பொதுவாக முதல் முறையாக பெண் பார்க்க போவது என்பது ஒரு இனம் புரியாத உற்சாகமான விசயம் அதிலும் நண்பனின் சகோதரருக்கு பார்க்க போவது இரட்டிப்பு உற்சாகம் .நமக்கு அங்கு பொறுப்பேதும் இல்லை என்பதால் அங்கு நடக்கும் சகல விசயத்திலும் முடிந்தவரை ஓட்டு, ஓட்டு என்று ஓட்டலாம் .இன்னும் சொல்ல போனால் நண்பனின் குடும்பம் என்னை அந்த பெண் பார்க்கும் படலத்திர்க்கு கூட்டிகொண்டு போவதர்க்கு முக்கிய காரணம் என்னுடய சுபாவம் .முன் பின் அறிமுகம் இல்லாவிட்டாலும் எளிதில் ஒட்டி கொள்ளும் அந்த என் சுபாவம் .
இயக்கம் + நடிப்பு ..
இங்கு இன்னொரு முக்கியமான ’த்ரில்’என்னவென்றால் நாங்கள் பெண் பார்க்க மட்டும் போகவில்லை .அங்கிருந்து பெண்ணுக்கே சொல்லாமல் நண்பரின் வீட்டுக்கு அழைத்து வந்து அங்கும் நண்பனின் சகோதரருக்கு தெரியாமல் அவருக்கு எதேச்சையாய் பார்க்க வைத்து , பிடித்தால் மேற்கொண்டு தொடரலாம் என்பதே எங்களின் - பெண் பார்க்கும் நாடகம் .இதர்க்கு உதவி - எனது நண்பனின் இன்னொரு சகோதரரின் மனைவி . அவருடந்தான் திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சியில் இருக்கிறர் நாங்கள் தேடிப்போகும் உமா என்ற உமாமஹேஸ்வரி .இந்த நாடக அங்கத்தினர்கள் - நண்பன் அவரின் ,அண்ணன் ,அவரின் மனைவி .இயக்கம் + நடிப்பு - சாட்சாத் நானே .
ஆர்வமில்லாமல் சோளம்..
பெண்ணின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் இருந்தது .அந்த கிராமம் நோக்கி அண்ணன் , அண்ணி , நான் நண்பன் நாழ்வரும் போனோம் ..சில பஸ்கள் மட்டுமே வந்து போகும் அந்த ஊருக்கு நடந்து போவதே நல்லது என நடக்க ஆரம்பிக்க ...வழியில் ஒரு தரைப்பாலம். பெரிதாய் தண்ணி இல்லை .சில வயல்களில் மட்டும் சோளம் ஆர்வமில்லாமல் அசைந்து கொண்டு இருந்தது .இப்போது இருப்பது போல- ஏப்ரல் மாதத்தில் நாங்கள் போனதால் நடவு எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்டோம் .மற்றபடி அங்கொரு தோட்டத்திலும் இங்கொரு தோட்டத்திலுமாக அறுவடை போக மீதி நிற்க்கும் ஊடு பயிர்கள் முறைத்து கொண்டு இருந்தன .
முகம் சுழிக்காமல்..!
மிக பெரிய அறிமுக படலத்திர்க்கு பின்னர் நாங்கள் உமாவின் அம்மாவிடம் அனுமதி பெற்று பிற்பகல் வரவேண்டிய பஸ் வராததால் மீண்டும் நடந்து அதே தரைபாலம் ,சோளம்,முறைத்து கொண்டு இருந்த ஊடு பயிர்கள் கடந்து ,பிரதான சாலையிலிருந்து பஸ் பயனம் தொடங்கினோம் .வழக்கம் போல சிரிப்பு பட்டாசை கொளுத்த , நண்பனும் இணைந்து கொள்ள ,நாங்கள் அடித்த லூட்டியில் பஸ் பயனிகள் முகம் சுழிக்காமல் பல சமயம் வேடிக்கை பார்த்தனர். !!
நாடகத்தின் கிளைமேக்ஸ்..
நண்பன் வீட்டில் அம்மா ,அப்பா ,சகலருக்கும் பிடித்து போனதால் ,அண்ணன் வரவுக்காக காத்து இருந்தோம்.அதாவது எங்கள் நாட்கத்தின் கிளைமேக்சுக்காக !.வந்தார் ,பார்த்தார் , போகும்போது இது படித்த பெண் மாதிரி தெரியுது அவனுக்கே (என் நண்பனுக்கே) பாருங்கள் என்று ஒரு குண்டை மிக சர்வ சாதாரணமாக போட்டுவிட்டு போய்விட்டார் .இந்த நாடகத்தின் கிளைமேக்ஸ்- இயக்குனரான எனக்கே தெரியாமல் போய்விட்டது . ஆனால் இதில் இன்னொரு திருப்பமும் இருந்தது .அந்த பெண் போகும்போது அண்ணியிடம் எனது நண்பனை மிகவும் விசாரித்து விட்டு சென்றதாம் .போச்சுடா !
வில்லன்..அல்ல வில்லி ..
பிறகு வீட்டில் பேசும்போது இந்த விசயம் நண்பனுக்கு தெரியவரவே அவன் தனக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக நினைத்து பழக்கம் தொடர ,இருவருக்குமிடையே மிக ஆழமான காதல் வேரூண்றியது. அண்ணனுக்கு பிறகு பேசி முடிக்கலாம் என வீட்டில் பேசிக்கொண்டார்கள் .நண்பன் உற்சாகமா காதலை மேலும் தொடர ,ஒரு கட்டத்தில் நண்பனுக்கு பாண்டிச்சேரிக்கு வேலை கிடைத்து போக, ஒரு சின்ன தொய்வு காதலில் வந்தது .பொதுவாகவே காதல் என்று வந்தால் அதர்க்கு வில்லன் வேண்டுமே .அதுவும் நடந்தது .
அந்த பெண்ணின் அம்மாவுக்கு ஒரு தம்பி ( தாய் மாமன் ) இருந்தான் .அவன் இந்த பெண்வீட்டில் பெண்ணின் அம்மாவை தவிர வேறு யாருக்கும் பிடிக்காது .காரணம் கை நிறைய பணம் சம்பாதிப்பது காரணம் இல்லை . கூடவே சின்ன வயது அளவு மீறிய குடி .இதனால் யாரும் பெண் தர மறுக்க தம்பி பாசத்தில் அக்கா லேசாக தன் மகளின் காதல் தெரிந்தும் தம்பியை திருமணம் செய்ய தூண்ட ,நண்பனின் சந்திப்பு இடைவெளியை பயன்படுத்திகொள்ள ஒரு கட்டத்தில் அந்த பெண் நண்பனிடம் மன்னிப்பு கேட்டு தன் அம்மாவின் கட்டாயத்தையும் ,தன் வீட்டின் வருமையையும் காரணம் காட்டி காதல் விவாகாரத்து கோர - நண்பனின்அண்ணியும் இதில் தலையிட முடியவில்லை ,காரணம் அந்த வீட்டின் வறுமை + உறவின் அழுத்தம் =காதல் தோல்வி .
அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் .நண்பனின் அண்ணியுடன் தொடர்பு இருந்ததால், எனக்கு இதெல்லாம் தெரியும் . நண்பன் ஓரளவுக்கு இதெல்லாம் புரிந்து கொண்டு காதலில் இருந்து விடுபெற சில ஆண்டுகள் ஆகிவிட்டது. .பாண்டிசேரி வேலையும் தொடர விருப்பமில்லாமல் மீண்டும் திண்டுக்கல் வேலை .
அதர்க்கு சில வருடம் கழித்து நண்பனுக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை ஆன பிறகு மீண்டும் ஒரு நாள் உமாவிடமிருந்து போன் நண்பனுக்கு வந்தது .தனது கணவருக்கு இரண்டு சிறு நீரகங்களும் செயல் இழந்து விட்டதாகவும் தயவு செய்து உதவுமாறூம் கேட்க , எங்கிருந்தாலும் வாழ்க என்பது போல நண்பனும் உதவ தயாராக ,அப்புறம்தான் சட்ட சிக்கல்தடை செய்தது . இப்போது உள்ள நடைமுறைப்படி திருமணம் ஆகி இருந்தால் மனைவியிடமும் கையெழுத்து வேண்டும் .அதை கேட்க, அவர்கள் மறுத்து களேபரம் ஆகிவிட்டது .
எக்சேஞ்..
வேறு வழியில்லததால் அந்த பெண் (எக்சேஞ் அடிப்படையில்) அவள் கணவனுக்கு ஒரு டோனர் ஒரு சிறு நீரகம் கொடுக்க அதே போல் கொடுத்த டோனரின் உறவுக்கு இந்த பெண் ஒரு சிறுநீரகம் கொடுத்து இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
திண்டுக்கல்லில் வேலை... எங்கே...?
பதிலளிநீக்குDKT Bus Company / Texmo show room - Baskar Electricals ( Rolex Group )
நீக்கு