சனி, 13 அக்டோபர், 2012

உதவி ஆய்வாளரின்- பணி ஓய்வு


                           சென்ற ஞாயிறு எனக்கு பழக்கமான ஒரு உதவி ஆய்வாளரின் ( Sup Inspector ) அவர்களின் பணி ஓய்வு ( Retirement ) விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் .சுமார் 34 வருடம் பணியிலிருந்து இருக்கிறார் .அவருடன் ஒரு நகை காணமால் போன வழக்கில் திரும்ப பெரும் தேடலில் மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன் .அந்த பழக்கத்தில் அவரின் பணி  ஒய்வு விழாவுக்கு அழைத்திருந்தார் .



                      அவருடன் இருந்த பழகிய நாட்களில் அவரின் குற்றவாளிகளின் குற்றம் முறைகளை எந்த செக்சனில் பதியலாம் என்பதில் அத்துப்படியனவர் .ஒரு குற்றம் காவல்துறையால் முதல் முறை பதியப்படும்போது தவறான முறையில் பதியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு எளிதாக எதிர் தரப்பு வாதத்தில் தோற்று போக்கும் அபாயம் இருக்கிறது .எனவே இதில் அவரின் அனுபவம் பல குற்ற முறைகளை சந்தித்த அனுபவத்தில் அறிந்துகொண்டது .தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது .அவர் வேலை பார்த்த இடங்களில் உள்ள FIR போடுவது சம்பந்தமாக இன்னும் அவருடன் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் .


                             விழாவுக்கு தலைமை தாங்க வந்தவர் திருப்பூரின் டி .எஸ்.பி. திரு. ராஜாராம் .அவர் பயிற்சியில் சேர்ந்த முதலாக அவரை அறிவதாகவும் திறமையை பாராட்டி பேசினார் .விழா முடிந்தவுடன் கிளம்பாமல் இருந்து மிக சாதாரணமாக கலந்து பேசி உணவருந்திவிட்டு DSP கிளம்பியது ஆச்சர்யாமாக இருந்தது.மிகஎளிமையான மனிதர் .                                                                                                               பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,பலரின் வேண்டுகோளும் அவரிடம் வைத்தார்கள் .அதாவது இனியும் உங்களிடம் தொடர்புகொள்வோம் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை

                             ஆனால் ஒருவராவது அவரின் பணிபுரிய ஆரம்பித்த ஆரம்பம் முதல் அவரின் வேலை பார்த்த இடம் ,அவரின் சிறப்பான அனுபவம் பற்றி எடுத்து பேசவில்லை . அதிலும் எங்கெல்லாம் அவர் பணிபுரிந்தார் என்ற தகவல் கூட சொல்லவில்லை என்பது எனக்கு  ஏன்  என புரியவில்லை .!


                                  .  விழா நாயகர் அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே என கேட்டபோது அவர்களுக்கு என் பணியிலிருக்கும் பக்கம் கூட வரமாட்டார்கள் எனும்போது ,அவரின் ஆதங்கம்  வெளிப்பட்டது .      

  அடுத்து தனது மகனின் திருமணத்திற்க்கு பிறகு ஏதாவது பணியில் சேரவேண்டும் என தெரிவித்தார் .அவரிடம் விடை பெற்று வரும்போது எனக்கு பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது .

செவ்வாய், 9 அக்டோபர், 2012

Hamara bajaj caliber


                                     எனது 1999 வருட தயாரிப்பான Bajaj Caliber  தோழனை  பிரியும் நேரம் வந்து விட்டது .இனியும் எனக்காக அவன் உழைத்து தேய்ந்தது போதும் என்றும் , இனியும் என்னோடு மாதம் 1600 கி.மீ.ஓடமுடியாத நிலை  அவனுடயதாகிவிட்டது .இனி செலவழித்து பிரோயோசனம் இல்லை என்று மெக்கானிக் கையை  விரிக்க , புதிய வண்டிக்கு மொத்தமும் கட்ட வாய்ப்பு குறைவு .பாதி மனதுடன் Hero Show Room - Exchange  Offer கேட்டதற்க்கு மிக அனாயசமாக சும்மா ஐந்து ரூபாய்க்கு( 5000) எடுத்தக்கலாம் அதிலும் TN 58 வண்டி எடுப்பதில்லை என்று வேண்டா வெறுப்பாய் சொன்னதை கேட்டதும் ,எனக்கு எங்கோ தூக்கி எறிந்தது போல இருந்தது .

                                     சரி Bajai Show Room போனேன் .அங்கும் இதே போல பேச இனி எனக்கு இதுவே போதும் என்று போய்கொண்டு இருந்தபோது , Dream Yuga குறுக்கிட்டது .செய்தி பேப்பரில் பார்த்து நேரில் விலையை விசாரித்தால் எனக்கும் அதற்கும் உள்ள தூரம் பல மைல்  என விலகிவிட்டேன்

                            
   .நண்பர் ஒருவருடன் வேறு வேலையாய் போய்க்கொண்டு இருந்தபோது ,TVS Show Room போனோம் .உங்கள் பழைய  வண்டி என்றார்கள் ,மன்னிக்கவும் அதுபற்றி பேசவேண்டாம் என்றேன் .காரணம் கேட்டார்கள் .நீங்கள் கேட்பது எனக்கு கோபம் வரலாம் என்று சொல்லியும் அந்த பெண் விடுவதாக  இல்லை .வண்டி மதிப்பிடும் ஒருவரை ஓட்டி பார்க்க சொல்லி என்னிடம் வந்து எவ்வளவு தருவீர்கள் என்றார்கள் .எனக்கு அதில் ஒரு நேர்மை இருப்பதாக பட்டது .சொன்னேன் .அதை அப்படியே ஒத்துக்கொண்டார்கள் .எனக்கு ஆச்சர்யம் .

                             என் சாமான்ய புத்தி சில கேள்வி கேட்டது .அப்படியானால் Extra Fittings , Registration Fees ,Insurance என்று வேறுபக்கம் தாக்குவார்களோ ?. கேட்டுவிட்டேன் .இல்லை பயப்படவேண்டாம் . அப்படியேதும் இல்லை என்றார்கள் .சரி  வண்டி  தேர்வு செய்ய போகிறீர்கள் என்றதும் இப்போது புது தொழில்நுட்பத்துடன் களம்  இறங்கி இருக்கும் Sport கேட்டேன் .ஐம்பதாயிரம் வரும் என்றார்கள் .என் பழைய வண்டியின் Original R.C Book கேட்டார்கள்


,கொடுத்துவிட்டு ,அடுத்தநாள் என்னுடை ஆஸ்த்தான  மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு வண்டி தேர்வு செய்ய போனால் அவர் Sports  வேண்டாம் .உங்கள் வேலைக்கும் ,மிதமான வேகத்திற்க்கும் ,2012 Star City”. TVS Star City
போதும் என்று சொல்லி  அதிலும் CVTI ES தொழில்நுட்பம் அருமையாக   பேசப்படுகிறதே ,என்று முடிவெடுத்தோம் .

                                  கடந்த 28 - 09- 2012 எடுக்க போனோம் . கீழ் தளத்தில் Extra Fittings மாட்டிக்கொண்டு இருக்கும்போது ,Invoice தயாராய் கொண்டுஇருந்தது .அந்த தருணம் வந்தது . இதுநாள்வரை என்னையும் ,என் குடும்பத்தையும் சுமந்து காத்து வந்த Bajaj Caliber இன்று இப்போது என்னை விட்டு போக போகிறது .என்னிடம் அந்த வண்டி வந்து சுமார் ஆறு வருடம் மட்டும்தான் ஆகி இருக்கும் .ஆனால்  வீட்டில் உள்ளவர்கள் நம்மிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி மேலே சென்று மற்றவர்களிடம் என்னை காத்துவந்த hamara bajaj caliber என்னை விட்டு போக போகிறது .

                                   இந்த வண்டியை 2006 ல் வாங்கியபோது ,முதல் முறையாக சொந்தருக்கு ஊருககு 125 கி.மீ.தொலைவிலுள்ள திண்டுக்கல் போய்விட்டு` பல்லடம் வழியாக திருப்பூர்  திரும்பும் போது பெட்ரோல் பங்கிற்கு  சுமார் 9 கி.மீ இருக்கும் நிலையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது .வண்டியை  தள்ளிக்கொண்டு குடும்பமே இருட்டில் நடந்து கொண்டு இருந்த போது அந்த வழியே குடும்பத்துடன் வந்த ஒரு ஆம்னி நின்று ,அவர்கள் அனைவரும் இறங்கிகொண்டு என்னுடன் பெட்ரோல் பங்க வந்து பெட்ரோல் வாங்கி என் வண்டியில் ஊற்றிய பின்னரே கிளம்பி போனார்கள் ,அடுத்தமுறை பல்லடம் - சேட பாளையம் வழியாக மாத பலசரக்கு பொருள் வாங்கி விட்டு குடும்பத்துடன் வரும் வழியில் இரவு 10 மணிக்கு பஞ்சர் .அதுவும் பல கி.மீ தள்ளும் நிலை ஆனால் அங்கிருந்த ஒருவர் தன்னுடைய TVS 50 எடுத்துக்கொண்டு என்னுடன் பல இடம் பஞ்சர் பார்க்க முயற்சி செய்தார் .அதிலும் அவர் இரவு வேலை பார்ப்பவர் .உணவுக்கு -ஹோட்டல் வந்தவர் .முடிவில் அவர் வேலை பார்க்கும் கம்பனியில் பஞ்சர் வண்டியை  விட்டு விட்டு அவர் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு போனோம் .இன்னும் பல ..சோதனைகளை கடந்து நின்ற அந்த வண்டியை பிரிந்து போக போகிறேன் ..


                     என் மெக்கானிக்கிடம் முன்னரே சொல்லிவிட்டதால் அவர் Show Room விட்டு வெளியே நின்றுகொண்டார் .நான் அழுதுவிடுவேன் என்பது தெரியும் ஆனால் அந்த அளவுக்கு போகும் நிலை வரும் என்று தெரியாது .என்னிடம் அந்த Invice கொடுக்கவந்த பெண் பயந்து போய்விட்டது .என்ன சார் ஆச்சு ? என்ற போது  அப்போதும் என்னிடம் பதிலுக்கு அழுகை கலந்து என் பழைய வண்டி என்றேன் ,அது மட்டுமே  வந்தது.அந்த  பெண் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது .ஆனாலும் என்னை சமாதானப் படுத்தியது .சார் உங்கள் பழைய வண்டி ஒரு புதுவண்டி தந்துதானே போய்  இருக்கிறது .வருத்தபாடாதிங்க என்றது .

                      நான் எழுந்து ஓரமாக நின்று கொண்டு முடிந்தவரை அழுதேன் .என்னை போல சாதாரண வர்க்கம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை .

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சொந்த வீட்டிற்கு வழி ...


                              ஏதோ  ஆன்மீக தலைப்பை போல இருந்தாலும் இது ஒரு சுய அவஸ்தை  எனக்கு .பலவருடம் இந்த அவஸ்த்தையை சுமந்தாலும் பாரம் மட்டும் குறையவில்லை .ஒரு சிலருக்கு ஒருமுறை சென்ற வழியை வாழ்நாளில் எப்போது மறுமுறை சென்றாலும் ஞாபகம் வைத்துகொள்ளும் திறமையும் ,தந்திரமும் தெரியும் .நான் அப்படியில்லை .பூஜ்யம் .அது பற்றித்தான் இந்த பகுதி

                           மதுரை  R.I வகுப்பு இரண்டு மாதத்திற்க்கு பத்து  நாட்கள் நடக்கும் போதெல்லாம் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் வரமாட்டார்கள் .இதை முதல் முறை புரிந்து கொண்டு ,பாண்டிச்சேரியில் பணிபுரியும் நண்பரிடம் சொன்னபோது அப்படியானால் முதல் வகுப்புக்கு போ ,வருகை பதிவேடும் எட்டு நாட்களுக்கு ரூபாய் 80 /- கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறிவா என்று "நல்ல"அறிவுரை தந்தார் .வருகை பதிவேடு இல்லாவிட்டால் தொழில் பழகுனருக்கான இறுதி தேர்வும் எழுத முடியாது ,நான் தொ.ப.வேலை செய்யும் பழனி ராணிமங்கம்மாள் போக்குவரத்தில் அந்த நாட்களுக்கு உறிய  சம்பளமும் பெற முடியாது ( சம்பளம் மாதம் 750 /-)


                                                    அதன்படி நானும் திண்டுக்கல் -திருச்சி -விழுப்புரம் போனேன் .அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிச்சேரி என்ற பெயரில் வரும் வண்டிக்காக காத்திருந்தேன் .அப்போது செல் வசதி இல்லை என்பதால் நான்குமுறை தொலைபேசியில் காத்திருப்பதாக அவருக்கு சொன்னேன்  .ஒன்றரை மணிநேரம் காத்திருந்து நண்பரிடம் போய்  சேர்ந்ததும் நண்பர் கேட்டார் .நீ போன் செய்தபிறகு மூன்று வண்டி வந்ததே ஏன் வரவில்லை என்றபோதுதான் தெரிந்தது பாண்டி ,புதுவை ,புதுச்சேரி என்ற மேலும் பல பெயர்கள் இருப்பதாக .போச்சா , ஆரம்பமே இப்படியா ?

                                          நண்பரின் வேளைப்படி சில சமயம் காலையில் சென்றுவிட்டால் மாலைதான் திரும்புவார் .அதுவரை நான் இளையராஜாவின் How to Name It ,மற்றும்  Mozart, Beethoven என்று அப்போது சோனி வாக்மேனில் கேட்டுக்கொண்டு சொக்கி கிடப்பேன் .

அதிலும் நண்பர் சிம்பொனி கேட்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு  உயரமான நீண்ட, பரந்த இடத்தில புல் வெளியில்  நடப்பது போல கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டும் என்பார் .அதுவும் Breave Heart படத்தில் மெல்கிப்சன் அந்த திமிரான குதிரையில் ஒரு உயர்ந்த புல்வெளிக்கு குதிரையை செலுத்துவதுபோல் காட்சி வரும் ,அதை உதாரணமாக சொல்வார் .என்னால் அப்படி காட்சியுடன் உணர முடியவில்லை கடைசிவரை !( அப்படிதான் ரசிக்கவேண்டும் என்று பலநாள் முட்டாள்தனமாய் நம்பியிருக்கேன் -   என்பது வேறு விசயம் )

                                               ஒருநாள் நண்பர் வெகு காலையில் போனதால் நல்ல பசி .மாலை வீட்டை விட்டு வெளியே வந்தேன் .புதுவைக்குள் -விழுப்புரம் வழியாக நுழையும் போது ,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின்  சிலைக்கு அடுத்து (கடலூர் சாலை செல்லும் வழியில் ) குண்டு சாலையிலிருந்து மெயின் வந்து காலை  மதியம் இரண்டுக்கும் சேர்த்து உணவு உண்டபின் வரும் வழி தொலைந்து போய்விட்டது .நானும் எந்த இடத்தில திரும்ப வேண்டும் என பலமுறை நடந்தும் ,அந்த வீதி கிடைத்தபாடில்லை .வெறுத்துபோய் மீண்டும் மெயின்  ரோடு வந்த பொது .சுத்தமாக் வெறுத்துப்போன நிலையில் ஒரு யோசனை பளிச்சிட்டது .எப்போதோ வேறு ஒரு நண்பரின் சகோதரர்  அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக பேசிக்கொண்டது ஞாபகம் வந்தது .

                                                       நல்லவேளை மெயின் ரோட்டில் இருந்ததால் தயங்கி தயங்கி கண்டுபிடித்துவிட்டேன் .நேரிடையாய் கேட்டால் மானம் போய்விடுமே அதனால் மெல்ல வேறு விசயத்தை பேசிக்கொண்டு நடுவே அவரிடம் நண்பரின் வீட்டுக்கு எது ஈசியா போகலாம் என்று ஏதோ G .K  கேள்விபோல கேட்க்க அவர் வழி  சொல்ல மெல்ல வந்து சேர்ந்தேன் .
இன்றும் ,ஐந்து முறை திருப்பூரில் உள்ள சொந்தகார வீட்டுக்கு - நான் தேடி அலைவது வழக்கம் கடைசியில் செல்லில் அழைத்து கூப்பிட்ட பிறகு அவர்கள் வந்துதான் அழைத்து செல்கிறார்கள்  எப்படி ?தெரிந்து போச்சே !
                                                 
                                         மறதி நோய்  ,ஒருவேளை மட்டும் பல்துலக்குபவர்களுக்கு வருவதாக  http://www.eegarai.net/t88963-3 பதிவில் படித்தேன் .அப்படியானால் சில ஆட்கள் பல்லே  விளக்குவதில்லை  .அவர்கள் மறந்து போய் யார் வீட்டுக்கு போகிறார்கள்  காலையில் யார் வீட்டிளிருந்து வருகிறார்கள் ? யோசிக்கவேண்டும் .


புதன், 12 செப்டம்பர், 2012

காதல் ஜாதகம்

               எனது நண்பரின்- நண்பர் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்போது ,ஒரு நல்ல ஜோசியர் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார் .ஆனால் அடிக்கடி இந்த மாதிரி கேள்விகளை நான் சந்திக்கும்போது எனக்குள் ஒரு அவஸ்தையும் ,கோபமும் பொங்கும் .காரணம் "நல்ல "என்ற வார்த்தை யார் பயன்படுத்தலாம் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி சாலமன் பாப்பையா அவர்களை பார்க்கும்போது நிச்சயம் கேட்கவேண்டும் .

                            என்னை  பொறுத்தவரையில் நிறைய பேர் நாம் எதாக இருந்தாலும்  அளவுகோலை கட்டிக்கொண்டு அழுவதாக தோன்றுகிறது .நல்ல ஜோசியரை ஆய்வு செய்யும் அறிவு இருந்தால் நாம் ஏன் அவருக்கு காசு கொடுத்து வரிசையில் காத்து கொண்டு இருக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இங்கு நாம் கொண்டுபோகும் ஜாதகத்தில் நாம் பிறந்த நேரம் சரியான நேரம் என்பதுவும் (கம்யூட்டரில் கணித்தாலும் இது அவசியமே ) ,அதை கணித்த ஜோதிடர் சரியாக அவருக்கு சந்திராஷ்டமம் இல்லாத காலத்தில் கணித்தாரா என்பது போன்ற விசயங்களை  உறுதி செய்யபடாத நமக்கு நல்ல ஜோசியரை இனம் கண்டுகொள்ள ஏதாவது புது Scale இருக்கா ? அல்லது நமக்கு சொல்லும் ஜோசியர் மனோதத்துவ முறையில் எட்டுக்கு உரியவன் திசை நடக்கிறது ஆனாலும் உங்கள் திறமையால் நீங்கள் வென்று விடுவீர்கள் என்று சொன்னால் மட்டும்தான் நல்ல ஜோசியரா ?( இத்தனையும் மனசுக்குள் யுத்தம் செய்தாலும் பொறுத்துக்கொண்டேன் கொண்டேன் ) ஆனால் நட்பில் அதுவும் நல்ல நண்பரின் நண்பர் எதற்கு என்று பொறுமையாக தெரியும் என்றேன் .

                        அப்புறம்தான் தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிந்தது .அவர் காதல் கொண்டு இருகிறாராம் .அந்த பெண்ணின் ஜாதகத்தை இவர் ஜாதகத்துக்கு ஏற்றது போல தயார் செய்து தர வேண்டுமாம் (எப்படித்தான் என்னை கண்டு பிடிப்பார்களோ தெரியவில்லை ) எனக்கு உடன் பாடு இல்லை .மெல்ல அவரைப்பார்பதை தவிர்த்து வந்தேன் .காரணம் காதல் செய்யும்போது இருக்கும் அந்த பந்தா அப்புறம் வீட்டை கண்டவுடன் எப்படி வாலை சுருட்டி கொள்ளுமோ ?
பொதுவாக பொருத்தம் பார்க்க ..
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.(விரிவான விபரங்களுக்கு - http://www.livingextra.com/2011/05/020.html இந்த தொடுப்பில் தொடரவும் ) இத்தனையிலும்  எட்டாவது வஸ்யப்-பொருத்தம் மட்டுமே கூட இருந்தாலே ஜாதகத்தை கூட மாற்றும் சக்தி வந்து விடுகிறது .
                       கடைசியில் அவருக்கு ஒத்துவந்த ஒருவரிடம் ஒரு பொத்தமான ! ஜாதககட்டதை தயார் செய்துகொண்டு அவர்கள் குடுமப் ஜோதிடரை சந்திக்க அவர்குடும்பத்துடன்  உள்ளே நுழைந்தவுடன் அப்போதைய ஹோரையை பார்த்தவுடன் ஜாதகத்தை ஓரங்கட்டிவிட்டு கைரேகை பார்த்திருக்கிறார் . அதில் உள்ள தோஷங்களை சொல்லி சில பரிகாரங்களை சொல்லி அனுப்பிவிட்டார் .

மீண்டும் (என கெட்ட நேரத்தில் ) ஒரு முறை அவரை பார்க்கும்போது.இதை சொல்லி விட்டு ஜாதகம் தயார் செய்த மெனக்கெட்டதை பெருமையாக சொன்னார் .எப்படியோ காதல் ஜெயித்து விட்டதாம்  !
                      நம் வீட்டில் உள்ளவர்கள் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை .ஆனால் பத்துக்கு ஒன்பது பொருத்தம் பார்த்து ,ஒரே ஒரு முக்கியமான பொருத்தம்   வஸ்யப்-பொருத்தம் இல்லாமல் எத்தனை பேர் இந்த சமூகத்திற்கும் ,பெற்ற குழந்தைகளுக்காகவும் ஒப்புக்கு கணவனாகவும் - மனைவியாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது காதலுக்கு ஜாதகத்தை தேடாமல் இனியாவது  விட்டுவிடுங்களேன் .

 ஒருவேளை ...இப்படியே போனால் காதல் ஜாதகம் இங்கு  தயார் செய்து தரப்படும் என்று விளம்பரத்தை பார்க்க நேரிடலாம் .

சனி, 25 ஆகஸ்ட், 2012

செக்ஸ் வைரஸ் வரமா ?


அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னிடம் இன்டர்நெட்டில் வரும் தகவல்களை பரிமாறுவதும் ,விசாரிப்பதும் வழக்கம் .இன்றைய நாளில் அறிவு கிணறாக தேட தேட அனுமார் வால் போல தேடல் நீண்டுகொண்டே போகிறது .
                                                              அதிலும்  இன்று நம் தமிழ் மக்கள் வலைபூவில் பதியும் விசயங்களின் அளவுக்கு முன்னாள்  நூலகங்கள் கைகட்டி நிற்கவேண்டும்  அவ்வளவு சிறப்பான இலவச தொகுப்புகள் .தேடித்துருவி மெனக்கெட்டு பதிகிறார்கள் .ஒரு புதிய விஷயம் பற்றி தெரிந்த  அன்றைய நாளின் மாலையே .இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்திலே .

                                                       இத்தனை இருந்தும் என்ன செய்வது திருப்பூரில் பதினான்கு வருடம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் சக அலுவலக தோழர் .ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு புதியவர் .ஒருநாள் ஒரு வெப் முகவரி கொண்டு கொண்டு வந்தார் .அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து தர சொன்னார் .அவருக்கு சுமார் 52 வயது .அவர் கணினியுடன் சுமார் பலவருடம் அனுபவம் உள்ளவர் ஆனால் இண்டர்நெட்டை பற்றி சற்றும் அறியாதவர்.

அவர்கொடுத்த முகவரி  alongporn .com என்று பெயர் இருந்ததால் எனக்கு அந்த முகவரி பெயரிலும் அவரின் வயதின் பெயரிலும் இருந்த நம்பிக்கையில் (அது மட்டுமல்ல நம்மையும் உதவி கேட்கிறார்களே என்ற சற்று கர்வம் இயல்புதானே ?) தொடுப்பை தொடர்ந்தாள் இப்போது அதிகம் பரவி இருக்கும் SHEMALE வகை வீடியோ தொகுப்பு அது .

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .(கர்வத்தின் பரிசு கிடைத்துவிட்டது ) அவரிடம் சொன்னேன் .சார் நாம் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்க தூண்டி வைரஸ் வரத்தை பெற்றுக்கொண்டால் நம் அலுவலக கம்ப்யூட்டர் (Lan Connection )முழுவதும் பரவி விடும் அப்புறம் ஒருநாள் எல்லா டேட்டாக்களும் புட்டுக்கும் என எடுத்து சொல்லி சமாளித்தேன் .எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்த பலரும் இப்படி ஆசையில் தேட போனபின்தான் நிறைய திறமையை வளர்த்துகொண்டார்கள் என்பது வேறு செய்தி .

மேலே நான் சொன்னபடி மாய்ந்து மாய்ந்து என்னை மாறி ஆட்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் தேடல் இன்னும் இப்படியே இருக்கே ? சலிக்காதா ?

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

கொஞ்சலை வீட்டில் வைத்துகொள்ளுங்கள் ..


மன்னிக்கவும் .தலைப்பு குழந்தைகளை பற்றி ..
எனது செல்ல புதல்வனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு செல்லுவது வழக்கம் .அதே போல மாலை பள்ளி விட்டபின் அழைத்து வருவதும் .தினமும் பல லாஜிக் இல்லாத விசயங்களை  பார்க்கிறேன்.

ஒன்று .
               பள்ளிக்கு அளித்து வரவேண்டிய பிள்ளையுடன் அதற்கு இளைய வீட்டில் இருக்கும் பிள்ளையையும் முன் பக்கம் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது .அனேகமாக அந்த பிள்ளைகள் சுமார் மூன்று வயதிற்கு கீழே இருக்கும் சரியாக உட்கார கூட பழகாத நிலையில் அழைத்து வருகிறார்கள் .அது மட்டுமல்ல பள்ளிக்கு விட வேண்டிய பிள்ளையை ஏற்கனவே லேட்டாக அழைத்து வரும் அவஸ்தையில், இந்த பிஞ்சு குழந்தைகளை முன்பக்கம் வைத்து கொண்டு ஏற்கனவே ரிப்பன் போல இருக்கும் திருப்பூர் சாலையை விளக்குமாற்று குச்சியைபோல சிறிதாக்கி வழக்கமாக சாலையில் செல்லுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள் .

      நண்பர் ஒருவரிடம் இப்படி அழைத்து வரும்போது கேட்டதற்கு ,எங்க சார் வண்டியை எடுத்தவுடன் நமக்கு முன்னாலே அது ரெடியாகி அழுக ஆராம்பித்து விடுகிறது என்று பெருமையாக சொன்னார் .அதுமட்டுமில்லையாம் இவர் அலுவலகம் செல்லும் முன் ஒரு ரவுண்டாவது வீதியில் அழைத்து செல்ல வேண்டுமாம் .
                       இப்படி செல்லுவர்களை காணும்போது சற்று எரிச்சல் மட்டுமே வருகிறது .சின்ன குழைந்தைகள் இதெல்லாம் அறியமாட்டார்கள் நாம்தான் மெல்ல சொல்லி வீட்டில் விட்டு வரவேண்டும் .இப்படி உண்மையிலேயே பாசம் உள்ள அப்பன்மார்களாக இருந்தால் பேசாமல் லீவு போட்டு விட்டு வீட்டில் வைத்து நாள் முழுவதும் கொஞ்சினால் யாரும் கேட்கவா போகிறார்கள் ?
இரண்டு .
                     பள்ளி விடும் முன் வந்து அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் இதில் பெரும்பாலும் பெண்களும் இருக்கிறார்கள் .என்னவோ பாசத்தை காத்து கூட்டிப்போவது மாதிரி தெரியும் .ஆனால் சாலையில் உள்ள பம்பாய் மிட்டாய் வாங்கித்தர சொல்லி அழும் பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள இப்படி நோய பரப்பும் பொருள்களை பள்ளியின் வாசலில் இரண்டு பக்கமும் நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்களை பள்ளி நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது.
மூன்று.
                    பள்ளியில் ,பெற்றோர்கள் கூட்டம் போடுவார்கள் .அதிகம் பட்சம் நாங்கள் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே பள்ளி நடத்துவதாக சொல்கிறார்கள் .ஆனால் பெரும்பாலும் அடுத்த கட்டண உயர்வை பற்றி மட்டுமே இருக்கிறது .சரி .ஆட்சியாளர்கள் இந்த கட்டண உயர்வை கண்டுகொள்வதில்லை என்பதால் அதை விடுவோம் .ஆனால் அந்த கூட்டங்களை ,பெற்றோர்களும் அந்த பிள்ளைகளின் வகுப்பு  ஆசிரியர்களையும் கூட்டத்திற்கு அழைத்து பிள்ளைகளின் உடை ,எடுத்துவரும் உணவு முறை ,ஆரோக்கியம் ,விடுமுறையில் பெற்றோர்கள் எந்த மாதிரி புது விசயத்தை பழக்க படுத்தவேண்டும் என்பதில் துளி கூட அக்கறை செலுத்துவதில்லை .ஆசிரியர்களும் ,பெற்றோகளும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதே குழந்தைகளின் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு நல்லது .

இதெல்லாம் ஒரேநாளில் நடந்து விடாது ஆனால் வருங்காலத்தில் பெற்றோகள் சும்மா இருக்கபோவதில்லை ...

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கற்பு ..


அழகான ஆணாதிக்க வார்த்தை
பெண்ணுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்ட விஷம் தடவிய அம்பு ..
 பெண்ணை மட்டுமே உண்ணும் முதலை ..


                                 இப்படியெல்லாம் எழுத ஆசை ஆனால் அதிகம் படிப்பறிவு இல்லாததால் நான் குரோமோசோம் கட்சி . ( தாயிடம் 23 குரோமோசோம் தந்தையிடம் 23 குரோமோசோம் என மொத்தம் 46 குரோமோசோம்கள் இணைந்து ஓர் உயிர் உருவாகிறது ) எனவே தலைப்பை பற்றி உண்மையில் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த அருமையான வலைப்பூவை பாருங்கள் http://thangathamiz.blogspot.in/2008/08/blog-post_5109.html
             சில வருடங்களுக்கு முன் ஒரு கம்பனியில் வேலை பார்த்து வந்தேன் .அங்கே பகல் - இரவு மிக சாதாரணம் எனவே ஆண்கள் பெண்கள் நிறைய சேர்ந்து வேலை பார்ப்பதால் அங்கு ஒருவரை பற்றி ஒருவர் கட்டாயமாக ஒரு ஈர்ப்பு இருந்தது .சில வயதில் சில ஈர்ப்பு மாதிரி .அங்கு எனக்கு தொடர்புடைய ஒரு நண்பன் ஒரு பெண்ணை காதலிப்பதாக விசயம் தெரிந்தது . விசாரித்தேன் ..ஒப்புக்கொண்டான் .ஆனால் அவனைப்பற்றி எனக்கு தெரிந்த விஷயம் தான் மேல் பாதிப்பில்லாமல் கல்யாணமான பெண்களிடம் அவன் வலை வீசுவதில் கில்லாடி .இதை பற்றி நாங்கள் பலமுறை கண்டித்ததால் கம்பனியில் எங்களுக்கு கொடுத்த ரூமைகூட காலிசெய்துவிட்டு வெளியே தங்கி கொண்டான் .( அது கூட வேறு காரணம் சொன்னார்கள் ) ஊரில் உள்ள அவன் குடும்பம் வரை எனக்கு பழக்கம் .இருந்ததால் .வேறு வழியில்லை பேசிக்கொள்வோம் .எனக்கு அந்த பெண்ணை பற்றி கவலை தொற்றிக்கொண்டது.

     ஒரு நாள்  நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்த பெண்ணையும் ,நண்பனை பற்றியும் சொன்னார் .உங்கள் நண்பனும் அந்தபெண்ணும் நல்ல ஜாடிக்கு எத்த மூடிமாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் மேய்கிற ஆட்கள் .இதுக எப்படி குடும்பம் பண்ணபோகிறதோ என்று அங்கலாய்த்தார் .இதுபற்றி நான் அவனின் மேல் உள்ள அக்கரையில் அவனுக்கு மிகவும் நெருங்கிய அதே சமயம் நல்ல  புத்திசாலி நண்பர் மூலமாக அவனுக்கு அறிவுரை சொல்ல அனுப்பினேன் .அவன் சொன்ன பதிலை கேட்டபோது  "நான் சந்தோசப்பட்டேன் .
அது "நானும் ராமனில்லை அவளும் சீதையாக எப்படி எதிர்ப்பாபது "
இருவருக்கும் திருமணம் ஆகி அவர்கள் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள்

             பல்வேறு காரணங்கள் காரணமாக வேலையே விட்டுவிட்டுஅவர்கள் சொந்த ஊருக்கு போன பிறகு மீண்டும் திரும்பி இருவரும் எங்கள் கம்பனிக்கே பழைய பணிக்கு தொடர ..( கையில் காசும் , கண்டிப்பை விரும்பாதவகளுக்கு சொந்த ஊர் முடியாது ) சரி இப்போது பையன் பழையமாதிரி இருக்கமாட்டான் என நினைத்தால் கொஞ்ச நாளில் மீண்டும் அவன் வேலையை தொடங்கிவிட்டான் ..அந்த பெண்ணும் ...      இதில்  ஒரு விஷயம் என்னவென்றால் அந்த பெண் விசயம் இவனுக்கு தெரியாது .ஆனால் இவன் விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியும் .

ஒருநாள் இவன் அறிந்தபோது வீட்டுக்குள் அடிதடி  ரகளை .நீ யோக்கியமா ? என அந்த பெண் கேட்டதால் .
எனக்கு கோபம் வந்து விட்டது நேரில் சென்று என்னடா அப்போ கேட்டப்ப பெரிசா வசனம் பேசின இப்ப அதெல்லாம் எங்க போச்சு என்ற போது மிக சாதரணமாக சொன்னான் .அது பொம்பள பிள்ளை, நாளைக்கு பொறக்க  போகிற குழைந்தைக்கு நான்மட்டுந்தான் அப்பனா இருக்கணும்னு ஆசைப்படறேன் ...
எனக்கு பேச எதுவுமே  இல்லை என தோன்றியது .அப்படியானால் இவனோடு தொடர்பினால் எங்கோ பிறந்த குழைந்தைகளுக்காக எப்போது வருந்துவான் ?

“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”

சனி, 11 ஆகஸ்ட், 2012

அந்த பெண்ணுடன்...

