சென்ற ஞாயிறு எனக்கு பழக்கமான ஒரு உதவி ஆய்வாளரின் ( Sup Inspector ) அவர்களின் பணி ஓய்வு ( Retirement ) விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன் .சுமார் 34 வருடம் பணியிலிருந்து இருக்கிறார் .அவருடன் ஒரு நகை காணமால் போன வழக்கில் திரும்ப பெரும் தேடலில் மூன்று நாட்கள் இருந்திருக்கிறேன் .அந்த பழக்கத்தில் அவரின் பணி ஒய்வு விழாவுக்கு அழைத்திருந்தார் .
அவருடன் இருந்த பழகிய நாட்களில் அவரின் குற்றவாளிகளின் குற்றம் முறைகளை எந்த செக்சனில் பதியலாம் என்பதில் அத்துப்படியனவர் .ஒரு குற்றம் காவல்துறையால் முதல் முறை பதியப்படும்போது தவறான முறையில் பதியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு எளிதாக எதிர் தரப்பு வாதத்தில் தோற்று போக்கும் அபாயம் இருக்கிறது .எனவே இதில் அவரின் அனுபவம் பல குற்ற முறைகளை சந்தித்த அனுபவத்தில் அறிந்துகொண்டது .தமிழகத்தின் பல இடங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது .அவர் வேலை பார்த்த இடங்களில் உள்ள FIR போடுவது சம்பந்தமாக இன்னும் அவருடன் தொடர்புகொண்டு சந்தேகம் கேட்டுகொண்டே இருக்கிறார்கள் .
விழாவுக்கு தலைமை தாங்க வந்தவர் திருப்பூரின் டி .எஸ்.பி. திரு. ராஜாராம் .அவர் பயிற்சியில் சேர்ந்த முதலாக அவரை அறிவதாகவும் திறமையை பாராட்டி பேசினார் .விழா முடிந்தவுடன் கிளம்பாமல் இருந்து மிக சாதாரணமாக கலந்து பேசி உணவருந்திவிட்டு DSP கிளம்பியது ஆச்சர்யாமாக இருந்தது.மிகஎளிமையான மனிதர் . பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள் ,பலரின் வேண்டுகோளும் அவரிடம் வைத்தார்கள் .அதாவது இனியும் உங்களிடம் தொடர்புகொள்வோம் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதை
ஆனால் ஒருவராவது அவரின் பணிபுரிய ஆரம்பித்த ஆரம்பம் முதல் அவரின் வேலை பார்த்த இடம் ,அவரின் சிறப்பான அனுபவம் பற்றி எடுத்து பேசவில்லை . அதிலும் எங்கெல்லாம் அவர் பணிபுரிந்தார் என்ற தகவல் கூட சொல்லவில்லை என்பது எனக்கு ஏன் என புரியவில்லை .!
. விழா நாயகர் அவரிடம் அவரின் குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லையே என கேட்டபோது அவர்களுக்கு என் பணியிலிருக்கும் பக்கம் கூட வரமாட்டார்கள் எனும்போது ,அவரின் ஆதங்கம் வெளிப்பட்டது .
அடுத்து தனது மகனின் திருமணத்திற்க்கு பிறகு ஏதாவது பணியில் சேரவேண்டும் என தெரிவித்தார் .அவரிடம் விடை பெற்று வரும்போது எனக்கு பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக