அன்று வந்த கடிதங்களை வாசிக்க வகைப்படுத்தும்போது , முதலில் சோவியத்யூனியனின் - மாஸ்கோ வானொலி நிலைய உறுப்பினர் வண்ண அட்டை , BBC தமிழோசையின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் அடுத்து அனுப்புனர் பெயரில்லாத இலங்கையிலிருந்து ஒரு கடிதம் .
வானொலி மன்றம்.
இது எனக்கு ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .உலகம் முழுதும் செயல் படும் வெளி நாடுகளில் உள்ள தமிழ் வானொலிகளுக்கு மட்டுமே கடிதம் எழுத நண்பர்கள் பலர் சேர்ந்து, மன்றம் வைத்து இருந்தோம். (பெயர்: சமாதான சகோதரர்கள் வானொலி மன்றம். அமெரிக்காவால் சோவியத்யூனியன் (USSR) உடைக்கப்படும் முன் அதன் அதிபர் மிக்காயேல் கார்பச்சேவ் - நமது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட உறவினை கொண்டாடும் விதமாக, இந்த பெயர் )அப்படியிருந்தும் சின்ன வயது முதல் கேட்டு வரும் இலங்கை வானொலிக்கு கடிதம் எழுதும் ஆர்வம் இல்லை .மேலும் அது வானொலி நிலையக்கடிதம் என்பதை அதன் அடையளங்கள் சொல்லவில்லை அப்படியானால்..
எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்படுத்தும் கடிதத்தை உடனே படிக்கமாட்டேன் .ஆனால் அந்த விரதம் அடுத்த நாள் கோவை பேனா நண்பர் முருகேசன் கடிதம் வரும்வரைதான் .அதில் இலங்கையிலிருந்து கடிதம் வந்ததா என விசாரிக்கபட்டு இருந்த போதுதான் எனக்கு தெரிந்தது .அது அவரின் நீண்ட நாள் தோழி நிர்மலாவால் அனுப்ப பட்டதென்று .
பிரபலங்கள் எழுதிய கதைகளை தாங்கி வரும் பல்சுவை நாவல் படிப்பது ஒரு காலத்தில் மிக முக்கியமாக கருதபட்ட சமயத்தில் அதில் வாசகர் வட்டம் ஏற்படுத்தியிருந்தார்கள் .அதன் மூலம் எனக்கு கிடைத்த பல நண்பர்களில் கோவை கலர் சாலை தோட்டத்தை சேர்ந்த முருகேசனும் ஒருவர் .பல மாதங்கள் இருவரும் கருத்துக்களை பகிர்ந்து உறவுகளை மேம்படுத்தி கொண்டு இருந்த போது ,அவர் எனக்கு எழுதிய கடித்தத்தில் தனக்கு இலங்கையில் நிர்மலா என்ற தோழி இருப்பதாகாவும் என்னுடய சில தவறுகளால் அவர்கள் என்னுடன் தொடர்புகொள்வதில்லை என்பதாகவும் ஆனால் அவர்கள் மிகவும் தனது சொந்த வாழ்வின் கசப்பான அனுபவங்களால் தவிப்பதாகவும் ,அவர்களுக்கு உங்களின் நட்பு ஆறுதல் தரும் என்பதால் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் என்று குறிப்பிட்ட கடிதம் வந்து சில மாதங்களுக்கு பிறகே இந்த நிர்மலாவின் கடிதம் .
கடிதம் மிக அழகிய இலங்கை தமிழில் அழகான மிக விசாரிப்புகளுடன் நீண்டதாக இருந்தது .பொறுமையாக படித்தபோது ,இங்கு நாம் வழக்கில் தொலைத்த பல தமிழ் வார்த்தைகள் என்னை திணறடித்தன ஆனாலும் ஒரு மெல்லிய ஆழமான நட்பின் தேடல் கடிதம் முழுதும் என்னை ஆக்கிரமித்தன ..
பிறகு மாதம் ஒரு கடிதம் வர தொடங்கியது .தான் ஒரு இளமை பிராயத்தில் அறியாமல் ஒருவரை காதலித்து கைவிட பட்டதாகவும் இதனால் வீட்டில் பெற்றோர்களின் அன்பை இழந்ததாகவும் , இப்போது படித்து விட்டு வேலைக்கு போன இடத்தில் பல ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒருவரை காதலிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார் .ஆனால் அது திருமணம் வரை போக சில சிக்கல்கள் இருந்தன. தனது காதலன் ஒரு சிங்கள வம்சாவளி என்பதால் ,அவர்கள் வீட்டில் சம்மதம் தடுமாறி கொண்டு இருப்பதாகவும் , அதனை பேசி முடிக்க அடுத்த மாதம் என் மேல் மிகவும் பாசம் உள்ள இரண்டாவது அண்ணன் வருகிறார் என்பதகாவும் அது நல்லபடியாக நிறைவேற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டு இருந்தார் நிர்மலா .
ஆனால் ,அடுத்த மாதம் கடிதம் வரவில்லை .எனது இரண்டு கடிதங்களுக்கும் பதில் வரவில்லை ,மேலும் அப்போதுதான் இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கை தீவை தனது கட்டுபாட்டில் வைத்து கொண்டு இருந்தது .இதனால் இனம் புரியாத கவலை என்னை துரத்த தொடங்கியது .அதர்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக மூன்றாவதாக நான் எழுதிய கடிதம் எழுதினேன் .ஆனால் அதை அனுப்பும் முன் ஒரு கடிதம் 1987 டிசம்பர் மாதம் வந்தது .ஆனால் அது கடிதம் அல்ல எனக்கு தண்டனை !.
ஆம் .அந்த கடிதம் வந்தது நமது இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) அங்கு சென்ற சமயத்தில் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு கொள்கை அளவில் முரண்பாடு ஏற்பட்டதால் .(இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய உளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது .இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படை தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார்.)
புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது .இந்த போரில் நிர்மலாவின் காதலன் வீட்டு அருகே நடந்த புலிகளுக்கும் - நமது அமைதிகாக்கும் படைக்கும் நடந்த யுத்தத்தில் நமது இந்திய ராணுவ வீரனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட ஒரு குண்டின் சிதறல் தவறிபோய் நிர்மலாவின் காதலனின் வயதான பாட்டியின் காலில் பாய்ந்து இறந்து போகவே மீண்டும் கை கூட இருந்த நிமலாவின் உறவு இந்த காரணத்தால் மறுதளிக்கப்பட்டதாம் .
இதில் மனம் உடைந்து போன தனது அண்ணனை சில நாளுக்கு பிறகு இலங்கை ராணுவத்தால் விடுதலைபுலி என்று சந்தேகப்பட்டு வாயில் சுடபட்டு நடு ரோட்டில் கொல்லபட்டதாகவும் ,தனது அன்பு வாழ்கையும் , எனது மேல் பாசம் காட்டிய ஒரே ஜீவன் அண்ணன் இறப்பும் ,தனது வாழ்வில் மீளா சோகத்தில் தள்ளிய பின் நான் எங்கு போகிறேன் எனக்கு தெரியவில்லை ,எனவே மீண்டும் நான் இதை எல்லாம் தாங்கி கொண்டு பிழைத்து வந்தால் உங்களுடன் தொடர்புகொள்கிறேன் என முடிந்திருந்தது அந்த கடிதம் ..
எனக்கு தெரிந்த ஒரு நிர்மலாவின் நிலையே இவ்வாறு என்றால் இப்போது எத்தனை நிர்மலாவின் வாழ்கையின் சீரழிவை அந்த ராவண பூமி விதைத்து இருக்கிறது என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும் ...
வரலாறு ..( என்ன சொன்னாலும் அங்கு இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பது வெறும் இரக்கமற்ற காகிதங்கள் மட்டுமே ! )
காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என்று சிலர் கூறுவர் சிலர் கி.மு இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவர்.அன்றைக்கு கலிங்க நாட்டினில்(இன்றைக்கு வங்க நாடு/ஒரிசா) இருந்து வெளியேற்றப்பட்ட போரில் தோற்று ஓடிய (அவன் நாடு கடத்தப்பட்டவன் என்ற கருத்தும் நிலவுகின்றது) ஒரு இனக் குழுவின் இளவரசன்-விஜய சிங்கன் என்பவன் அங்கிருந்து தெற்கே பயணித்து, இலங்கை என்று இன்று அழைக்கப்படும் தீவிற்கு வந்தப் பொழுது அங்கே ஏற்கனவே தமிழர்கள் ஆண்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும்(இயக்கர்கள் என்றும் நாகர்கள் என்றும் அசுரர்கள் என்றும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. ஆனால் அம்மக்கள் தமிழர்கள் என்றே வரலாறு நமக்கு காட்டுகின்றது )அங்கு இருந்த தமிழ் பெண் இளவரசி குவேனியை மணம் முடிப்பதில் இருந்து தான் சிங்களவர்களின் வரலாறே தோற்றம் பெறுகின்றது என்பதும் தான் உண்மை .இதர்க்கு சாட்சி
இலங்கை அரசு வெளியிட்ட ஒரு தபால் தலையாகும். அதனில் விஜய சிங்கன் இலங்கைக்கு முதல் முதலாக வரும் பொழுது அவனை அங்கே இருந்த தமிழ் இளவரசி பார்த்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கின்றது. இதிலேயே அறிந்துக் கொண்டு விட முடியாதா இலங்கையின் பூர்வீகக் குடியினர் யார் என்று? ( நன்றி - http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/2.html)
இனி , ஒண்ட வந்த பிடாரிக்கும் ஊர் பிடாரிக்கும் வித்தியாசம் யாராவது காட்ட வேண்டும் என்றால் இந்திய வரைபடத்தில், தமிழகத்தின் தொங்குசதையாக இருக்கும் பார்வதியின் சாபம் பெற்ற ராவணத்தீவை காட்டுங்க்ள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக