புதன், 8 ஆகஸ்ட், 2012

முதல் தகவல் !


காலையில் 2008 ஆம் ஆண்டிற்கான கணக்கில் டாக்ஸ் கட்டவில்லை என்ற வருமான வரித்துறையின் துரித ! நடவடிக்கையில் எங்களுக்கு வந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆடிட்டர் ஆபீஸ் போனபோது காலை 9:30 .வழக்கம் போல மெதுவாக வந்து அதற்கான கடிதத்தை தயார் செய்து கொண்டு இருந்த போது ...
அந்த அலுவலகத்தில் பஸ்ஸில் வந்து பணிபுரியும் நபர் ஒருத்தர் வந்ததும் வராதுமாக TEA PUBLIC School பஸ் விபத்து ஆகிவிட்டது .ஆறு குழந்தைகள் இறந்து விட்டார்களாம் என்று ஒரு குண்டை போட .
அப்போதுதான் பணிக்கு வந்த அனைவரும் உறைந்துபோனார்கள் .நான் இதில் இன்னொரு மோசமான விஷயம் .அந்த ஆடிட்டர் ஆபீஸ் தலைமை ஆடிட்டர் குழந்தைகளும் அந்த பள்ளிதான் .

நான் விசயத்தைஅறிந்துகொள்ள வீட்டில் உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்து விவரம் கேட்டால் .அப்படி இல்லை என்று சொன்னார்கள் .இங்குதான் நான் தப்பின் ஆட்டத்தை தொடங்கினேன் ஆர்வகோளாறால் ! கம்பனி பாஸுக்கு தெரிந்தவர்கள் பலர் படிப்பதால் ,அவரிடம் அப்படியே நான் கேள்விப்பட்ட மாதிரி சொல்லிவிட்டேன் .அவர் அப்போது நடந்த மீட்டிங்கை ரத்து செய்து இதை விசாரிக்க ...
அடிபட்டது உண்மைதான் .ஆனால் ஒருசிலருக்கு காயம் மற்றபடி ஒன்றுமில்லை இந்தமாதிரி  தப்பான தகவலை தரகூடாது என்று கண்டித்து போனை துண்டித்தார் .

கூட்டத்தில் அடிபட்டுகிடப்பதை வேடிக்கை பார்க்கும்   புத்தியும் ,எந்த தகவலையும் ஆராயாமல் அப்படியே எடுத்துகொள்ளும் மோசமான புத்தியும்  இனிமேல் என் வாழ்கையில் நடக்கவே கூடாது என்ற தீர்மானத்தை எடுத்துக்கொண்டேன் .

ஒருவேளை  இந்த பள்ளியில் படிக்கும் பெற்றோருக்கு நேரடியாக தெரிந்து இருந்தால் எத்தனை துயருக்கு ஆளாகி இருப்பார்கள் .
எனவே எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் ...திருவள்ளுவர் தாத்தா படம் என்னை முறைப்பது போல பட்டது .

புதன், 1 ஆகஸ்ட், 2012

உடைந்த இதயத்துடன்

நேற்று இரவு ஏழுமணிக்கு கம்பெனி ஸ்டாப்ஸ் பேசிக்கொண்டு இருந்தபோது ,பேச்சுவாக்கில் நாளை கம்பனி பாஸ் பிறந்த நாள் பற்றி பேசினோம் .இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக ஏதாவது பண்ணலாமா  என்று கேள்வி எழுந்த போது எல்லாரும் என் வேலையை காலிபண்ணும் நோக்கத்தில் வில்லங்கத்தனமான ஐடியா கொடுத்தார்கள .

ஒருவர் மட்டும் சற்று சற்று வித்தியாசமாக நாம் காலையில் சார் வந்தவுடன் பரிசு கொடுப்போம் .மாலை அவர் தரும் பார்ட்டியில் கலந்து கொள்வோம் என்று பேசினோம் .நிச்சயமாய் SKC பார்ட்டிதான் கொடுப்பார் .வேறு புஸ்ஸ் ..

இதில் வழக்கம்போல பணம் அதாவது ஐடியா சரிதான் பரிசுக்கு பணம் ?
நிறைய பேர் கேட்டவுடன் அடுத்த கம்பனி ஆர்டர் பற்றி சம்பந்தம் இல்லாமல் பேசுவது போல பேசிவிட்டு எஸ் ஆகிவிட்டார்கள் !

வழக்கம்போல யார்முதல் பேசினோமோ அவர்களே எப்படி அங்கும் இங்கும் பேசி பணம் திரட்டி ஒருவரை அனுப்பி பரிசை தேர்வு செய்ய அனுப்ப அவர் பட்ஜெட்டை மனசில் வைத்து பல கடை ஏறிவிட்டு மூன்று டிபார்ட்மெண்டுக்கு ஒவ்வொரு  பரிசாக மூன்று பரிசு வாங்கிவிட்டார் .

பார்ட்டி ...
முதல் டிபார்ட்மென்ட் பரிசு - பரிசை பிரித்த பாஸ் சந்தோசப்பட்டார் .ஒரு ரோபோ கடிகாரத்தை ஏந்திய மாதிரி .
அடுத்து ,அடுத்த டிபார்ட்மென்ட் பரிசு-இரண்டு புறாக்கள் ஒரு குழந்தையை காப்பது போல அதுவும் பிடித்துபோக ..

எங்கள் முறை வந்தது...
 பெரிய கவர்  பிரிக்க மேலே ஒட்டியிருந்த பள ,பள கவரை பிரிக்க போராடி பிரிக்கும்போது டம ,டம சத்தம் உள்ளுக்குள் கேட்க்க .எங்களுக்கு லேசாய் பயம் அது ஒரு பெரிய பறக்கும் விமானம் மினியேச்சர் ...ஒரு வழியாய்
அதன இறக்கை,மற்றும் பாயில்ஸ் முன்புறம் இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் அத்தனையும் தனித்தனி பாகங்களை சேர்த்து பார்க்கும்போது ஏற்கனவே டம ,டம விசயத்தில் உடைந்தது அழாகான அந்த இரண்டு + இரண்டு சுழலும் சக்கரம் (பேன்ஸ் )அவுட் ! உடைந்து விட்டது .

அவர் பெருந்தன்மையாய் கண்டுகொள்ளவே இல்லை .ஆனால் ஏற்பாடு பண்ணிய எங்கள்  தொகுதியிலே கள்ள வோட்டு என்பது போல ஆகிவிட்டது .மெல்ல அசடு வழிய ...நாங்கள் ஒருவரை பார்த்துக்கொண்டோம் ..

இனிமேல் இந்தமாதிரி நூதனமான பாகன்களை கொண்ட பரிசை யாருக்கும் கொடுக்கவே கூடாது சாமி .கொடுத்துவிட்டு அசடு வழிந்து அள்ளிகொள்ளவும் வேண்டாம் என்று போனில் பேசிக்கொண்டோம் .
.உடைந்த இதயத்துடன் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் என்று இந்த சரித்திரம் எங்களை பேசலாம் !


செவ்வாய், 31 ஜூலை, 2012

அவஸ்தை

ஒரு விசயத்தை உருப்படியா செய்ய தெரியாம ஆரமபத்திலேயே சொதப்பி முதல் கோணலை ஏற்படுத்திய அனுபவம் .

வீட்டுக்கு மதியம் சாப்பிட போகும்போது லோக்கல் சேனலில் மொழி மாற்ற படம் போட்டு இருந்தார்கள் .நான் பார்க்காத படம். அதுவும் மொழிமாற்றம் பண்ணிய சைனீஸ் படம் .பெயரும் தெரியாது .

முழுப்படம் பார்க்கவில்லை .ஒரு ஆற்றில் தோணி ஓட்டுகிறான் ஒருவன் .அவனுக்கு மூலிகை சேகரித்து அதை வயித்தியம் செய்வது பழக்கம் .இந்த நிலையில் ஒரு மலைமேல் மூலிகை பறிக்கும்போது தவறி ஆற்றில் விழுகிறான் .விழுந்தவனை கடல் மச்சகன்னி போல ஒருத்தி வாய் வழியாக மூச்சை செலுத்தி காப்பாற்றுகிறாள் ..அப்புறம் அவள் அவனை தேடி வருகிறாள் .கதை அப்புறமாய் போகிறது ....

ஆனால்  விஷயம் அதுவல்ல அப்படி அந்த லோக்கல் லோக்கல் சேனலில் அது திருடப்பட்ட வெப் அட்ரஸ் தெரிந்தது .சரி ஆபீசில் ஒரு மேடம் இந்த மொழிபெயர்ப்பு படங்களை  மிக உசத்தியாக பேசுவார்கள் சரி அவர்களுக்கு போன்  பண்ணி சொன்னேன் .அந்த முகவரி சொன்னேன் .

இங்கு நான பண்ணிய தப்பு அதை நான் சோதித்து  சொல்லியிருக்க வேண்டும் .நான் கொடுத்த முகவரி எதார்த்தமாக இருந்தது . எனவே போனில் சொல்லிவிட்டேன்  .அப்புறம் சில பேங்க் வேலை .மறந்தே விட்டேன் .

நான் ஆபிஸ் வந்தபோது அவர்கள் இல்லை .மறந்துவிட்டேன் .ஆனால் இந்த பதிவுக்கு சில மணி நேரத்திற்கு முன்னாள் போனில் அழைத்து எவன் சார் இந்த அட்ரஸ்  உங்களுக்கு கொடுத்தான் என்ற போதுதான் எனக்கு வயிற்றில் அமிலம் சுரந்தது .நமக்குத்தான் நல்ல பெயர் நாம் செய்ததாகவும் கெட்டது செய்தால் முகம் தெரியாத எவனையாவது இழுத்து விட்டுருவேமே ?ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்து ,நான் அந்த முகவரியை இன்டர்நெட்டில் தேடிப்பார்த்தால் அடபாவிகளா ?

அத்தனையும் நீலப்பட விவகாரங்கள் .நான் மட்டும் பார்த்திருந்தால் ஒருவேளை சந்தோசப்பட்டு இருப்பேன் .ஆனால் இப்போ மானம்,மரியாதை கப்பலேற்றிவிட்டேனே ?இது என் தப்புதான் ஆனா யோசிச்சு பாருங்கள் .திருட்டுமசாலா என்பது ஒரு தப்பாகா இருக்குமுன்னு என்னால தப்பாக நினைக்க முடியலே !

ஒரு வேளை உங்களுக்கு இப்படி அவஸ்தை ஏற்பட்டு இருக்கா ?

திங்கள், 30 ஜூலை, 2012

வம்பு பேசலாம் !


பொதுவாக எழுதுகிற கையும், ________________ நிற்காது என்கிற பழமை உண்டு .நானும் விதி விலக்கல்ல ! எனக்கு தெரிந்ததில் ஆரம்பித்து தேடுகின்ற பொது என்னை இடறியது பல நல்ல விசயங்கள் .

பரீட்சைக்கு படிக்கும்போது எதையாவது மனப்பாடம் செய்யலாம் என்கிறபோது கவிதை வரும் நல்ல விளம்பரம் காதில் விழும் அதை நோக்கி மனம் நகரும் ..அது போல நான் தெரிந்த பார்முலா 1 போட்டிகளை எழுத தொடங்கினேன் ( Logic ).அப்புறம் கொஞ்சம் கவிதை போல சில வரிகளை பதிவிட்டேன்( Romance ) ஆனாலும் ஏதோ நெருடல் இருந்துகொண்டே இருந்தது


அது அன்றாட நிகழ்வுகள் ...இன்னைக்கு காலையில் சன் தொ.கா வழங்கும் வாங்க பேசலாம் எனக்கு வம்பு பேசலாம் என்பதாக பட்டது .பாரதி பாஸ்கர் அஸ்ஸாமில் ஒரு பெண்ணை இருபது காட்டுமிராண்டிகள் அசிங்கபடுத்தியதை தவறு என்பதாக சொல்லும்போது ராஜா அந்த பெண்ணுக்கு, அதுவும் +1 படிக்கிற பெண்ணுக்கு குடிக்கிற இடத்தில என்ன  வேளை? என்று கேட்க்க நீங்கள் தவறை விட்டுவிட்டு அதற்க்கு தண்டனை தருவதை விட்டுவிட்டு அந்தப்பெண் அங்கு என்ன வேலை என்கிறீர்கள் இது தப்பு என்று என்று வம்பு பேசுமாறு ஆகிவிட்டது .இருவருக்குள்ளும் உள்ள அந்த பட்டிமன்ற புத்தி விசயத்தை வேறுபக்கம் இழுத்து விட்டது .

அது போல திருப்பூரில் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவர்களை நூறு அடிதள்ளி நின்று கொண்டு அதுவும்  ஏதாவது மூலை ஒன்றில் நின்று கொண்டு வாய் ஊத சொல்லும் அபத்தம் போல !

 பையனின் பள்ளிகூடத்தில் பெற்றோர்கள் மீட்டிங் கூப்பிட்டு நமக்காக பேசுவதுபோல ஆரம்பித்து அடுத்த கட்டணத்தை கூட்டும் குண்டை போடுவது 

இது  போல பல  இடறிய விசயன்களை பேசலாமா ..