அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் பலர் என்னிடம் இன்டர்நெட்டில் வரும் தகவல்களை பரிமாறுவதும் ,விசாரிப்பதும் வழக்கம் .இன்றைய நாளில் அறிவு கிணறாக தேட தேட அனுமார் வால் போல தேடல் நீண்டுகொண்டே போகிறது .
அதிலும் இன்று நம் தமிழ் மக்கள் வலைபூவில் பதியும் விசயங்களின் அளவுக்கு முன்னாள் நூலகங்கள் கைகட்டி நிற்கவேண்டும் அவ்வளவு சிறப்பான இலவச தொகுப்புகள் .தேடித்துருவி மெனக்கெட்டு பதிகிறார்கள் .ஒரு புதிய விஷயம் பற்றி தெரிந்த அன்றைய நாளின் மாலையே .இன்னும் சொல்லப்போனால் அந்த நேரத்திலே .
இத்தனை இருந்தும் என்ன செய்வது திருப்பூரில் பதினான்கு வருடம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் சக அலுவலக தோழர் .ஆனால் எங்கள் அலுவலகத்திற்கு புதியவர் .ஒருநாள் ஒரு வெப் முகவரி கொண்டு கொண்டு வந்தார் .அதில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து தர சொன்னார் .அவருக்கு சுமார் 52 வயது .அவர் கணினியுடன் சுமார் பலவருடம் அனுபவம் உள்ளவர் ஆனால் இண்டர்நெட்டை பற்றி சற்றும் அறியாதவர்.
அவர்கொடுத்த முகவரி alongporn .com என்று பெயர் இருந்ததால் எனக்கு அந்த முகவரி பெயரிலும் அவரின் வயதின் பெயரிலும் இருந்த நம்பிக்கையில் (அது மட்டுமல்ல நம்மையும் உதவி கேட்கிறார்களே என்ற சற்று கர்வம் இயல்புதானே ?) தொடுப்பை தொடர்ந்தாள் இப்போது அதிகம் பரவி இருக்கும் SHEMALE வகை வீடியோ தொகுப்பு அது .
எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .(கர்வத்தின் பரிசு கிடைத்துவிட்டது ) அவரிடம் சொன்னேன் .சார் நாம் இந்த மாதிரி வீடியோக்களை பார்க்க தூண்டி வைரஸ் வரத்தை பெற்றுக்கொண்டால் நம் அலுவலக கம்ப்யூட்டர் (Lan Connection )முழுவதும் பரவி விடும் அப்புறம் ஒருநாள் எல்லா டேட்டாக்களும் புட்டுக்கும் என எடுத்து சொல்லி சமாளித்தேன் .எனக்கு கம்ப்யூட்டர் சொல்லிக்கொடுத்த பலரும் இப்படி ஆசையில் தேட போனபின்தான் நிறைய திறமையை வளர்த்துகொண்டார்கள் என்பது வேறு செய்தி .
மேலே நான் சொன்னபடி மாய்ந்து மாய்ந்து என்னை மாறி ஆட்கள் எழுதிக்கொண்டு இருக்கும்போது இவர்கள் தேடல் இன்னும் இப்படியே இருக்கே ? சலிக்காதா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக