மன்னிக்கவும் .தலைப்பு குழந்தைகளை பற்றி ..
எனது செல்ல புதல்வனை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு செல்லுவது வழக்கம் .அதே போல மாலை பள்ளி விட்டபின் அழைத்து வருவதும் .தினமும் பல லாஜிக் இல்லாத விசயங்களை பார்க்கிறேன்.
ஒன்று .
பள்ளிக்கு அளித்து வரவேண்டிய பிள்ளையுடன் அதற்கு இளைய வீட்டில் இருக்கும் பிள்ளையையும் முன் பக்கம் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வருவது .அனேகமாக அந்த பிள்ளைகள் சுமார் மூன்று வயதிற்கு கீழே இருக்கும் சரியாக உட்கார கூட பழகாத நிலையில் அழைத்து வருகிறார்கள் .அது மட்டுமல்ல பள்ளிக்கு விட வேண்டிய பிள்ளையை ஏற்கனவே லேட்டாக அழைத்து வரும் அவஸ்தையில், இந்த பிஞ்சு குழந்தைகளை முன்பக்கம் வைத்து கொண்டு ஏற்கனவே ரிப்பன் போல இருக்கும் திருப்பூர் சாலையை விளக்குமாற்று குச்சியைபோல சிறிதாக்கி வழக்கமாக சாலையில் செல்லுபவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள் .
நண்பர் ஒருவரிடம் இப்படி அழைத்து வரும்போது கேட்டதற்கு ,எங்க சார் வண்டியை எடுத்தவுடன் நமக்கு முன்னாலே அது ரெடியாகி அழுக ஆராம்பித்து விடுகிறது என்று பெருமையாக சொன்னார் .அதுமட்டுமில்லையாம் இவர் அலுவலகம் செல்லும் முன் ஒரு ரவுண்டாவது வீதியில் அழைத்து செல்ல வேண்டுமாம் .
இப்படி செல்லுவர்களை காணும்போது சற்று எரிச்சல் மட்டுமே வருகிறது .சின்ன குழைந்தைகள் இதெல்லாம் அறியமாட்டார்கள் நாம்தான் மெல்ல சொல்லி வீட்டில் விட்டு வரவேண்டும் .இப்படி உண்மையிலேயே பாசம் உள்ள அப்பன்மார்களாக இருந்தால் பேசாமல் லீவு போட்டு விட்டு வீட்டில் வைத்து நாள் முழுவதும் கொஞ்சினால் யாரும் கேட்கவா போகிறார்கள் ?
இரண்டு .
பள்ளி விடும் முன் வந்து அரட்டை அடிக்கும் ஒரு கூட்டம் இதில் பெரும்பாலும் பெண்களும் இருக்கிறார்கள் .என்னவோ பாசத்தை காத்து கூட்டிப்போவது மாதிரி தெரியும் .ஆனால் சாலையில் உள்ள பம்பாய் மிட்டாய் வாங்கித்தர சொல்லி அழும் பிள்ளையை அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள இப்படி நோய பரப்பும் பொருள்களை பள்ளியின் வாசலில் இரண்டு பக்கமும் நின்று கொண்டு வியாபாரம் செய்பவர்களை பள்ளி நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருக்கிறது.
மூன்று.
பள்ளியில் ,பெற்றோர்கள் கூட்டம் போடுவார்கள் .அதிகம் பட்சம் நாங்கள் சேவைமனப்பான்மையுடன் மட்டுமே பள்ளி நடத்துவதாக சொல்கிறார்கள் .ஆனால் பெரும்பாலும் அடுத்த கட்டண உயர்வை பற்றி மட்டுமே இருக்கிறது .சரி .ஆட்சியாளர்கள் இந்த கட்டண உயர்வை கண்டுகொள்வதில்லை என்பதால் அதை விடுவோம் .ஆனால் அந்த கூட்டங்களை ,பெற்றோர்களும் அந்த பிள்ளைகளின் வகுப்பு ஆசிரியர்களையும் கூட்டத்திற்கு அழைத்து பிள்ளைகளின் உடை ,எடுத்துவரும் உணவு முறை ,ஆரோக்கியம் ,விடுமுறையில் பெற்றோர்கள் எந்த மாதிரி புது விசயத்தை பழக்க படுத்தவேண்டும் என்பதில் துளி கூட அக்கறை செலுத்துவதில்லை .ஆசிரியர்களும் ,பெற்றோகளும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்வதே குழந்தைகளின் எதிர்பார்க்கும் வளர்ச்சிக்கு நல்லது .
இதெல்லாம் ஒரேநாளில் நடந்து விடாது ஆனால் வருங்காலத்தில் பெற்றோகள் சும்மா இருக்கபோவதில்லை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக