சனி, 13 அக்டோபர், 2012

உதவி ஆய்வாளரின்- பணி ஓய்வு


                           சென்ற ஞாயிறு எனக்கு பழக்கமான ஒரு உதவி ஆய்வாளரின் ( Sup Inspector ) அவர்களின் பணி ஓய்வு ( Retirement ) விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் .சுமார் 34 வருடம் பணியிலிருந்து இருக்கிறார் .அவருடன் ஒரு நகை காணமால் போன வழக்கில் திரும்ப பெரும் தேடலில் மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன் .அந்த பழக்கத்தில் அவரின் பணி  ஒய்வு விழாவுக்கு அழைத்திருந்தார் .                      அவருடன் இருந்த பழகிய நாட்களில் அவரின் குற்றவாளிகளின் குற்றம் முறைகளை எந்த செக்சனில் பதியலாம் என்பதில் அத்துப்படியனவர் .ஒரு குற்றம் காவல்துறையால் முதல் முறை பதியப்படும்போது தவறான முறையில் பதியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு எளிதாக எதிர் தரப்பு வாதத்தில் தோற்று போக்கும் அபாயம் இருக்கிறது .எனவே இதில் அவரின் அனுபவம் பல குற்ற முறைகளை சந்தித்த அனுபவத்தில் அறிந்துகொண்டது .தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது .அவர் வேலை பார்த்த இடங்களில் உள்ள FIR போடுவது சம்பந்தமாக இன்னும் அவருடன் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் .


                             விழாவுக்கு தலைமை தாங்க வந்தவர் திருப்பூரின் டி .எஸ்.பி. திரு. ராஜாராம் .அவர் பயிற்சியில் சேர்ந்த முதலாக அவரை அறிவதாகவும் திறமையை பாராட்டி பேசினார் .விழா முடிந்தவுடன் கிளம்பாமல் இருந்து மிக சாதாரணமாக கலந்து பேசி உணவருந்திவிட்டு DSP கிளம்பியது ஆச்சர்யாமாக இருந்தது.மிகஎளிமையான மனிதர் .                                                                                                               பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,பலரின் வேண்டுகோளும் அவரிடம் வைத்தார்கள் .அதாவது இனியும் உங்களிடம் தொடர்புகொள்வோம் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை

                             ஆனால் ஒருவராவது அவரின் பணிபுரிய ஆரம்பித்த ஆரம்பம் முதல் அவரின் வேலை பார்த்த இடம் ,அவரின் சிறப்பான அனுபவம் பற்றி எடுத்து பேசவில்லை . அதிலும் எங்கெல்லாம் அவர் பணிபுரிந்தார் என்ற தகவல் கூட சொல்லவில்லை என்பது எனக்கு  ஏன்  என புரியவில்லை .!


                                  .  விழா நாயகர் அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே என கேட்டபோது அவர்களுக்கு என் பணியிலிருக்கும் பக்கம் கூட வரமாட்டார்கள் எனும்போது ,அவரின் ஆதங்கம்  வெளிப்பட்டது .      

  அடுத்து தனது மகனின் திருமணத்திற்க்கு பிறகு ஏதாவது பணியில் சேரவேண்டும் என தெரிவித்தார் .அவரிடம் விடை பெற்று வரும்போது எனக்கு பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது .

செவ்வாய், 9 அக்டோபர், 2012

Hamara bajaj caliber


                                     எனது 1999 வருட தயாரிப்பான Bajaj Caliber  தோழனை  பிரியும் நேரம் வந்து விட்டது .இனியும் எனக்காக அவன் உழைத்து தேய்ந்தது போதும் என்றும் , இனியும் என்னோடு மாதம் 1600 கி.மீ.ஓடமுடியாத நிலை  அவனுடயதாகிவிட்டது .இனி செலவழித்து பிரோயோசனம் இல்லை என்று மெக்கானிக் கையை  விரிக்க , புதிய வண்டிக்கு மொத்தமும் கட்ட வாய்ப்பு குறைவு .பாதி மனதுடன் Hero Show Room - Exchange  Offer கேட்டதற்க்கு மிக அனாயசமாக சும்மா ஐந்து ரூபாய்க்கு( 5000) எடுத்தக்கலாம் அதிலும் TN 58 வண்டி எடுப்பதில்லை என்று வேண்டா வெறுப்பாய் சொன்னதை கேட்டதும் ,எனக்கு எங்கோ தூக்கி எறிந்தது போல இருந்தது .

                                     சரி Bajai Show Room போனேன் .அங்கும் இதே போல பேச இனி எனக்கு இதுவே போதும் என்று போய்கொண்டு இருந்தபோது , Dream Yuga குறுக்கிட்டது .செய்தி பேப்பரில் பார்த்து நேரில் விலையை விசாரித்தால் எனக்கும் அதற்கும் உள்ள தூரம் பல மைல்  என விலகிவிட்டேன்

                            
   .நண்பர் ஒருவருடன் வேறு வேலையாய் போய்க்கொண்டு இருந்தபோது ,TVS Show Room போனோம் .உங்கள் பழைய  வண்டி என்றார்கள் ,மன்னிக்கவும் அதுபற்றி பேசவேண்டாம் என்றேன் .காரணம் கேட்டார்கள் .நீங்கள் கேட்பது எனக்கு கோபம் வரலாம் என்று சொல்லியும் அந்த பெண் விடுவதாக  இல்லை .வண்டி மதிப்பிடும் ஒருவரை ஓட்டி பார்க்க சொல்லி என்னிடம் வந்து எவ்வளவு தருவீர்கள் என்றார்கள் .எனக்கு அதில் ஒரு நேர்மை இருப்பதாக பட்டது .சொன்னேன் .அதை அப்படியே ஒத்துக்கொண்டார்கள் .எனக்கு ஆச்சர்யம் .

                             என் சாமான்ய புத்தி சில கேள்வி கேட்டது .அப்படியானால் Extra Fittings , Registration Fees ,Insurance என்று வேறுபக்கம் தாக்குவார்களோ ?. கேட்டுவிட்டேன் .இல்லை பயப்படவேண்டாம் . அப்படியேதும் இல்லை என்றார்கள் .சரி  வண்டி  தேர்வு செய்ய போகிறீர்கள் என்றதும் இப்போது புது தொழில்நுட்பத்துடன் களம்  இறங்கி இருக்கும் Sport கேட்டேன் .ஐம்பதாயிரம் வரும் என்றார்கள் .என் பழைய வண்டியின் Original R.C Book கேட்டார்கள்


,கொடுத்துவிட்டு ,அடுத்தநாள் என்னுடை ஆஸ்த்தான  மெக்கானிக்கை அழைத்துக்கொண்டு வண்டி தேர்வு செய்ய போனால் அவர் Sports  வேண்டாம் .உங்கள் வேலைக்கும் ,மிதமான வேகத்திற்க்கும் ,2012 Star City”. TVS Star City
போதும் என்று சொல்லி  அதிலும் CVTI ES தொழில்நுட்பம் அருமையாக   பேசப்படுகிறதே ,என்று முடிவெடுத்தோம் .

                                  கடந்த 28 - 09- 2012 எடுக்க போனோம் . கீழ் தளத்தில் Extra Fittings மாட்டிக்கொண்டு இருக்கும்போது ,Invoice தயாராய் கொண்டுஇருந்தது .அந்த தருணம் வந்தது . இதுநாள்வரை என்னையும் ,என் குடும்பத்தையும் சுமந்து காத்து வந்த Bajaj Caliber இன்று இப்போது என்னை விட்டு போக போகிறது .என்னிடம் அந்த வண்டி வந்து சுமார் ஆறு வருடம் மட்டும்தான் ஆகி இருக்கும் .ஆனால்  வீட்டில் உள்ளவர்கள் நம்மிடம் காட்டும் அக்கறையை விட ஒரு படி மேலே சென்று மற்றவர்களிடம் என்னை காத்துவந்த hamara bajaj caliber என்னை விட்டு போக போகிறது .

                                   இந்த வண்டியை 2006 ல் வாங்கியபோது ,முதல் முறையாக சொந்தருக்கு ஊருககு 125 கி.மீ.தொலைவிலுள்ள திண்டுக்கல் போய்விட்டு` பல்லடம் வழியாக திருப்பூர்  திரும்பும் போது பெட்ரோல் பங்கிற்கு  சுமார் 9 கி.மீ இருக்கும் நிலையில் பெட்ரோல் தீர்ந்து விட்டது .வண்டியை  தள்ளிக்கொண்டு குடும்பமே இருட்டில் நடந்து கொண்டு இருந்த போது அந்த வழியே குடும்பத்துடன் வந்த ஒரு ஆம்னி நின்று ,அவர்கள் அனைவரும் இறங்கிகொண்டு என்னுடன் பெட்ரோல் பங்க வந்து பெட்ரோல் வாங்கி என் வண்டியில் ஊற்றிய பின்னரே கிளம்பி போனார்கள் ,அடுத்தமுறை பல்லடம் - சேட பாளையம் வழியாக மாத பலசரக்கு பொருள் வாங்கி விட்டு குடும்பத்துடன் வரும் வழியில் இரவு 10 மணிக்கு பஞ்சர் .அதுவும் பல கி.மீ தள்ளும் நிலை ஆனால் அங்கிருந்த ஒருவர் தன்னுடைய TVS 50 எடுத்துக்கொண்டு என்னுடன் பல இடம் பஞ்சர் பார்க்க முயற்சி செய்தார் .அதிலும் அவர் இரவு வேலை பார்ப்பவர் .உணவுக்கு -ஹோட்டல் வந்தவர் .முடிவில் அவர் வேலை பார்க்கும் கம்பனியில் பஞ்சர் வண்டியை  விட்டு விட்டு அவர் வண்டியை எடுத்துக்கொண்டு வீடு போனோம் .இன்னும் பல ..சோதனைகளை கடந்து நின்ற அந்த வண்டியை பிரிந்து போக போகிறேன் ..


                     என் மெக்கானிக்கிடம் முன்னரே சொல்லிவிட்டதால் அவர் Show Room விட்டு வெளியே நின்றுகொண்டார் .நான் அழுதுவிடுவேன் என்பது தெரியும் ஆனால் அந்த அளவுக்கு போகும் நிலை வரும் என்று தெரியாது .என்னிடம் அந்த Invice கொடுக்கவந்த பெண் பயந்து போய்விட்டது .என்ன சார் ஆச்சு ? என்ற போது  அப்போதும் என்னிடம் பதிலுக்கு அழுகை கலந்து என் பழைய வண்டி என்றேன் ,அது மட்டுமே  வந்தது.அந்த  பெண் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது .ஆனாலும் என்னை சமாதானப் படுத்தியது .சார் உங்கள் பழைய வண்டி ஒரு புதுவண்டி தந்துதானே போய்  இருக்கிறது .வருத்தபாடாதிங்க என்றது .

                      நான் எழுந்து ஓரமாக நின்று கொண்டு முடிந்தவரை அழுதேன் .என்னை போல சாதாரண வர்க்கம் வேறு ஏதாவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை .