இறந்த உடலிருந்து வெளியேறுவது ஓருயிரிலிருந்து தொடங்கி ஆறறிவு மனிதன் வரையும் அதிலும் நம் அப்பா – அம்மா தொடங்கி, முதல் மனிதன் வரை என்ன என்ன செய்தார்களோ அவர்களின் எல்லாப் பதிவுகளும் Blue Print போல இந்த ஆன்மா என்ற ஜீவகாந்த களத்தில் - ஒரு மாபெரும் கூகுள் சர்வரின் ’ஹார்ட்டிஸ்க்’ நினைவு களஞ்சியம்போல பதிந்து இருக்கிறது. அது மாதிரி பல லட்சம் பதிவுகளை கொள்ளடக்கியதுதான் மனித உடலின் ஜீவகாந்த மையமான ஆன்மா.
இவ்வளவு பதிவுகள் இருக்கும் ஒரேடியா கதை விடுவது போல தோணுகிறதா ? இத்தனை பதிவுகளும் நம்மிடம் இருப்பதற்கு இரு ஆதாரம் 1.நம் மூளை. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடும் பயன் படுத்தப்படாத 90 சதவிகிதமும் 2. மனித மரபியல் தகவல் பதிவாக ஜினோமில் சும்மா இருக்கும் DNA ஏணிகளும் சாட்சி !
இவ்வளவு பதிவுகள் இருக்கும் ஒரேடியா கதை விடுவது போல தோணுகிறதா ? இத்தனை பதிவுகளும் நம்மிடம் இருப்பதற்கு இரு ஆதாரம் 1.நம் மூளை. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடும் பயன் படுத்தப்படாத 90 சதவிகிதமும் 2. மனித மரபியல் தகவல் பதிவாக ஜினோமில் சும்மா இருக்கும் DNA ஏணிகளும் சாட்சி !
கருமையம்.
காற்று, வெட்ட வெளியில் திடீரென்று ஒரு இடத்தில் மிகுந்த வெப்பம் குறைவதால், அந்த இடத்தில் உள்ள காற்று குளிர்ந்து சுற்றுவதால் தரையில் இருக்கும் இலை, தழைகள் காற்றில் கலந்து சுற்றும். இதைச் 'சுழிக்காற்று' என்று கூறுவோம்.அது போல நம் மூன்று உடல்களுக்கும் தனித்தனியே மையங்கள் இருக்கிறது.
நமது உடலில் உயரத்தில் ஒரு கோடும் அகலத்தில் ஒரு கோடும் போட்டால் ஒரு மையப்புள்ளி கிடைக்குமே அதுதான் அது . இதற்கு ஸ்கேல் எடுத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை உங்கள் தொப்புளுக்கு கீழ் நான்கு விரல்கள் வைத்தால் போதும் அந்த இடம்தான். விஞ்ஞானம் உடலுக்கு தலைமை செயலகமாக மூளையைச் சொல்லும் ஆனால் இந்த மூன்று உடலுக்கும் மையமாக செயல்படும் கருமையமே ’நிரந்தரத்திற்கு’- இறந்த பிறகும் கூட தலமையகமாகச் செயல்படுகிறது.உயிரினத்தின் ஒவ்வொரு செயலும் அனுபவமும் மூன்றாவதான இந்த Bio Magnetic Body யில் காந்த அலையாக சுருக்கப்பட்டு சீவகாந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது இதுதான் காரண உடலான Bio Magnetic Body .இதன் இன்னொரு சிறப்பு பெயர் ”ஆன்மா”
ஆன்மா என்பது பெற்றோர்கள் இருவரின் விந்து-Sperm நாதம் - Overy இணைப்பில் உருவான அலைத்தொகுப்புகள் ஆன்மாவாகிறது . கருமையத்தின் மறுபெயரே ஆன்மா என்கிறது வேதாத்ரியம் .சரி உடலை விட்ட எல்லா ஆன்மாவும் ஏன் கரைந்து போகாமல் விடாப்பிடியாக சோதிக்க வேண்டும் ? ஆன்மாவில் காந்த அலைத்திணிவு நிகழ்ச்சியான கருமையத்தில் ஏராளமான பதிவுகள் என்ற களங்கம் இருப்பதால் அது கரைந்து போவதில்லை.
1. Physical Body - பால் உணர்வு சக்தி திணிவு மையம்
2. Astral Body - உயிர் துகளின் திணிவு மையம்
3. Bio Magnetic Body -ஜீவகாந்த ஆற்றலின் திணிவு மையம்.
மேலே நாம் பேசிய மூன்று உடல்களும் அதன் மையங்களும் தனித்தனியே செயல்பட்டால் இயற்கையின் பேராற்றல் நமக்கு புரியாமல் போயிருக்கும் ஆனால் இந்த மூன்றையுமே இணைத்து அதற்கு தலைமை செயலகமாகவும் வழிநடத்துவதாகவும் தெய்வீக திருநிலையமாக இருப்பது “ கருமையம்” . இந்த மூன்று உடல்களின் மையத்தை நிர்வகிப்பதால் இந்த ஒன்றை புரிந்து கொள்ள முயன்றால் போதும் உடல்-உயிர்-மனம் என்ற வேதாத்ரிய - காந்தம் தத்துவம் எளிதில் உங்கள் மனதில் வந்து உட்கார்ந்து விடும்.
இப்போதைக்கு சுருக்கமாக மனிதனுக்கு 1.மேல் மனப்பதிவு 2. ஆழ் மனப்பதிவு என இரண்டு பதிவுகள் இருக்கிறது .உணர்ச்சி பூர்வமாக பதியப்படும் பதிவுகள் மேல் மனப்பதிவுகள் .கபாலிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை .வெறுத்துப் போய் வீடு திரும்பி விட்டோம் இது உணர்ச்சி பூர்வப்பதிவு .இது அந்தப் படத்தை பார்த்து விட்டால் அழிந்து போய்விடும் . ஆனால் உணர்வு பூர்வமாக ஒரு முடிவு எடுத்து , அடுத்த முறை இயந்திரன் 2 க்கு ஆன்லைனில் ரிசர்வ் செய்துவிட வேண்டும் என்ற அறிவுபூர்வமான முன் முடிவுடன் தீர்மானித்தால் அது நிரந்தரப்பதிவு - ஆழ்மனப்பதிவு . இந்த இரண்டாவது பதிவு வாழ்நாளெல்லாம் நம் எல்.ஐ.சி விளம்பரம் போல - வாழும்போதும் வாழ்க்கைக்குப் பின்னும் அழியாத பதிவாக கூடவே வருகிறது. இதற்கு மேல் இதில் நுட்பமாக போக வேண்டாம் . இந்த மேல்,ஆழ் மனப்பதிவுகள் - கருமையம் என்ற சிடியில் (Nero Burning Softwear உதவியுடன்) பதிவது போல ஜீவகாந்தக்களத்தில் நம்முடைய பாரம்பரியப் பதிவு , நாம் பிறந்த பிறகு பெற்ற தொடு உணர்வு,சுவையுணர்வு,சுவாச உணர்வு,பார்வை உணர்வு ,கேட்ட ஐந்து புலன் உணர்வுகளை - உணர்வு பூர்வமாக பதிந்துகொள்கிறது .
இங்கு ஏன் உணர்வு பூர்வமாக என்ற வார்த்தை சொல்ல வேண்டியிருக்கிறது ! இறப்பிற்குப் பின் செல்களான பருஉடல் மண்ணோடு நின்றுவிடுகிறது .உயிர்மையமும் காந்த மையமுமே உடலை விட்டு வெளியேறுகிறது . ஆன்மா என்ற ஜீவகாந்த உடல் இருக்கும் வரை நரம்புகள் மூலம் மூளைக்கு மனம் என்ற கருவியால் நம் அனுபவ பதிவு உணர்வுகளை - உணர்ச்சிகளாக மாற்றித்தருகிறது.அதுதான் இன்பம் துன்பம் என்ற உணர்ச்சி . உடலை விட்டுப்பிரிந்த ஆன்மாவுக்கு உணர்ச்சிகள் கிடையாது . மனம் என்ற கருவி அங்கு இல்லை .அதாவது ஆறாவது அறிவும் இல்லை.பிரித்துப்பார்க்கும் குணமும் அங்கு இல்லை .தேடித் தேடி காத்து இருந்து கொல்லும் குணம் அங்கு எதுவும் இல்லை. உடல் விட்ட ஆன்மாவின் நிலை என்னவென்றால் தனது பதிவுகளை இன்னொரு மனித உடலில் ( CD Playerல்) புகுந்து வெளிப்படுத்திக் கொள்ள காத்து இருக்கிறது .உடல் விட்ட ஆன்மாவிற்குத் தேவை ஒரு மனித உடல் .வேறு வகை உடலில் அதனால் புகுந்து கொள்ள முடியாது. அதுவரை அது தனது உடல் மேல் ஒரு அடிக்குள் மிதந்து கொண்டு இருக்கிறது ....
ஆன்மா ஒரு காந்த உடல் என்று பேசிவிட்டோம் . காந்தமும், நிரந்தர காந்தம் , தற்காலிக காந்தம் என்று இரண்டு இருக்கிறது தானாகவே காந்தப்புலத்தை உண்டாக்கவல்ல காந்தம் நிரந்தர காந்தம்.தற்காலிகமாய்க் காந்தப்புலத்தை உண்டாக்கும் காந்தம் தாற்காலிக காந்தம் . எல்லா காந்தமும் திணிவாய் இருக்குமா ? ஒரு சைக்கிளின் மில்லர் டையனமோ காந்தத்தைவிட ,ஒரு ஸ்பீக்கரின் பின்புறம் இருக்கும் காந்தம் வலுவாக அதிகமான தூரத்தில் இருக்கும் இரும்பைக்கூட இழுக்கும் சக்தி இருக்கும் . அது போல உடல் விட்ட ஆன்மா வலுவான , மிதமான , லேசான காந்த உடலாக இருப்பதற்கு அந்த உடலின் மரணம் ஏற்பட்ட விதம் பொறுத்து அந்த உடலின் காந்தத்திணிவு இருக்கும்.
மரணங்களை வகைப்படுத்துவோம்.
என்ன இவன் பாட்டுக்கு ஏதோ பட்டுச்சேலையை தரம் பிரிப்பது போல சாதாரணமாக தொடங்குவதாக மரணத்தின் மதிப்பை குறைப்பதாக நினைத்து விட வேண்டாம்.மரணம் என்பது எல்லோறுக்கும் நிகழப்போவதுதான் .ஆனால் அது நிகழ்ந்த முறையில் பிரிந்த ஆன்மா அதன் காந்தமும் திணிவு தீர்மானிக்கப்படுகிறது.
1.குழந்தை மரணம்.
2.இயற்கை மரணம்.
3.தற்கொலை ,விபத்தினால் மரணம்.
4.ஞானம் அல்லது முக்தி பெற்றவர்களின் மரணம்.
1.குழந்தை மரணம்.
தாயின் வயிற்றில் இறந்து பிறந்த குழந்தை ,பிறந்த பிறகு மூன்று வயது அல்லது வயதுக்கு வரும் முன் வரை அதாவது 12 வயது வரை உள்ள இறந்த உயிர் அவனுடைய தாய் அல்லது தந்தை இவர்களில் யார் மிகவும் ஒத்த பதிவுகளின் கூறுகள் அதிகம் இருக்கிறதோ அவர்களிடம் மீண்டும் இணைந்து கொள்கிறது . காரணம் அந்த குழந்தைக்கு தனிப்பதிவு எதுவும் இருக்காது . ஏனெனில் எப்போது ஒரு உடல் இன்னொரு உடலை உருவாக்கும் வயதுக்கு வரும் வரை விந்துவோ - நாதமோ உருவாகும் வரை அவனுக்கு தனிப்பதிவுகள் இருக்காது . வயதுக்கு வரும் வரை அவன் செயல்களுக்கு காரணம் அவன் தாய் தந்தைப்பதிவுகள்தான் .அவன் ஜாதகமே முழுமையாக வேலை செய்ய துவங்காது .இது நிரந்தர காந்தமல்ல !
பருவ வயதிற்கு முன் இறக்கும் குழந்தை இறப்பின் போது மூக்கில் கண்களில் நீர்வரும் அதுதான் வயதுக்கு வந்த பின் , விந்து-நாதத்தை உருவாக்கும் நீர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக