள் நிறைய வருகிறது ...
பொதுவாக ஒரு வரை பேட்டி காணும்போது அடிப்படைமரபில் தெரியாத விசயத்தை அதை பற்றி தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் கேட்டு நமக்கு புரியவைப்பது .அதை நடிகை மற்றும் நடிகர்களாக இருப்பவர்களிடம் பேட்டி காணும்போது மீறுவதாக உணர்கிறேன்.
நேற்று காலை தலைவாசல் விஜய் அவர்களின் மகள் ஜெயவீணா பேட்டி ஒளிபரப்பபட்டது .நீச்சல் குளத்தின் இளவரசி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பெண் பல சாதனைகளை இந்திய மற்றும் உலக அளவிலும் பல சாதனைகளை சமீபத்தில் துருக்கியின் - இஸ்தான்புல் நகரில் கடந்த உலகஅளவிலான போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார் .ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என்று தீவிரமாக பேசுகிறார்...
இந்த மாதிரி தனி சாதனையாளர்கள் மற்றும் வித்தியாசமான பேட்டியை காலை நேரத்தில் பார்க்கும் போது நிறைய நல்ல விசயங்கள் , உத்வேகம் அனைத்து தரப்பினருக்கும் வரும்
அதை விட்டு விட்டு ஒரு நடிகரை அல்லது நடிகயையோ பேட்டி எடுக்கப்படும்போது கவர்ச்சி மட்டுமே பிரதானமாய் இருக்கிறது .காரணம் அவர்கள் உழைப்பு தனிப்பட்டது இல்லை அவர்களுக்காக ஒரு மேக்கப் மேன் ,ஒருகதை ,வசனம் ,அவர்களை அழகாக காட்டும் கேமரா மேன் உடை அலங்காரம் ,இவர்களை பயன்படுத்தினால் இந்த ஏரியா நல்லா போகும் என்று காசு போடும் தயாரிப்பாளர் ,இந்த கதைக்கு சரியானவர் என்று யோசித்த இயக்குனர் இத்தனை பேர் இருக்கும் போது அவர்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன சாத்திக்க போகிறார்கள்? அதுவும் சமீபத்தில் நடிகை ஓவியா பேட்டி பார்த்தேன் .அடேங்கப்பா !எனக்கு தமிழ் தெரியாது என்பதை மிக கௌரவமாக சொல்லிக்கொண்டு இருந்தார் .கணக்கே தன்க்கு வராது ,கோஎஜுக்கேசன் படிக்ககாததால் பெரிய இழப்பு என்ற கூடுதல் தகவல் வேறு ...இது எந்த அளவுக்கு தேவை?
யோசிக்க வேண்டும் சூரிய வணக்கமே..
நீங்கள் பார்ப்பதால் சொல்லி விட்டீர்கள்... இங்கு காலை ஆறு மணிக்கே மின்வெட்டு...!!
பதிலளிநீக்கு