                 ண்பர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்று அவரை மாப்பிள்ளை பார்க்க பெண்வீட்டார் வருவதற்காக காத்திருந்தோம் .நண்பர் தன்னுடைய வீட்டை மிகவும் மாற்றி அமைத்து இருந்தார் .சுமார் மூன்று மணிநேரம் அவரின தந்தையுடன் சேர்ந்து சமையலறை தவிர அவர் வீட்டில் வரவேற்பறை ,முதல் மாடியில் காற்று கூத்தாடும் மற்றும் ஒரு அறை இருக்கிறது .அங்கு பூ தொட்டிகள் கொடிகள் அலங்கரிக்க அருமையாக இருக்கும அத்தனையும் மிக அழகாக நேர்த்தியாக ஒதுக்கி வைக்கபட்டு இருந்தது .
                  அதில்லாமல் மேல் அறைக்கும் கீழ் அறைக்கும் இடையே நண்பரின் அறை .அங்கு அவரி கம்ப்யூட்டர் மற்றும் இரவு மட்டும் தங்குமாறு வைத்துகொண்டார் .அங்கு எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை .இங்கு யாரையும்  அழைக்கபோவதில்லை என்று பதில் வந்தது .
             
     மதியம் ஒன்று முப்பதுக்கு பெண்வீட்டார்கள் வருவதாகவும் ,சம்மதம் தெரிவிக்கும் வரை ஒருவர் வீட்டில் ஒருவர் கைநனைக்க மாட்டார்கள் என்பதால் பார்த்து, பர்ர்த்து ஸ்னாக்ஸ் வாங்கினோம் .பப்ஸ் - Delifersh பாதாம்பால் - ஆவின் தாயாரிப்பு .ரசகுல்லா வீட்டில் ஏற்கனவே தயாரிக்க பட்டு இருக்க .இதோடு மல்லிகை பூ .. முதல் முறையாக நண்பர் வீட்டுக்கு மாப்பிளை பார்க்க வருபவர்கள் இவர்கள் என்பதால் போதுமா போதுமா என்று ஏற்பாடு கச்சைகட்டி பறந்தது ..

          சொன்னபடி ஒன்று முப்பதுக்கு வரவேண்டிய பெண்வீட்டார்கள் ,மிக சரியாக நான்கு மணிக்கு வந்தார்கள் .ஆனால் ஒரு ஆச்சர்யம் பெண்ணுடைய பெற்றோர்கள் மாறும் சில உறவினர்கள் சேர்த்து மொத்தம் வருபவர்கள் ஏழு பேர்கள்  எதிர்பார்க்க பட்டது ஆனால், வந்தவர்கள் வித்தியாசமாக பெண்ணையும்  உடன் அழைத்து வந்திருந்தனர் ( ஏற்கனவே பெண்வீட்டிற்கு மாப்பிளை போயிருந்ததால் இதை நாங்கள் மட்டுமல்ல இதற்கு ஏற்பாடு செய்தவர்களே எதிர்பார்க்கவில்லை )
நான் பெண்ணின் தந்தைக்கு அருகில் அமர்ந்து இருந்தேன் எப்போதெல்லாம் அவர்களின் பேச்சில் மத்தியில் மவுனம் அரங்கேறுமோ அப்போதெல்லாம் நான் உள்ளேன் அய்யா என்பது போல ஒரு சில வார்த்தைகளை ஆரம்பிப்பேன் ...( இதை என் தார்மீக கடமையாக கொண்டேன் .)
 பெண்ணுடன் வந்த சில பெண்கள் ஏதோ கிசுகிசுக்க சரி கோவையிலிருந்து திருப்பூர் பயணம் என்பதால் பாத்ரூம் போக போகிறார்கள் என நினைத்தோம் .அது மேலே முதல் மாடியில் இருக்கிறது .எனவே அங்குதான் போவார்கள் என நினைத்து கொண்டு இருந்தபோது கீழேயுள்ள நண்பரின் ( மாப்பிளை ) அறைக்கு போக .. அங்கிருந்து ஒரு குட்டி பெண்ணையும் அக்கா உங்களையும் கூப்பிடுகிறார்கள் என அழைத்து  செல்ல எனக்கு அப்போது அவர்களை தொடர்ந்து  நண்பர் அதிரடியாக் பின்னாலேயே சரசரவென பாய எனக்கு ஒன்றுமே புரியவில்லை .

சுமார் கால் மணிநேரம் ஆன பிறகு எல்லோரும் திரும்பிவந்த  நண்பரின் முகத்தில் சின்ன கலவரம் ..
அவர்கள் வழக்கம்போல போயசொல்லியனுவதாக சொல்லிவிட்டு செல்ல நண்பரை வெளியே அழைத்து சென்றுவிட்டு கேட்டால் ,அதிரடியாக் பின்னாலேயே சென்ற காரணம் .அவர் வீட்டில் அவருக்கு முன்னாலேயே ஒரு பெண் பார்த்திருந்தார்கள் .இந்த மாதிரி அவர்கள் வீடு வரவில்லை. வேறு சில காரணங்களால் அது தடைபட்டு விட்டது .அந்த பெண்ணுடன் இருந்த பழைய போட்டோகளை Desk Top ல் ஒரு Folder போட்டு பத்திரமாக  வைத்திருக்க அதை மறைக்க ஓடியிருக்கிறார் ..அது சரி .!