அமைதியான இரவில் கட்டிலில் இருந்து நழுவி விழுந்தது போன்ற கனவு .
விலுக்கென்று விழித்து எழுந்தால் விழவில்லை.
உடல் விழவில்லை ஆனால் அதிர்ச்சி கீழே கிடந்தது.
வாழ்க்கை மிக வினோதமான கானல் நீரால் வரையப்பட எல்லைக் கோடு.
படிப்பு முடிந்தால் வேலைதான் எல்லைக்கோடு என்ற மனதின் ஒரு நினைப்பு.
வேலை. அடுத்து அதில் நல்ல வேலை,சம்பளம் ...
கைக்கு காசு வந்ததும் காதல்..திருமணம்...
மனவியை மகிழ்விக்க தொங்கும் தோட்டங்கள்..
குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்கள்...
இப்படி கானல் நீரால் வரைந்த எல்லைக் கோடு மெல்ல மெல்ல நகர்ந்து வெகுதூரம் போய்க்கொண்டே இருக்கிறது.
இது ஓரளவு முடிவுக்கு வரும் போது ...
அவரவர் வேலை முடிந்து விட்டது போல!
இப்போது நமது விருப்பங்கள் வெற்றிகள்,சாதனைகள் எல்லாவற்றில் அடையாளமும் கலங்கிய நீரில் தெரியும் பிம்பமாய்..
ஓடிக் களைத்த நதியின் சத்தமாய் சலசலக்கிறது.
இப்போது மனசு இன்னும் டீக்கப்பின் அடியில் தேங்கிக் கிடக்கும் சரியாக வடிகட்டப்படாத தூளைப் போல ஓய்ந்து கிடக்கிறது.
வெகு தூரம் ஓடி வந்து விட்டோம்.
திரும்பிச் செல்லக் கூட திராணி இல்லை.
இது சலிப்பல்ல.
தொலைந்து போன்றதோர் நினைவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக