உலகம் முழுவதும் உளவு ஸ்தாபனங்களின் மிகப்பழைய முறையானாலும் இன்றும் செல்லத்தக்க ஒரு யுக்தி “Honey trap”.
ஒரு பக்கம் இதற்கு "தேன் கொண்டு ஈக்களைப் பிடிப்பது" என்கிறார்கள்.
மனோ தத்துவத்தில் இதனை மனித பலவீனத்தை மருத்துவ ரீதியாகவும் திட்டமிட்டும் கையாளும் ஒரு செயல் என்கிறார்கள்
Honey trap - it is a clinical and calculated manipulation of human vulnerability
தேன் பொறி அல்லது "பாலியல் உளவாளி (A honeytrap or "sexpionage") என்ற வார்த்தையைச் சொன்ன உடன் நமக்கு பெண்களை வைத்து உளவு தந்திரம் செய்வதாக நினைப்போம் இல்லை இதில் ஆண்களும் தான் பயன்படுத்துகிறார்கள்!
1950களில் பான் நகரில் ஆண்களும் ஸ்டாசி (East German intelligence ) உளவாளியான "ஃபெலிக்ஸ்", வகைப்படுத்தப்பட்ட அரசாங்க ஆவணங்களைக் கடத்துவதற்காக மேற்கு ஜெர்மானியப் பணியாளரான "நார்மா"வை வெற்றிகரமாகப் பணியமர்த்தினார்.பொதுவாக இப்படி ஈடுபடும் உளவுத்துறையில் மயக்கித் தகவல் திரட்டும் (Sexpionage) பெண் முகவர்களை "சிட்டுக்குருவிகள்"( sparrows) என்றும் ஆண்களை "ரோமியோக்கள்" (Romeos) என்று சொல்கிறார்கள்
மிகச் சமீபத்தில் என்விடியா (NVIDIA) நிறுவனத்தை 33 ஆண்டுகள் அந்நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய இணை நிறுவனரும், நிர்வாக அதிகாரியுமான தைவானிய மற்றும் அமெரிக்க மின் பொறியாளர் ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) இன்று லிஸ் ஹுவாங் என்ற சீன உளவுத்துறையான 'அமைச்சகத்தின் மாநிலப் பாதுகாப்புப் பிரிவின்' (MSS), தேன் பொறியில் சிக்கி அதிநவீன அமெரிக்க ஏஐ (AI) சிப்களை சீனாவுக்குக் கடத்த உதவியதாக எஃப்.பி.ஐ (FBI) மற்றும் நியமிக்கப்பட்ட சட்ட நிறுவனங்கள் விசாரணையில் இருக்கிறார்.
உலகத்தில் யார் எதை கண்டு பிடித்தாலும் சைனா அதைத் திருடி அதைப்போல செய்து விடுவார்கள் அதற்கு அறிவு (IP) சார்ந்த திருட்டு (intellectual property) என்ற பெயர் வேறு! அந்த வரிசையில் மிக நூதனமாக ஒரு வேளை செய்துள்ளார்கள். தைவான் நாட்டுப் பாப் பாடகி ஜோலின் சாய் தனது வசீகரமான குரலில் ஜூலை 14, 2010ல் பத்து முழுப் பாடல்களும், மேற்கத்திய ஆல்பங்களின் பாணியில் 5 இடை இசைத் துணுக்குகளும் (Interludes) இடம்பெற்ற 'மைசெல்ஃப்' (Myself) என்ற ஆல்பத்தை வெளியிட்டார்.அந்தப் பாடலை எழுதியது,பாடியது,ஆடியது எல்லாமே தைவான் ஏமாற்றப்பட்ட என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங்கும் தைவான். என்ன ஒற்றுமை பாருங்கள் ?
இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்!
ஏமாற்றப்பட்ட ஜென்சன் ஹுவாங் கடந்த 2023ல் சந்தித்து 2024ல் நெருக்கமாக பழகத்தொடகும் முன் அதாவது தேன் பொறியில் சிக்கும் முன் அவரின் தேசத்துக்கு (தைவான்) சொந்தக்காரியான பாப் பாடகி ஜோலின் சாய் தனது வசீகரமான குரலில் ஜூலை 14, 2010 வெளியிட்ட ஹிட் எஃப்எம் டாப் 100 சிங்கிள்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த மைசெல்ஃப்' இசைத்தொகுப்பின் முதன்மை தனிப்பாடலான ஹனி டிராப் (Honey Trap)ஐ 'வோகிங்' (Voguing) நடன பாணியால் ரசித்து இருந்தால் இந்த தவறை செய்யாமல் கூட இருந்து இருக்கலாம்!
அந்த பாடலை எழுதியவர்கள் அதே தைவான் நாட்டைச் சேர்ந்த லூக் சுய் மற்றும் ஜினோ சென்.
அந்தப் பாடலின் வரிகள் இப்படித் தொடங்குகின்றன....
.
”எனக்கு உன் திருப்தியைக் கொடு
எனக்கு உன் திருப்தி வேண்டும், எனக்கு உன் திருப்தி வேண்டும்.
எனக்கு, எனக்கு, எனக்கு, எனக்கு, எனக்கு, எனக்கு உன் திருப்தியைக் கொடு....”
அதை விட விசேசம் என்னவென்றால் நவீன ஹவுஸ் நடனத்தைக் கொண்ட வோக் ஃபெம் (Voguing) நடன பாணி அமைப்பில் இந்தப் பாடல் அமைத்துள்ளார்கள் .இந்த நடனத்தின் தாயகம் 1960கள் முதல் 1980கள் வரை நியூயார்க்கின் ஹார்லெம் பகுதி. அங்கு நிலவிய கறுப்பின மற்றும் லத்தீன் LGBTQ+ மக்களின் மறைமுகமான பால்ரூம் நடனப் பண்பாட்டிற்குள் உருவானது.
ஒரு கெட்டதில் நல்லது நடக்கும் என்பது போல ஜென்சன் ஹுவாங் பொறுப்பிற்கு தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாக CFO கோலெட் க்ரெஸ் (Collette Kress) நியமிக்கப்பட்டு இருந்தாலும்,அப்பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா, நிகேஷ் அரோரா, தாமஸ் குரியன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்பது கூடுதல் செய்தி.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக