வியாழன், 20 ஏப்ரல், 2017

யாளி – நாவல் மதிப்புரை. #Yali - Mythology animal .



                   சில ஆண்டுகளுக்கு முன், உயிரினத் தன்மாற்றம் எனும் #வேதாத்ரிய டிப்ளமோ பாடத்தின் போது ஒரு பேராசிரியர் யாளிஎன்ற உயிரினம் பற்றிச் சொல்லியபோதுதான் எனக்கு இந்த யாளி விலங்கினம் ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டேன்.இது இந்தியக் கோவில்கள் தொடங்கி வெளிநாடுகளிலுள்ள கோவில் முழுதும் நீக்கமற நிறைந்து இருப்பதன்முக்கியத்துவத்தைத் தேடத்துவங்கினேன் .எனக்குத்தெரிந்த எல்லோரும் பா.ராகவனின் – ”யாளி முட்டை” என்றகதையில் வருவதைப் போல யாளி என்பது மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் வினோத விளைவு,சிற்பிகளின்கவிதாபூர்வமான கற்பனைகள் Mythological animal என்றே சொல்லி அலைகழித்தார்கள் . 

             அப்போதுதான் மணி தணிகைகுமார் இது பற்றிய ஒரு நாவல் 2010 ஆண்டு (ரூ-150) கற்பகா இண்டஸ்ட்ரீஸ் மூலம்வெளியிட்டு இருப்பதை அறிந்துத் தேடத் தொடங்கினேன்.முதல் பதிப்பு முற்றும் தீர்ந்த நிலையில் எங்கும்கிடைக்கவில்லை மீண்டும் அதன் இரண்டாம் பதிப்பு எல்.கே.எம். பப்ளிகேஷன் மூலம் சிறு மாற்றங்களுடன்வெளியிடப்பட்டது (ரூ- 290) 

அப்படித்தேடித் தேடி வாங்கிப் படிக்கும் அளவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம் ? 

                      அதை அந்த நாவலாசிரியர் மணி தணிகைகுமார் தனது முன்னுரையில் சொல்கிறார்.. என் கதாநாயகன் யாளிஉலகத்தரம் வாய்ந்த படைப்பு என்று தன்னம்பிக்கையுடன் தொடங்கும் நாவாலாசிரியர் இது மாபெரும் புதினம்மட்டுமல்ல சிற்பிகளின் கற்பனையில் மட்டுமே வாழ்ந்த மிருகமாகச் சித்தரிக்கப்பட்டு வந்த யாளியின் பரிணாமத்தைச்சொல்லுவதே தனது தணியாத தாகம் என்கிறார். 

கதைக்கரு : 

                            ஆங்கிலேய ஆட்சியின் போது வரை யம் அலைஸ் சான்ரோ என்பவர் 1896 – 1908 தமிழகத்தின் பணிபுரிந்தபோது1899 ஆம் ஆண்டில் ஒரு வழக்கு நீதிமன்றம் படியேறியது.வழக்கு, ஒரு கோவிலும் அதன் நிலங்களுக்கும் இரண்டுகுடும்பங்கள் சொந்தம் கொண்டாடியது.அதை ஒரு குடும்பம் கலெக்டர் சான்ரோவைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துஇந்தக் கோவில் தங்களுக்கு மட்டுமே எப்படிச் சொந்தம் என்பதாகவும் அதற்கு முக்கியச் சாட்சியாகத் தங்கள்குடும்பம்தான் பரம்பரைப் பரம்பரையாகக் காத்து வரும் ஒரு ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று சத்தியம்வாங்கிக் கொண்டு காட்டுக்கிறது. அது அவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வரும் உலகில் எங்கும் காணப்படாதத்தொன்மவியல் உயிரினத்தைக் காட்டுகிறது . அந்த உயிரினம்தான் இந்தக் கதையின் கதாநாயகன் “யாளி” 

                     இதைத் தன் நாட்குறிப்பில் கலெக்டர் சான்ரோவை எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்ட பிறகு லண்டனின் வசிக்கும்அவரின் கொள்ளுப்பேரன் அலெஸ்சாரோ பெக்மேன் மற்றும் பேத்தி மேரியானோ லிண்டாவாலும் வாசித்துஅறியப்படுகிறது .அந்த உயிரினத்தைத் தாங்கள் நேரில் காண வேண்டும் என்று அவர்கள் எடுத்த முயற்சியின்விளைவில்தான் இந்தக்கதைப் பின்னப்பட்டு வெளிவந்திருக்கிறது .அவர்கள் இந்தியாவில் அந்த உயிரினத்தைக் காணத்தங்கள் உதவிக்கு அங்கு லண்டனில் மென்பொருள் பணியில் இருக்கும் சரவணன் என்ற மென்பொருளாளரைத் தேர்வுசெய்கிறார்கள். இந்தத் தேடல் பணிக்கு ஒத்துழைத்தால் சரவணனுக்கு அம்பது லட்சம் கொடுப்பதாகப்பேசப்படுகிறது.சரவணன் சொந்த ஊர்க் கன்னியாகுமரி. தமிழகத்திற்குப் பெக்மேன் மற்றும் சரவணனும்வருகிறார்கள்.அவர்கள் சென்னையின் பார்த்த சாரதி கோவிலின் கிழக்கு வாசலில் தொடங்கித் திரு அழகர் குடியில்முடிகிறது .( தணிகைகுமாரின் இஷ்ட தெய்வம் திருக் குறுங்குடி திரு அழகிய நம்பிராயர் பெருமாள் ) அவர்கள் தேடல்படலமும் அதிலுள்ள ட்விஸ்டுகளும் , சுவாரசியமும்தான் மொத்தக் கதையுமே . 

கதை சொல்லும் விதம் : 
                    நாவலாசிரியர் மணி தணிகைகுமாருக்கு இது முதல் நாவல்.ஆனால் அப்படி ஒரு இடத்திலும் அவரின் எழுத்தின்கன்னித்தன்மைக் கண்டுபிடிக்க முடியாத அளவில் அற்புதமாக ஒவ்வொரு கதாப்பாத்திரப்படைப்பிலும் அவரின்வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தந்தப் பாத்திரங்களுக்கு உரிய வட்டார, சமூகத்தன்மையில் எண்ணவோட்டங்களில்பேசுவதை வாசிக்கும்போது தணிகைகுமார் இப்போதுதான் நாவலாசிரியராக ஆகியிருக்கிறார் என்பதைத் துளியும் நம்பமுடியவில்லை .நாவல் என்பது அதன் கருப்பொருளின் மூலம்தான் விசுவரூபம் எடுக்க வேண்டும் என்ற வழிகாட்டலைச்சொன்ன ஃபிரான்ஸ் காஃப்கா-Franz Kafka இத்தாலியின் ஜேம்ஸ் அகஸ்டின் அலோசியஸ் ஜாய்ஸ் James Augustine AloysiusJoyce போன்றவர்களின் அன்மையை வெளிப்படுத்துகிறது இந்தத் தணிகைகுமாரின் நாவலின் உருவாக்கமும் அதன்தன்மையும் .

நாவலின் வெற்றி. 



                    ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜூராசிக் பார்க்படத்தைப் பார்த்த போது 63 மில்லியன் டாலர் செலவில் தயாரித்து வெளியாகி 900 மில்லியன் டாலரைத் அள்ளித்தந்தத்திரைப்படம் நினைவிலிருக்கலாம்.அந்த படத்தில் உள்ள டைனோசர் என்ற வாழ்ந்த விலங்கை எடுத்து விட்டு யாளி என்றவிலங்கைப் பொருத்திப் பார்த்தால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ அதே சுவாரசியத்துடன் ’டெம்ப்’ மாறாமல் அப்படியேசொல்லியிருக்கிறார் தணிகைகுமார்.இன்னும் சரியாகச் சொன்னால் அறிவியல் பூர்வமாக டைனோசார்தான் அதன்தோற்றத்திலும் , பரிமாணத் தொடருக்கும் நாம் நம்பிக்கொண்டு இருக்கும் புதைபடிவங்கள் (ஃபாசில்ஸ்) முற்றிலும் யாளிஎன்ற உயிரினத்திற்கு மட்டுமே பொறுந்துகிறது என்ற தன் ஆய்வை முன் வைத்து வரலாற்றுக்குப் பரிணாம அறிவியல் சாட்சியம் அளிக்கிறார்

             இது ஒரு கதை என்ற போக்கில் வாசிக்கத் தொடங்கும் உங்கள் வாசிப்பு மனதைத் தனது 19ஆவது அத்தியாயத்திலிருந்து (மொத்தம் 30 அத்தியாயம் ) மாற்றித் தனது எழுத்து நடையில் வெகுதூரம் ஆழ இழுத்துக் கொண்டு போகிறார்நாவாலாசிரியர் .அவர் சொல்லுவதை முழுவதுமாக அவர் நோக்கில் உணர்வு பூர்வமாக வாசித்து முடிக்கும் போது யாளிஎன்ற உயிரினம் உண்மை என்று நீங்களும் என்னைப்போல எந்தக் கோவிலிலும் சத்தியம் பண்ணவிட்டுத் திரு அழகர்குடிக்குக் கிளம்பப் பஸ் அல்லது ரயில் பிடிக்க வைத்துவிடுவார்.

                        ஒரு பாரம்பரியக் குடும்பத்தின் பராமரிப்பில் அந்தக் அந்தத் தொன்மமான மிருகம் வளர்க்கபடுவதை ரகசியமாக அறிந்து,அப்படி வளர்க்கும் குடும்பத்தினரிடம் அகப்பட்டுப் பல முறைக் கொல்ல முயற்சிக்கப்பட்டுத் தப்பித்து ,ஒரு கட்டத்தில்அந்தக் குடும்பத்தின் மூத்தவரால் இந்தக் கதையின் பெக்மேன் மற்றும் சரவணனுக்கு அந்த அபூர்வ விலங்குகளின்வரலாற்று மற்றும் பராமரிப்பின் அவசியம் பற்றிப் பேசி முடிகிறது கதை . கதையின் கடைசி ட்விஸ்ட் – அந்தக்குடும்பத்தின் மூத்தவர் வைக்கிறார்.அது அவர்கள் பாதுகாத்துவரும் கோவில் கல்வெட்டுப்படி இதைதேடி வந்த பெக்மேன்மற்றும் சரவணன் இருவரில் யாராவது ஒருவர்தான் அந்தக் குடும்பத்தின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அந்தரகசியத்தை இனி வரும் காலங்களில் காக்கப் போகிறார்கள் என்று ! 

”யாளி வீர்ர்கள்”

                       நாவல் வாசித்து முடித்தவுடன் தணிகைகுமாரிடம் அலைபேசியில் அழைத்து என் பாராட்டைத் தெரிவித்தேன்.மனிதர்மிக இயல்பாகப் பேசியதோடு தனது அடுத்தப் படைப்பான .”யாளி வீர்ர்கள்” நாவலைத் தயார் செய்து விட்டதாகவும்,பிரபலமான பதிப்பகங்களுடன் பேசி முடித்தவுடன் இரண்டு மாதங்களுக்குள் வெளிவரும் என்ற புதிய சூடானதகவலைத் தந்தார். 

இன்னும் சில மாதங்களில் நாம் இன்னொரு சுவாரசியத்தைச் சந்திக்கப்போகிறோம் ..

2 கருத்துகள்:

  1. நான் படித்தது முதல் பதிப்பு. முதல் 100 பக்கங்கள் மண் மணத்துடன் ஆராய்ட்சியாக போகும் கதை பிற்பகுதியில் விறுவிருவென சுவாரசியமாக செல்லும். அருமயான நாவல், கண்டிப்பாக வாங்கி படிக்க பரிந்துறைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் விமர்சனப் பதிவு
    அவசியம் படிக்கவேண்டும் எனும்
    ஆவலைத் தூண்டுகிறது
    அவசியம் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு