கடந்த அக்டோபர் 19, 2025 விடியல் பாரிஸ் நகர காவலர்களுக்கு இவ்வளவு பெரிய தலைவலி வரும் என்று தெரியாது.அதற்கு காரணம்,பாரிஸ் நகரின் லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Galerie d'Apollon (lit.'Apollo's) Gallery') நான்கு பேர் கொண்ட கும்பல் கட்டுமானத் தொழிலாளர்களைப் மிக அழகாக திட்டமிட்டு பிரான்ஸ் நாட்டின் லூபின் தொலைக்காட்சி தொடரைப் போல (TV series Lupin) சுமார் €88 மில்லியன் மதிப்புள்ள (இந்திய மதிப்பில் சுமார் 850-900 கோடி) பிரெஞ்சு கிரீட நகைகளை தங்கள் கைச்செலவுக்காக திருடிச்சென்று விட்டார்கள்.
நெப்போலியனின் படுக்கையறை!
ஆனால் நமக்கு அந்தத் திருட்டு சம்பவம் இங்கு முக்கியமில்லை.அதே அருங்காட்சியகத்தில் மோனாலிசா 1797-1800 இருந்து விட்டு பிறகு 1800-1804 ஆம் ஆண்டுவரை நெப்போலியனின் டியூலரீஸ் அரண்மனையின் படுக்கையறையை அலங்கரித்து விட்டு 1804 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கிராண்ட் கேலரியில் நிரந்தரமாக வருவோர் போவரையெல்லாம் பார்த்து ஸ்ஃபுமாடோ ஓவியநுட்ப(sfumato technique) புன்னகையால் 221 வருடத்திற்கும் மேலும் யார் வந்தாலும் புன்னகைத்துக் கொண்டே இருக்கின்றது.மர்ம புன்னகைக்கு சொந்தக்காரர்.
மோனாலிசாவின் (Mona Lisa) புன்னகை உலகில் பல கோடி மனதைக் கொள்ளையடிக்கும் தொடர்ந்து வரும் புன்னகை (“smile that follows you”) உலகப்புகழ் பெற்றது. பிரான்செஸ்கோ டெல் ஜியோகோண்டோவின் இரண்டாவது மனைவியான லிசா கெரார்டினிதான்(Lisa Gherardini) உண்மையிலே அந்த மர்ம புன்னகைக்கு சொந்தக்காரர்.மோனோலிசாவின் ஓவியத்திற்குள் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் இப்போதும் சுவரஸ்யமானதாக இருக்கிறதோ இல்லையா, அந்த ஓவியம் 1911 ஆம் ஆண்டு,முன்னாள் லூவ்ரே ஊழியரான வின்சென்சோ பெருகியா ( Vincenzo Peruggia) கஷ்டப்பட்டு இரவு முழுவதும் ஒரு அலமாரியில் ஒளிந்திருந்து மறுநாள் திருடிச்சென்று 1913 வரை வைத்திருந்து விற்க முயற்சிக்கும் போது மீட்டெடுக்கப்பட்டு திரும்பி கிராண்ட் கேலரி வந்த பிறகுதான் மோனாலிசா மிகவும் பிரபலமாகிப் போனார்!
(நம்ம ஊரில் அடிக்கடி காணாமல் போகும் அரசமரத்துப் பிள்ளையார் கதையை அவர்களும் கேட்டு இருப்பார்களோ என்னவோ?)
அதோடு அப்போது பற்றவைத்தது இன்னும் அணையாமல் புகைந்து கொண்டு இருக்கும் நெருப்பு அதை திருடிய இத்தாலியரான வின்சென்சோ பெருகியா,இந்த ஓவியம் இத்தாலி தேசத்து ஓவியரான லியோனார்டோ டா வின்சியால் படைக்கப்பட்டது நெப்போலியனால் இந்த ஓவியம் இத்தாலியிலிருந்து திருடப்பட்டது என்று அவர் உண்மையிலேயே நம்பினார்.அதனால் நான் இதை திருடியது தேசபக்தி கடமையாக நினைக்கிறேன் என்றார்.
ஆனால் புளோரண்டைன் கலை வியாபாரி ஆல்ஃபிரடோ கெரிக்கு ( Alfredo Geri, a Florentine art dealer)"லியோனார்டோ வின்சென்சோ" என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தி புளோரன்ஸில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 500,000 லியர்களுக்கு(lires) விற்க முயற்சிக்கும் போது தனது அதீத தேசபக்தியால் மாட்டிக்கொண்டார்!
இதனால் இந்த ஓவியம் யாருக்குச் சொந்தம் என்று இரண்டு தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது.ஆனாலும் லியோனார்டோவின் மரணத்திற்குப் பிறகு, அவரது உதவியாளரும் (உயிலில் குறிப்பிட்ட) வாரிசுமான சலாய்(Salai - Gian Giacomo Caprotti da Oreno), அந்த ஓவியத்தை மன்னருக்கு 4,000 தங்க க்ரௌன்ஸ் (gold crowns) விற்று விட்டதால் இது எங்களுக்கே எங்களுக்கு என்று பிரெஞ்சு குடியரசின் சட்டப்பூர்வ சொத்தாக அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எடுத்திருகிறது.ஆனால் நாங்கள் விடமாட்டோம் என்று இத்தாலி அரசு அடுத்த வருடம் ஃபெப்ரவரியில் இத்தாலியில் நடக்கவிருக்கும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கூட இதை பிரான்செஸ்கா கருசோ (இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியத்தின் கலாச்சாரத் தலைவர்) மையப்பிரச்சனையாக கொண்டு வருவோம் என்கிறார்.
வீட்டுச்சிறையில் மோனாலிசா!
ஆனால் அழகிற்கு ஆபத்தும் தொடரத்தானே செய்யும் என்பதைபோல 1956,1974,2009,20244 மற்றும் 2024 வரை அமிலத்தால், கற்களால், கேக்கால், சூப்பால் மற்றும் பெயிண்டால் இப்படி தொடர்ந்து தாக்கப்பட்டதால் தனியே பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் மோனாலிசா இப்போது மிகுந்த மதிப்புள்ள குண்டும் துளைக்காத கண்ணாடி சுவருக்குள் (a special, climate-controlled, bulletproof glass case ) வீட்டுச்சிறைக்கு உள்ளிருந்து இன்றும் நம்மை தனது துரத்தும் ஓவியப் பார்வை யுக்தியால் (Flat surface illusion) பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
(பாவம் மோனாலிசா! ஒரு பெண் தனித்து ஓவிய ரூபத்தில் கூட வாழ விடமாட்டேன்கிறார்களே?)
ஜியோகோண்டோவின் மனைவி லிசா (Lisa Gherardini) அழகா தெரியவில்லை.ஆனால் அந்த ஓவியத்தை உருவாக்கிய பன்முக கலைஞர் லியோனார்டோவின் கலை அர்ப்பணிப்பால் தான் அந்த பேசாமல் பேசும் மோ(மௌ)னாலிசாவுக்கு அழகு.கலைஞர்கள் எதையும் அழகாக்கும் திறமை கொண்டவர்கள்.
இத்தனைக்கும் லியோனார்டோ டா வின்சி இதே ஸ்ஃபுமாடோ ஓவிய நுட்பத்தை( sfumato technique பயன்படுத்தி ஏற்கனவே இதே ஓவிய நுட்பத்தால் 1.The Virgin of the Rocks 2.Lady with an Ermine 3.Saint John the Baptist 4.The Virgin and Child with Saint Anne 5.Ginevra de' Benci
மோனலிசா ஓவியம் ஏன் அழகாக இருக்கிறது?
"கண்கள் ஆன்மாவின் ஜன்னல்"
புன்னகை : ஒளிக்கும் நிழலுக்கும் இடையிலான மாற்றங்களை மங்கலாக இருப்பதால் பார்வையாளரின் பார்வையைப் பொறுத்து அவரது வெளிப்பாடு மாறுகிறது.
கண்கள் : ஒவ்வொரு கோணத்திலிருந்தும் பார்வையாளரைப் பின்தொடர்வது போல் தோன்றும் வகையில் உருவாக்கியிருக்கிறார்.
ஓவியத்தின் பின்னணி : மோனாலிசா பின்னால் உள்ள கனவு போன்ற நிலப்பரப்பு, புவியியல் மற்றும் இயற்கையின் மீதான அவரது ஈர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசாவின் கதை மர்மம், புகழ் மற்றும் கலைத் திறமையால் நிறைந்தது.புன்னகை வெறும் கலைப் படைப்பு மட்டுமல்ல; ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் முடிவற்ற கதைசொல்லலைத் தூண்டும் ஒரு புதிர் இது.
"கண்கள் ஆன்மாவின் ஜன்னல்" என்பதைப் போல டா வின்சியின் ஆன்மாவின் வழிப்பார்வையில் (Observing the Creator's eyes reveals the original) காணும் போது இந்த ஓவியத்தின் உருவாகத்தின் நோக்கம் தெரிய வரலாம்!
முடிந்தால் மோனாலிசாப் பற்றி ஆராய்ந்து அனுபவித்து டயான் ஹேல்ஸ் ( Dianne Hales), எ லைஃப் டிஸ்கவர்டு Mona Lisa, A Life Discovered, Dianne Hales என்ற புத்தகத்தை எழுதியுள்ளாராம்
நான் வாசிக்கவில்லை.