எனது நண்பரின்- நண்பர் ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்போது ,ஒரு நல்ல ஜோசியர் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார் .ஆனால் அடிக்கடி இந்த மாதிரி கேள்விகளை நான் சந்திக்கும்போது எனக்குள் ஒரு அவஸ்தையும் ,கோபமும் பொங்கும் .காரணம் "நல்ல "என்ற வார்த்தை யார் பயன்படுத்தலாம் அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது பற்றி சாலமன் பாப்பையா அவர்களை பார்க்கும்போது நிச்சயம் கேட்கவேண்டும் .
என்னை பொறுத்தவரையில் நிறைய பேர் நாம் எதாக இருந்தாலும் அளவுகோலை கட்டிக்கொண்டு அழுவதாக தோன்றுகிறது .நல்ல ஜோசியரை ஆய்வு செய்யும் அறிவு இருந்தால் நாம் ஏன் அவருக்கு காசு கொடுத்து வரிசையில் காத்து கொண்டு இருக்க வேண்டும் .அதுமட்டுமல்ல இங்கு நாம் கொண்டுபோகும் ஜாதகத்தில் நாம் பிறந்த நேரம் சரியான நேரம் என்பதுவும் (கம்யூட்டரில் கணித்தாலும் இது அவசியமே ) ,அதை கணித்த ஜோதிடர் சரியாக அவருக்கு சந்திராஷ்டமம் இல்லாத காலத்தில் கணித்தாரா என்பது போன்ற விசயங்களை உறுதி செய்யபடாத நமக்கு நல்ல ஜோசியரை இனம் கண்டுகொள்ள ஏதாவது புது Scale இருக்கா ? அல்லது நமக்கு சொல்லும் ஜோசியர் மனோதத்துவ முறையில் எட்டுக்கு உரியவன் திசை நடக்கிறது ஆனாலும் உங்கள் திறமையால் நீங்கள் வென்று விடுவீர்கள் என்று சொன்னால் மட்டும்தான் நல்ல ஜோசியரா ?( இத்தனையும் மனசுக்குள் யுத்தம் செய்தாலும் பொறுத்துக்கொண்டேன் கொண்டேன் ) ஆனால் நட்பில் அதுவும் நல்ல நண்பரின் நண்பர் எதற்கு என்று பொறுமையாக தெரியும் என்றேன் .
அப்புறம்தான் தான் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டேன் என்பது தெரிந்தது .அவர் காதல் கொண்டு இருகிறாராம் .அந்த பெண்ணின் ஜாதகத்தை இவர் ஜாதகத்துக்கு ஏற்றது போல தயார் செய்து தர வேண்டுமாம் (எப்படித்தான் என்னை கண்டு பிடிப்பார்களோ தெரியவில்லை ) எனக்கு உடன் பாடு இல்லை .மெல்ல அவரைப்பார்பதை தவிர்த்து வந்தேன் .காரணம் காதல் செய்யும்போது இருக்கும் அந்த பந்தா அப்புறம் வீட்டை கண்டவுடன் எப்படி வாலை சுருட்டி கொள்ளுமோ ?
பொதுவாக பொருத்தம் பார்க்க ..
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.(விரிவான விபரங்களுக்கு - http://www.livingextra.com/2011/05/020.html இந்த தொடுப்பில் தொடரவும் ) இத்தனையிலும் எட்டாவது வஸ்யப்-பொருத்தம் மட்டுமே கூட இருந்தாலே ஜாதகத்தை கூட மாற்றும் சக்தி வந்து விடுகிறது .
கடைசியில் அவருக்கு ஒத்துவந்த ஒருவரிடம் ஒரு பொத்தமான ! ஜாதககட்டதை தயார் செய்துகொண்டு அவர்கள் குடுமப் ஜோதிடரை சந்திக்க அவர்குடும்பத்துடன் உள்ளே நுழைந்தவுடன் அப்போதைய ஹோரையை பார்த்தவுடன் ஜாதகத்தை ஓரங்கட்டிவிட்டு கைரேகை பார்த்திருக்கிறார் . அதில் உள்ள தோஷங்களை சொல்லி சில பரிகாரங்களை சொல்லி அனுப்பிவிட்டார் .
மீண்டும் (என கெட்ட நேரத்தில் ) ஒரு முறை அவரை பார்க்கும்போது.இதை சொல்லி விட்டு ஜாதகம் தயார் செய்த மெனக்கெட்டதை பெருமையாக சொன்னார் .எப்படியோ காதல் ஜெயித்து விட்டதாம் !
நம் வீட்டில் உள்ளவர்கள் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை .ஆனால் பத்துக்கு ஒன்பது பொருத்தம் பார்த்து ,ஒரே ஒரு முக்கியமான பொருத்தம் வஸ்யப்-பொருத்தம் இல்லாமல் எத்தனை பேர் இந்த சமூகத்திற்கும் ,பெற்ற குழந்தைகளுக்காகவும் ஒப்புக்கு கணவனாகவும் - மனைவியாகவும் நடித்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பார்த்தாவது காதலுக்கு ஜாதகத்தை தேடாமல் இனியாவது விட்டுவிடுங்களேன் .
ஒருவேளை ...இப்படியே போனால் காதல் ஜாதகம் இங்கு தயார் செய்து தரப்படும் என்று விளம்பரத்தை பார்க்க நேரிடலாம் .

:) காதலில் ஜாதகம் பார்ப்பதும், அது கல்யாணத்தில் அமைய ஜாதக பொருத்தம் பார்ப்பதும் அவசியமற்றது... ஆனால் கிரகங்கள் பேசும்... உன் காதுகள் கேட்காவிட்டாலும்!!!
பதிலளிநீக்கு