சனி, 16 பிப்ரவரி, 2013

காதலில் தோற்ற பிறகு..


 
 தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம்...
          இந்த நிலையை விரும்பாவிட்டாலும் நாம் சந்திக்கவோ ,அனுபவிக்கவோ ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் இழுத்து செல்லப்பட்டு இருக்கிறோம்.மீண்டு வரும்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.ஏனென்றால் தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம் பிரமிப்பாய் வாழ்கிறது.

காதலின் வகை 

         அது ஒருதலை காதலாகட்டும் ,சொல்ல தெரியாத காதலாகட்டும் , தவறாக ( பழகிய சில காலங்களில் ) புரிந்து கொள்ளப்பட்ட காதலாகட்டும்,சூழ்நிலையால் பிரிந்து போனதாகட்டும்,அவசர காதலாகட்டும்,அக்கறையினால் எழுந்ததாகட்டும்,தியாகத்தால் பிரிந்த - ஒருவர் நல்லதிர்க்காக விட்டு கொடுத்த காதலாகட்டும்,வெளிப்படுத்தாத காதலாகட்டும் ,இன்னும்...எல்லாமே ஒரு வகையில் தோல்வி என்ற ஒப்புக்கொள்ளப்பாடாத ஏமாற்றம்தான்.( இதில் வயதுக்கே வராதவர்கள் காதல்அவசர காதல் ,அடுத்தவர் மனைவி மேல் வந்த முந்தய பிந்தய காதல், நம்பிக்கை வைத்து பழக விட்ட நண்பனின் தங்கை மேல் காதல் , உதவியதால் எதிபார்க்கும் கைமாற்று  காதல்  இங்கு வேண்டாம்.) 

 அந்த பெண் மரணத்திர்க்கு முன்..

             பாலகுமாரனின் எழுத்தை தவம் என உணர்ந்து படித்து கொண்டு இருந்தபோது சொந்த தாய் மாமன் மகள் மீது நண்பர் காதல்கொண்டு அவருக்கு தராமல் வேறு ஒருவருக்கு மணப்பேச்சு பேசியபோது தாங்காமல் தூக்கு போட்டு கொண்டு அந்த பெண் இறந்த சோகத்தை என் நண்பருடன் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்ற பக்குவம் இல்லாமல் தவித்து,அந்த பெண் மரணத்திர்க்கு முன் ஒரு கடிதம் எழுதினால், எப்படி இருக்கும் என்று நான் எழுதிய கடிதம் படித்து நண்பர்கள் வீடே அழுதபோது ஏதோ கொஞ்சம் காதல் தோல்வியின் வலி புரிந்த மாதிரி இருந்தது .அது எனக்கு எற்படாதவரை...
 
 வேட்டை நுட்பம் தெரிந்தவன் ஆனால்..
      அதர்க்கு சில ஆண்டுகளுக்கு பிறகு திண்டுகல்லுக்கு அருகே மேட்டுர் டேம் காட்டுப்பகுதியில் சுமார் பதினெட்டு வயதுள்ள பையன், வேட்டை நுட்பம் தெரிந்தவன் .கொக்கு,காட்டுப்பூனை,காட்டுப்பன்றி , முயல் ,என மிக பல வேட்டை பறவை மற்றும் மிருகங்களை - அனாயசமாக தனது சொந்த தயாரிப்பான பால்ரஸ் குண்டுகளை நிரப்பி வேட்டை ஆடுவதில் கில்லாடி அவன் .தனது காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டபோது காதலின் ஆழம் சுத்தமாக புரியவில்லை..அது எனக்கு நடந்த பின்னால் கூட .

 எப்படி இந்த அலங்காரம்?
இதர்க்கு அடுத்து சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தபோது பெண்பார்க்கும் நிகழ்சியில் ஒரு நண்பரின் நண்பன் கலாட்டா செய்து விசாரணைக்கு போனபோது அவள் சம்மதமில்லாமல் எப்படி இது நடக்கிறது என்று அந்த பையன் அங்கு போய் கேட்டானாம் .அப்பா ஏற்பாடு என்று சொன்ன பெண்ணை அப்புறம் எப்படி இந்த அலங்காரம் என்று அடித்து இருக்கிறான் .காதல் குருட்டுத்தனமான தைரியம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஆம் அந்த துணிவு பாடம் புகட்டியது.

 வாழ்கையை நேசிக்க தெரியாதவன் !
            காதலை தர சொல்ல முடியாது.அது கிடைக்காதபோது எங்கோ தூக்கி வீசபட்ட உணர்வை த்ந்தாலும் காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . 

 அந்த சோகத்தை..
          சிலர் இன்னும் வேடிக்கை செய்வதுண்டு .அந்த சோகத்தை சிகரெட்,தண்ணி,கோபத்தில் கெட்ட சகவாசம் ,என்ற வடிகால் மூலம் தீர்க்கமுயற்சிப்பது..அதாவது தன்னை விரும்பிய காதலை தன்னை அழிப்பதுமூலம் சந்தோசிப்பது...சில நாட்கள் அது சரி..
           ஆனால் அதைவிட சில பேர் தியானம் செய்து தீர்க்க கிளம்பி இருப்பது இன்னும் வேடிக்கை.என்னதான் இமயமலை போனாலும் கண்ணைமூடி உட்கார்ந்தால் உன் சுமை கூடவேதானே வரும்..

 சும்மா டைம்பாஸ்!
 
          அது அந்த காலம் .இப்போல்லாம் சும்மா டைம்பாஸ் அவ்வளவுதான் என்று வாய் சொன்னாலும் மனசின் இடறல் தொடரத்தானே செய்கிறது இந்த நூற்றாண்டிலும் ..ஏதோ குறுகுறுப்பு விடாது துரத்துகிறதே! ஏன்?

 காதல் வலி!
            எதுவுமே விளங்காமல்தான் எழுதுவதுதான் என் நோக்கமா?  இல்லை.காதல் வலி அனுபவிக்க பழகலாம் வாருங்கள் ...

1 கருத்து: