ஏதோ திரைப்படம் தலைப்பு போல இருந்தாலும் இதையும் சிலர் சந்தோசத்துடன் படிக்கத் தொடங்குவது உணர முடிகிறது! அதற்குக் காரணம் வேறு ! எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அதே சமயம் இங்குத் திரைப்படம் விமர்சனம் பற்றியும் பேச போவதில்லை .படங்களைப் பார்க்கும் இடத்தில் இருக்கும் ரசிகன் என்பதைத் தவிர வேறு தொழில்நுட்ப சூட்சுமங்கள் தெரியாத அதைப் பற்றிப் பேச நான் லாயக்கு இல்லை .அதர்க்கு ஜாக்கி சேகர் (http://www.jackiesekar.com/) மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் (http://karundhel.com/) போன அற்புதமான வல்லுனர்கள் இருக்கிறார்கள்.ஆனால் நான் பேச ஆசைப்படுவது சமீபத்திய தமிழ் படக் கதை கர்த்தாக்கள் உட்படப் பலரும் செய்து வரும் ஒரு நல்ல விசயமும் , அதர்க்கு எதிரான விசயமும் ஒன்று ஓசைபடாமல் நடந்து வருகிறது ...
நல்ல விசயம் ...
இன்றைய பேய் படங்களை நம் வரவேற்பு அறைக்குக் கொண்டு வந்து பேய்க்ளை குடும்பத்தோடு ரசிக்கும் அளவுக்கு நடுங்க வைக்காது தந்த நம் பேய் இயக்குனர்களுக்கு மன்னிக்கவும் இயக்குனர்களின் பேய்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் ( முக்கியமாக நான் )
ஒரு கெட்ட விசயம் .
சமீபத்திய படங்கள் இறந்து போன பெண்கள் மட்டும் பேயாக வருவதாகக் காட்டுவது கொஞ்சம் பேய் லாஜிக்கில் இடிக்கிறது .அதென்ன பயமுறுத்துவது பெண் பேய்கள் சொத்தா என்ன ? ஆண் பேய்கள் ஜப்பானில் கல்யாண ராமன் முருங்கை மர (கமல்) பேய் கதைதானா? அங்குப் போயும் வேலைக்கு ஆகாதா ? சந்தோசமா ஆண்கள் சாகக் கூட முடியாதா என்பன போலக் கேள்விகள் கேட்க தொன்றுகிறது .இன்னொரு பக்கம் யோசித்தால் சம்பந்தமில்லாத விளம்பரகளில் கூடப் பெண்கள் நடித்தால் ஒரு கவர்ச்சி இருக்குமே என்ற பெண்கள் பேயாக முன்னிலை படுத்துகிறார்களா என்பதுவும் தெரியவில்லை . சில ஆண்களுக்குப் பெண்கள்தான் பேய்கள் ,என்ற தனது சொந்த அநுபவங்களை யோசித்துப் பார்த்து இம்மாதிரி படங்களை வெற்றி பெற செய்கிறார்களோ ? என்பதுவும் ஒரு கேட்க கூடாத கேள்விதான் ( இந்தப் பதிவை என் மனைவி படிக்க மாட்டார்கள் என்ற தைரியம் இருக்கிறது ) இருந்தாலும் பாவம் பெண்கள் செத்த பிறகும் நிம்மதியா விட மாட்டேன்கிறார்களே என்ற ஆடு நனையுதே என்ற ஒரு பச்சாதாபம் நிலவத்தானே செய்கிறது !
சின்னப் பட்ஜெட்டை இருந்தாலே போதும் என்பதர்க்கு இம்மாதிரி படங்கள் எடுப்பதர்க்கு ஒரு காரணம் என்பதுவும் , அறிவை முன்னிறுத்தாமல் வேண்டிய அளவுக்குத் தனது கற்பனை சக்கரத்தை ஒட்டி கொள்ளலாம் என்ற கலைஞர்களும் செழுத்த வேண்டிய ஒரே கவனம் ஏற்கனவே பெண்கள் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை விலங்குகளைத் தாங்களே உடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருக்கும் நிலையில், சமூகத்தின் மத்தியில் பெண்கள் மட்டுமே பேய்களாக வருவார்கள் என்ற சித்தரிப்பை பற்றிக் கொஞ்சம் மாற்றி யோசிக்கலாமே.அதற்காகப் பேய் படங்கள் வரட்டும் என்பது எனக்கான எதிர்பார்ப்பு இல்லை.
அதை தாண்டிகண்ணுக்கு புலப்படாத பல சக்திகள் பல மனித உடலில் , ஆழ்கடலுக்குள் ,இந்த பூமியின் மையங்களை நோக்கி செல்லும்போது இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் , அதற்கான அடிப்படை அதார புவியீர்ப்பு விசயங்களில் நிறைய விசயங்கள் கொட்டி கிடக்கிறது .அதில் அறிவியல் கலந்து படையுங்கள் .பேய்களை ரசிக்கச் செய்யும் வல்லமை கொண்ட உங்களால் இன்னும் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்புகிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக