எல்லோரும் நியூட்டனின் மூன்றாம் விதியை துரத்தி கொண்டு இருக்கும் போது நான் மட்டும் முதல் விதியை காதலித்தேன் .அது ”ஒய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஒய்வு நிலையிலேயே இருக்கும். இதுபோன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும்”. இதை நான் விரும்ப காரணம் அது "மனதில் இருக்கும் நம் எண்ணங்களுக்கு ஏற்ப நம் சூழ்நிலை அமைக்கிறது. நாம் எந்த சூழ்நிலையை விரும்புகிறோமோ அதற்கேற்ப நம் மன எண்ணங்களை அமைத்துக் கொள்ளும் போது நம் வாழ்க்கை நம் விருப்பம் போல் அமைகிறது" (THOUGHT EVOLVED BEING) என்ற ஜேம்ஸ் ஆலன் கருத்தோடு ஒத்து இருந்ததாக பட்டது அதனால்தான் .
சரி, இதர்க்கும் எனது TVS இண்டர்வியூக்கும் எப்படி தொடர்பு ...?
எனக்கு சின்ன வயதிலிருந்தே TVS நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆசை என் வயதோடு வளர்ந்து வந்து விட்டது . நான் பிறக்கும் முன்னே அப்பா LGB நிறுவனத்தில் சேர்ந்துவிட்டார் .அப்போது இந்த இரண்டு போக்குவரத்து நிறுவனங்கள்தான் முடி சூடிய சாலை மன்னர்கள் .முக்கியமாக TVS நிறுவனத்தின் ஒழுக்கம் , கட்டுப்பாடு மற்றும் புரிதல் என்னை பெரிதும் கவர்ந்தது .இன்றும் வேறு எந்த நிறுவனதின் போக்குவரத்து வாகனங்களிலும் ஒரு உதவியாளர் என்று சொல்லக்கூடிய கிளீனர் இல்லாத வாகனங்களை பார்க்க முடியாது ஆனால் TVS வாகனங்களில் ட்ரைவர் மட்டுமே இருப்பதை பார்க்கலாம் !
மேலும் +1 படிக்கும் போது ஒரு நண்பர் சொன்னார் TVS வேலைக்கு ஸ்போர்ட்ஸ் முன்னுரிமை உண்டு என்றார் .அந்த சமயம் கிரிகெட்டில் ஒப்பனிங் பேட்ஸ் மேனாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பட்டயை கிளப்பி கொண்டு இருந்தார்.அதனால் அதுவரை பிடிக்காத கிரிகெட்டை கெட்டியாக பிடித்து கொண்டேன் .நான் இடது கை பழக்கம் உள்ளவன் என்பதால் அங்கு அது மிகவே உதவியது .
+2 மிக சராசரியான மதிப்பெண் பெற்றதால் அடுத்து எங்கு சேருவது என்று யோசிக்க நேரம் எடுத்து கொள்ள அப்பா திண்டுக்கல் அரசினர் தொழிற் பயிற்சியில் சேர்த்து விட்டர்.
அங்குதான் ,கும்பிட போன தெய்வம் குறுக்கே வருவது போல எனது ஐடிஐ கேம்பஸ் இண்டர்வியூ TVS ஓசூரிலிருந்து வந்து இருந்தார்கள் 13 பேரில் ஐவர் மட்டுமே தேர்வானோம் .மிக ஆர்வத்துடன் நேர்முகதேர்வுக்கு ஒசூர் போனோம்.அன்று எனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் இருவரும் முதலில் அழைக்கபட்டார்கள் .அப்போது அவர்களிடம் கேட்க்க பட்ட கேள்விகளில் ஒன்று புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி ..அதர்க்கு இருவரும் எங்களுக்கு அதை கற்று கொடுத்தவர் பின்னாள் வருகிறார் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார்கள்
நான் போன உடன் கேட்க பட்ட கேள்வியில் அதுவும் ஒன்று .அத்துடன் யார் எழுதியதெல்லாம் படிப்பீர்கள் என்பதையும் கேட்டார்க்ள் இப்போது நேரம் குறைவு என்பதால் கொஞ்சம் செலெக்டிவாக படிக்க வேண்டியதாக இருக்கிறது அப்போது அப்படி இல்லை . கிடைத்ததெல்லாம் படிப்பதால், சொன்னேன். .கடைசியாக ஒரு கேள்வி என யூனியன் ,சங்கம் அவசியமா என்பது போல கேட்டார்கள் . . மிக முக்கியம் என்றேன் .அதர்க்கு அவர்கள் நீங்கள் ஒரு நிறுவனத்தை நம்பி சேரும்போது பிறகு அந்த நிறுவனம் அவர்கள் மீது எடுத்து கொள்ளும் அக்கரையை விட உங்கள் யூனியன் சாதித்துவிட முடியுமா என்று தொடர்ந்து கேட்ட போது கூட என்று கேட்டபோது எனது படிப்பறிவு அந்த கூர்மையான கேள்வியின் பின் புலம் தெரியாமல் பதில் சொல்ல வைத்தது. நிறுவனத்திர்க்கும் – தொழிலாளிக்கும் யூனியன்தான் உறவு பாலம் என்றேன் பிடிவாதமாக . அப்படி நான் சொல்ல காரணம் அப்பா இங்கு திண்டுகல்லில் LGB யூனியன் லீடர் .
என்னுடன் கலந்து கொண்ட எல்லோருக்கும் கம்பனி அப்ரண்டீஸ் தேர்வு செய்து கடிதம் வந்தது என்னை தவிர .பிறகு ஒசூரில் பை மெட்டல் பேரிங் என்ற கம்பனியில் வேலை பார்க்கும் என் சீனியரிடம் விசாரித்தபோது அவர் சொன்னார் . யூனியன் பற்றிய அந்த பதில்தான் மற்றவகளை விட மார்க் இருந்தும் உனக்கு வேலை கிடைக்காமல் போகவைத்து விட்ட்து. நீங்கள் இண்டர்வியூ வந்த போது யூனியன் பிரச்சனையால் கம்பெனி காலவரையற்று மூடி இருந்தது என்றார்.அப்போதுதான் எனக்கு புரிந்தது குறுக்கே வந்த கடவுளை நான் தள்ளிவிட்டு விட்டேன் என்பதை .
திண்டுகல்லில் சசிகுமார் நம்பி எடுத்த படமெல்லாம் ஓடும்போது ,போத்தீஸ் விளம்பரத்தில் சிவ கார்த்திகேயன் சொன்னது போல என்னுடைய TVS வேலை என்ற கலர் பட காட்ட முடியாமல் போய்விட்டது .ஆனாலும் சசிகுமார் நண்பர் சமுத்திரக்கனி சொன்னது போல கிடைத்ததை விரும்ப பழகி கொண்டேன் .
ஆனால் நான் வைத்து இருப்பது TVS -Star City .இதில் என் கனவு நிறைய நிரம்பிவிட்டது
இந்த பதிவில் என்னுடன் ஐடிஐ படித்து ,பிறகு என்னுடன் இண்டர்வியூ வந்து புத்தகம் படிக்க கற்று கொடுத்தவர் என்று சொல்லி விட்டு TVS வேலையில் பணிபுரியும் நண்பர் சாரி ராமன் ( இது பெயர்தான் ) பற்றிய சில வேடிக்கை, அடுத்த பதிவில் ..
/// நம் வாழ்க்கை நம் விருப்பம் போல் அமைகிறது... ///
பதிலளிநீக்குஅருமை... ரசித்துப் படித்தேன்... வாழ்த்த்துக்கள்... தொடர்கிறேன்...
நன்றி சார் .
நீக்கு