காதலில் தோற்ற பிறகு..1
( காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . )
காதலில் தோற்ற பிறகு..2

தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!
இந்த விசயத்தை எழுதும்போது வழக்கம் போல ஒரு கேள்வி வந்தது. காதல் தோல்வி ஆணுக்கு மட்டும்தானா இங்கு பேசிக்கொண்டு இருக்கிறோம்?.இல்லையே .தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!.அந்த வலி எப்படி போகிறது அல்லது போகலாம் என்பது மட்டுமே இங்கு விசயம்.இதில் முக்கியம் என்னவென்றால் காதல் அழகியது என்பதை யாரும் மறுக்கவில்லை.அதை அறிமுகப்படுத்த ஆயிரம் வழிகள் கைகாட்ட காத்து இருக்கிறது .ஆனால் தோல்வி என்ற உணர்வு வந்த பின்னால் நடக்கும் சகல விசயமுமே நமக்கு எதிரே கட்டம் கட்டி நிற்பது போல ஒரு பிரம்மை .எந்த சானல் திருப்பினாலும் சோக பாடலையே பார்ப்பதாக ஒரு கனவு சுழல்கிறது .அந்த சோக சுகமே தனி என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள் .யானை மாதிரி காதல்.யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் .காதல் இருக்குபோதும் சுகம் - பிரிந்த அல்லது தோல்விக்கு பின் வேறு சுகம்
.
காதல் என்பது உணர்வு
கடவுள் கூட காதலிடம் தோற்று போய்விடுகிறார் .ஆமாம் அவர் எழுதிய ஆயுள் ரேகை சில காதல் தோல்விகளில் காதலர்கள் மரணத்தை சந்திக்கும்போது தோற்று போகிறதே ! இங்கு நாம் பேச விரும்புவது வாழ்வை நேசிக்க வைக்கும் காதலை.’என்ன சத்தம் இந்த நேரம்’ என்று கைகோர்த்து தற்கொலைக்கு போகும் பாலசந்தர் பாணி இல்லை .காதல் என்பது உணர்வு .அது நமக்குள் நம்மை காதலிக்க தூண்டும் அற்புதம் .
ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை
நாம் எழுதிய உரைநடை உடையும்போது அதர்க்கு கவிதை என்று வாதிக்க செய்வது .நம்மை நம் மனதின் மெல்லிய இசைக்கு சரணம் , பல்லவியை துணைக்கு அழைக்காமல் பார்வை நரம்புக்களை பின்னி தனி ஆவர்த்தனம் பண்ணும் தனி உலகம் .பீத்தோவானின் I Love to Listen To புதிதாய் ஒரு அர்த்தம் சொல்லும் இசை .நீதானே என் பொன்வசந்தம் - சமந்தா பார்வை ஆயிரம் பேர் கூடி படம் பார்க்கும் தியேட்டரில் எனக்கு மட்டுமே ஏதோ ஒரு விசயம் அல்லது ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை .இத்தனை இருக்கும் இன்னும்கூட காதல் தோல்வி எனும்போது மட்டும் தவறான அர்த்தம் கொடுத்துவிடுமா?
நான் இன்னும் இருக்கிறேனே ...
என்னை எனக்கு சொல்லும் காதல் , என்னை கொல்லும் தன்மையுடையதா ...சே சே .இருக்கவே முடியாது .எப்படியோ தோல்வி வந்துவிட்டது .இப்போ நான் என்ன செய்ய ? இந்த இடத்தில் நாம் நின்றுகொண்டு இருக்கிறோம்..தோல்வியை அல்லது அந்த மனப்பான்மையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் .அவர் அல்லது அவள் இல்லை என்றபோது என் வாழ்கை சூன்யமா ? இந்த முறை இந்த தோல்வி என் மொத்த வாழ்வையுமா தீர்மானித்துவிடுகிறது ? இது ஒரு அனுபவம் .அதிலும் என் மனசின் முகவைரியை எனக்கு சொல்லி கொடுத்த அற்புத அனுபவம் .இதை இழக்க கூடாது .அந்த குறிப்பிட்ட நபர் என் வ்ழியிலிருந்து விலகிவிட்டதால் என் பயனம் நின்றுவிடவில்லயே .இதோ நான் இன்னும் இருக்கிறேனே .
ஏதாவது ஒன்றில்...
ஏதாவது ஒன்றில்...
அடுத்து என்ன என்பதே என் நிலை .சரி என் கனக்கும் மனதை திருப்பவேண்டுமே .படிக்கலாமா ? அது ஏற்கனவே படிக்கும் பழக்கம் இருந்தால் நல்லது .இல்லாவிட்டால் புத்தகம் மட்டுமே கையில் இருக்கும் நினைவுகள் ஏதோ ஒரு வரி பழைய நினைவுகளை தொட்டு விட்டால் பின்னாலே போய் விட கூடும்.காதல் இல்லாத துப்பறியும் நாவல்கள் நல்லது .அது ஆங்கிலமாக இருந்தாலும் .அதை விட நூலகம் போய் படிப்பது ,புதிதாய் புத்தகம் தேடுவது நல்லது .
பார்வைகள் துரத்துவது போல ..
அல்லது வேறு ஏதேனும் ஊருக்கு போய்விடலாம? இந்த ஊரில் இருந்தால் அவள் மட்டும்தான் பார்க்குபோது அவளாகவோ அல்லது அவனாகவோதெரிவார்கள் ..மத்த எந்த ஊர்போனாலும் பார்ப்பவரெல்லாம் அவளாகவோ அவனாகவோ தெரியலாம் .எங்கிருந்தோ நம்மை சதா சில பார்வைகள் துரத்துவது போல தோன்றும்.அது ஆபத்து .
நல்ல திரைப்படம் ? அது கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும் அங்கும் புத்தகத்தில் வரும் ஆபத்து இருக்கிறது .
இசை...
இசை பற்றி கேட்கும் பழக்கம் கொஞ்சம் காயா கனியா என்ற இரு நிலை .இசை பற்றி தெரியாமல் அதில் ஆர்வம் என்பதை தாண்டி தேடல் என்பது இருக்கும் பட்சத்தில் இசை ஒரு மருந்து .ஆனால் அந்த லயம் வேறு எதிலும் ஈடுபடவிடாமல் செய்யும் ஆபத்து இருக்கிறது .
மேலை நாடுகளில் குறிப்பாக ஹெவி மெட்டல் இசையைக் கேட்கும் போது எனது மன அழுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்ற நம்ப்பிகை இருக்கிறது . மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றூ நம்புகிறார்கள்.அது நமக்கு அந்த சாத்தியம் இல்லை .
பார்க்காத நட்பு
வேலையிருப்பவர்கள் அடுத்தவகள் வேலையை சேர்த்து எடுத்து பார்ப்பார்கள்.இது ஆறுதலான விசயம்.ஆனால் வீட்டுக்கு வந்தால் அதே தனிமை துரத்துமே .எனவே தனிமை தவிர்ப்பது மிக முக்கியமான் விசயம்.அது காதலின் தம்பி தங்கை மாதிரி.மீண்டும் குழப்பம் கூடிவிடும்.
நம் இந்த விசயம் தெரியாத நட்புக்களை தேடிப்போவது நல்ல விசயம் .அதிலும் வெகுநாளாய் விட்டு போன பார்க்காத நட்பு மிக நல்லது.முக்கியமாய் நம்மை தவறாக புரிந்து கொண்ட நட்பை மதிப்பது நம்மை நாம் மாற்றி கொண்டு இருக்கும் மனோபாவத்தை உடனே ஏற்படுத்தும்.
புதிதாய் ஏதேனும்..
புதிதாய் ஏதேனும்..
. நாம் உணர்வுகளுக்கு தகுந்தார்போல படம் வரைவது , ஃபோட்டோ எடுப்பது போன்ற சமாசாரங்கள் நல்லது .ஆனால் கவிதை , கதை - மூச் ,அந்த பக்கம் வேண்டவே ,வேண்டாம் ,புதிதாய் ஏதேனும் மொழியறிவது மிக நல்லது .கம்யூட்டரில் சாஃப்ட் வேர் , ஹார்டுவேர் படிப்பது நல்லது .( ஏற்கனவே தெரியாவிட்டால் ) மேலும் நீச்சல் போன்ற உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற விசயம் மிகவும் நல்லது
வீட்டு வளர்ப்பு கிளிகள் ,பறவைகள் ,மீன்கள்,பிராணிகளுடன் பழகுவது , தாவரங்கள் வளர்ப்பது நல்லது.
நமது வாகனங்களை அதிகம் பராமரிப்பது சுத்தமாக வைத்து இருப்பது ,அதனுடன் மதித்து உரையாடுவது நல்லது - கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா ? செய்து பாருங்களேன் மாற்றம் தெரியும் .
இது வேண்டாம் .
முப்பது வயதிர்க்கு உட்பட்டவர்கள் பக்திக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஆபத்து .அங்கும் மனரீதியாய் தனிமை மீண்டும் விட்ட இடத்திற்க்கு அழைத்து சென்றுவிடும் .அது மட்டுமல்ல கோவில் , பொது இடம் ,நாம் பார்க்க தவிர்க்க விரும்புபவரை முன் நிறுத்தி விடாலாமே .கொஞச நாள் இது வேண்டாம் .
குடும்பத்துடன்...
முக்கியமாக இம்மாதிரி தோல்விகளின் வெளிப்பாடு ஒரு வித விரக்தி மனோபாவத்தை தரும் .ஏதோ நம் தோல்விக்கு ஒரு அங்கீகாரம் ஆறுதலாக அமைய வேண்டும் என்ற மனப்பான்மை கீழ் கண்ட முயற்சி நல்ல பலன் தரும்.
குடும்பத்துடன் இருப்பவர்கள் ( பாவமாக நம்மை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) தங்கை ,அக்கா ,அண்ணன் , தம்பி அம்மா , அப்பா இவர்களோடு அதிகம் உதவி செய்து பழகும்போது சட்டெனெ உலகமே மாறிப்போன சந்தோசம் வரும் .இது எல்லாவற்றிலும் நல்லது .கொஞ்சம் நடிப்பதாய் ( நமக்கே )தோணலாம் .ஆனால் அது நல்லது .இன்னும் கூடுதலாய் .வீட்டை பராமரிப்பது , சின்ன வேலைகளை தெடிப்பெறுவது இந்த மாதிரி சின்ன விசயங்கள் ரொம்பவுமே நல்லது .நம் வீட்டு ஆளே நமக்கு புதிதாய் தெரிவார்கள் அப்போது .
தாயை வணங்கும் பழக்கம்..
நம் தேசத்தில் இப்போதெல்லாம் இந்த அவசியம் இல்லை .மேலை நாடுகளில் பின் பற்றி ஒருகாதல் போனால் இன்னொரு காதல் , அதிக குடி , வன்முறைகள் , கற்பழிப்புகள் ,என நிரம்பி வழிகிறார்கள் நீ பேசும் சைவ வழிமுறைகள் வழக்கொளிந்து போய் விட்டது என சொல்லாம் ஆனால் தாயை வணங்கும் பழக்கம் இந்த தேசத்தில் எப்போது போகுமோ அப்போது வேண்டுமானால் இத விசயம் வழக்கொளிந்து போகலாம் .மேலை நாட்டு பழக்க வழகத்தை கொண்டாடும் அவர்கள் தன்னுடய பிற்காலங்களில் தனக்கு நடக்கும் அத்தனைக்கும் வேறு யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டு அலைவார்கள்.
ஒரு விலாசம் அவ்வளவே !
இங்கு நான் இதை ஒரு வழி என்று சொல்லவில்லை . ஒரு விலாசம் அவ்வளவே ! இந்த தேசத்து காதலர்கள் முதல் காதலில் தோற்றவர்கள் அல்லது தொலைத்தவர்களை பற்றி பேச ஆசைப்பட்டேன் அவ்வளவுதான் .
முதல் பயனம்..
காதலை கொண்டாட ஆயிரம் வ்ழிகள் காட்டப்படுகின்றன இங்கு .ஆனால் வலிகளை சுமந்து ,நடமாடும் கோடிக்கணக்கான தாஜ்மகால்களை நேசிக்கும் ஒரு அடையாளாமாக என்னை காட்டி கொள்ள என் முதல் பயனம் இதுவே !

அருமை... காதல் தோல்வி குறித்து பேசவும், கவிதை எழுதி அழவும், அதற்கு கைதட்டவும் மிகப்பெரிய கூட்டம் உள்ளது. ஆனால் அந்த தோல்வியை கடந்துசெல்ல யாரும் தயாரில்லை... இந்த கட்டுரை அவர்களுக்கு ஒரு கைகொடுக்கும். தோழ்மையாக தோல்வியிலிருந்து தப்பிக்க...
பதிலளிநீக்குதொடர்க!