சனி, 9 மார்ச், 2013

கணவனின் பிரசவம்



                   ‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும்' - பொதுவாக இந்த பழமொழி வெகு காலமாக பேசப்படும் விசயம் இதன் முழு ஆராய்சியை இந்த பதிவில் மிக அழகாக ஆழமாக விவரித்து இருக்கிறார் பாருங்கள் !
http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special5.3.htm 
 நம்பிகை.
                  அதனால் நாம் இங்கு பேசப்போவது அந்த பழமொழி பற்றியல்ல . நாம்  விதியை பற்றி என்னதான் நம்பிகை கொண்டு வளர்ந்தாலும் முயற்சி என்பது நம் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து சொல்லும் மரபணு விதை அல்லவா ? அதனால் அதை தவிர்ப்பது நியாயம் இல்லை அல்லவா ? அதை என் மனைவியின் பிரசவத்தில் பிரயோகப்படுத்தி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .
மருத்துவர் காலக்கெடு.
                     2006 ஆம் ஆண்டு ஜூலை 23 ல் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்பதாக மருத்துவர் காலக்கெடு நிர்ணயம் செய்து இருந்தார்கள்  .இரண்டு பக்க பெற்றோர்களும் எங்கள் அருகில் இல்லை .ஆனால் இதுவரை எண்ணிலடங்கா பிரசவத்திர்க்கு உடன் இருந்த மனைவியின் பாட்டி  (சுமார் 70 வயதுக்கும் மேல் இருக்கும்-மனைவியின் அம்மாவின் தாய் ) ஒரு மாதத்திர்க்கு முந்தியிருந்து பார்த்துக்கொள்ள வந்து உடன் இருந்தார்கள் .
 ESIC மருத்துவமனை .
                    ஜூன் மாத இறுதியில் எனக்கு கம்பெனி மூலம் ESIC ( எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ் யூரன்ஸ் கார்ப்பரேஷனில்) வசதி இருப்பதால் அங்கு முதலில் சிகிச்சை மற்றும் பரிசோதனை ஆரம்பம் முதல் செய்துகொண்டு இருந்தோம் .ஒருவேளை கொடுக்கப்பட்ட காலக்கெடுவிர்க்கு முன்னரே பிரசவ வாய்ப்பு ஏற்பட்டால், இங்கேயே பார்த்து கொள்வதர்காக.

   திண்டுக்கல்..              
                    அடுத்து எனது சொந்த ஊரான திண்டுக்கல்லில் எங்கள் வீட்டில் இருந்து பிரசவம் பார்ப்பதாக நாங்கள் முன்னரே தீர்மானித்து இருந்தோம்  . தேனி அரசு மருத்த்துவமனையில் எனது அண்ணி நர்ஸ். அங்கும் பரிசோதித்து பதிவு செய்துகொண்டோம்.மேலும் அவசரமாக பிரசவ வாய்ப்பு ஏற்பட்டால்  எங்கள் குடும்ப மருத்துவரிடம் ( அருகே இருப்பதால்) அங்கும் பரிசோதனை தொடர்ந்தது - அவர் பெண் மருத்துவரும் கூட .
வாடகை வாகனங்கள் ஓட்டுனர்..
         இதர்க்கு இடையில் நண்பர்களிடம் கொஞ்சம் பணம் சேகரித்து கையில் வைத்துகொண்டேன் .இதில் ஒரு நண்பர் தன்னுடைய முழு சம்பள தொகையையும்கொடுத்து இருந்தார். நான் வசிக்கும் அருள்புரதிலிருந்து  பிரதான சாலைக்கு வரவும் ,அடுத்து கோவை - சிங்காநல்லூர் ESIC போக 37 கி.மீ தூரம் இருக்கும் .இரவில் அதிக வாகனங்கள் அருள்புரம் பிரதான சாலையில் அவசரத்திர்க்கு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என யோசித்து ,  அங்குள்ள வாடகை வாகனங்கள் ஓட்டுனர் பலரிடம்  போன் நம்பர் சேகரித்தோம் .மிகவும் சந்தோசமாக தந்ததோடு, எப்போது வேண்டுமானலும் கவலைப்படாமல் அழையுங்கள் என்று அறிவுரையும் சொன்னார்கள் .இத்தனையும் தயார் நிலையில்...

ஒரு வாடகை வேன்.
       ஜுலை 13, ( பிரசவம் ஆகும் என கொடுக்கப்பட்ட காலத்திர்க்கு 10 தினங்களுக்கு முன்னரே ) பணி முடிந்து இரவு 8.30 வீட்டுக்கு போனால் ,மனைவியின் பாட்டி துணியெல்லாம் எடுத்து சேகரித்து கொண்டு் -  உடனே ஏதாவது வண்டி பாருங்கள் என்று சொல்லவும்  எனக்கு கொஞ்சம் பயம் உடனே தொற்றிகொள்ள , விரைந்து செயல்பட        (அப்போது என்னிடமும் , பைக் இல்லை) சைக்கிள் எடுத்துகொண்டு எனது நண்பனை அழைத்துகொண்டு பிரதான சாலைக்கு வந்தால், அங்கு எந்த வண்டியும் இல்லை . ஏற்கனவே நாங்கள் சேகரித்து வைத்து இருந்த அலைபேசி எண்களில்  அனைவரிடமும் தொடர்புகொள்ள தொடங்கினோம் ஒரு சிலர் வேறு ஊரில் இருந்தார்கள் ,சிலரிடம் ’நாட் ரீச்சபில்’பதில்வந்தது .உடனே ஒரு யோசனை தோன்றியது ,அங்கு அருள்புரத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் மருந்துக்கடை வைத்து இருக்கிறார் -பெயர்  ஜெயம் மெடிக்கல் .  நானும் எனது மனைவியின் ,குடும்பமும் அவருக்கு நல்ல பழக்கம் .எனவே அவரிடம் சென்று எனது வேண்டுகோளை சொன்னேன் .அவரிடம் ஒரு ஆம்னி வேன் இருக்கிறது. அவருக்கும் அவரது சகோதரருக்கும் கடை மூடிய பிறகு சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ள அவர்கள்  வீட்டுக்கு அந்த இரவில் செல்ல அது மட்டுமே .உடனே சம்மதித்தார் .ஆனாலும் ஒரு வாடகை வேன் இருப்பவரிடம் (அவர் நம்பர் எப்படி விட்டோம் என தெரியவில்லை,நாங்கள் விசாரிக்குபோது அவர் இல்லை போல!)முயன்று பார்க்கலாமே என சொன்னார். போனோம். அவர் மாடி அறையில் தூங்கிகொண்டு இருந்தார்.அவர் கிளம்பி வருவதர்க்குள் கைதாங்களாக பக்கத்து வீட்டாரின் துணையோடு பாட்டி என் மனவியை பிரதான சாலைக்கு நடத்தியே அழைத்து வந்துவிட்டர்கள். காரணம் கேட்டதர்க்கு நீர்குடம் உடைந்து விட்டதாகவும்  நீங்கள் வர தாமதம் ஆனதால் ,அழைத்து வந்துவிட்டதாகவும் வண்டி கிடைக்காவிட்டால் பஸ்ஸிலாவது போகலாம் என்று நினைத்தார்களாம்.

பேப்பரை விரித்து உறங்க ..
      கோவை சிங்காநல்லூர் ESIC மருத்துவமனை நானும் கூடவே என் நண்பன் ,மனைவி ,பாட்டி (அப்புறம் - விதி ) போகும்போது ,12 மணியை நெருங்கிவிட்டது .மனைவியையும் பாட்டியையும் உள்ளே அனுப்பிவிட்டு எங்கள் பதிவு அட்டையை பதிய வரவேற்ப்பு பகுதிக்கு அனுப்பினார்கள் .தூங்கிகொண்டு இருந்த ஹிந்தி காவலரை ( நண்பன் ஹிந்தி அறிவான் ) எழுப்பி பதிந்து விட்டு வந்து வெளியே வந்த பாட்டியிடம் விசாரித்தால் ,இரவு பணிக்கு ஒரே ஒரு டாக்டர் இருப்பதால் இப்போது முடியாது,ரொம்ப அவசரபட்டால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுவதாகவும் அங்கு ஆப்ரேசன் தவிர வழியில்லை என்று பயமுறுத்த ,அதுவரை ஆம்னி வாடகை வாங்குவதர்க்கு காத்து இருந்த ,அதன் ஓட்டுனரும்  உரிமையாளாருமானவர் , என்னை தனியாக மருத்துவமனை காம்பவுண்டுக்கு வெளியே அழைத்து சென்று பயப்பாடாதீர்கள் ,பெரிய உயிர் (மனைவி ) முக்கியம் .ஆப்ரேசன் என்று கேட்டால் தயங்காமல் கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று சொல்லி விட்டு கிளம்ப அவருக்கு ஒரு டீ வாங்கி தர கடை தேடினோம் ஒரு கடையும் இல்லை . (நல்லவேலை நண்பன் எற்கனவே சாப்பாடு சாப்பிட்டு இருந்தான் .)அவரை அனுப்பி விட்டு திரும்பினோம் .வெளியே ஒரு காத்திருக்கும் இடம் இருந்தது.கூட வந்த நண்பன் ஒரு சின்ன தினசரி பேப்பரை விரித்து உறங்க ..

வானத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

              நான் எவ்வளவு நேரம் அப்படியே அந்த கோபமான கொசுக்களுடன் வானத்தை பார்த்து கொண்டு இருந்தேன் என்பது தெரியவில்லை .காலை 5 மணிக்கு  இருக்கும்  (அதர்க்குள் ஏற்கனவே இரவில் ,அதிகாலை  என இரண்டுமுறை யாருக்கு என தெரியவில்லை ) காப்பி வாங்கி வர அனுப்பினார்கள் .
விசாரித்து போகலான்னு வந்தேன்.

                   காலை 9  மணிக்கும் மேல் டாக்டர் வருவதாக சொல்லவே பதற்றத்தை அடக்கி கொண்டு காத்து இருந்தேன் .பாட்டிக்கு நம்பிக்கை சுகம் பிரசவம் என்பதாக.அதனால் அனேகமாக அவர்கள் மறந்த சாமிகளிடமெல்லாம் கோரிக்கை வைத்து கொண்டு இருக்க .நேரம் நகர மருத்தது . .மணி 10.10 சார் குழந்தை பிறந்தாச்சா என்ற குரல் கேட்டு திரும்பினால் ,இரவு எங்களை பத்திரமாக இங்கு அழைத்து வந்த ஆம்னி ஓட்டுனரும்  உரிமையாளாருமானவர். இங்கு ஒரு வாடகை வந்தேன் அப்படியே விசாரித்து போகலான்னு வந்தேன் என்றார் .நான் சொன்னேன் .எனக்கு இரவு அவருக்கு ஒரு டீ கூட வாங்கி தராமல் அனுப்பிய ஞாபகம் வரவே மருத்துவமனையை விட்டு வெளியேறி வாங்கிகொடுத்து அனுப்பினேன் .
 சிசுவை கையில் ஏந்தி ..                                                   
                                     10.30 மருத்துவமனைக்கு மணியை பார்த்து கொண்டே ,நான் திரும்பிகொண்டு இருக்கும்போதே அவசரமாக பாட்டி எதிரே தேடி கொண்டு வருவதை பார்த்தேன் .எங்க போயீட்டீங்க குழந்தை பிறந்துருச்சாம் ,உங்கள கூப்பிடுறாங்க என்றார் பதஷ்டமாக .விரைந்து போனோம் .பெயரை கேட்ட பிரசவ உதவியாளர் அந்த பெண், ஒரு சிசுவை கையில் ஏந்தி கொண்டு வர ,எனக்கு கண்ணீர் வராத குறை ஆனால் பாட்டி ஆனந்த அழுகையோடு அந்த சிசுவை  வாங்கி பார்த்து விட்டு ,ஏதோ சோதித்து விட்டு திருப்பி கொடுத்து விட்டு சிசுவை காட்டிய அந்த பெண்ணுக்கு பணம் தர சொன்னார்கள் .அந்த சயத்தில் எவ்வளவு தந்தேன் என்பதை நான் அறியேன் பராபரமே !


கட்டி கொடுக்கற அவஸ்த்தை !!
                  பாட்டி வெளியே வந்த கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்ன வார்த்தை, நான் வேண்டாத கடவுள் இல்லை நல்லபடியா ஆம்பள பிள்ளையே பிறந்துருச்சு .காசு கொடுங்க  என் மகளிடம் மொதல்ல சொல்லனும் என்று கேட்டார்கள் .எந்த பிள்ளையா இருந்தா என்ன என்றேன் .அது சரி உங்களுக்கு என்ன தெரியும் நீங்களே காதல் கல்யாணம், இன்னொன்னு பொம்பள பிள்ளையா பிறந்து அதை கட்டி கொடுக்கற அவஸ்த்தை வரணுமா ? என்றார்கள் .இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் பெண்கள் தினம் வெறும் பண்டிகை தினமாக மட்டுமே இருக்குமோ, தெரியவில்லை ?

கடவுளுக்கு  எங்களால் எத்தனை சிரமம் .....?

                         யோசித்து கொண்டே ...எங்கள் மீது அக்கறையுடன் மீண்டும் விசாரித்து போன அந்த பெயர் தெரியாத வேன் உரிமையாளருக்கு  முதன் முதலாக குழந்தை பிறந்த விசயத்தை போனின் சொன்னேன் ..அப்புறம் மெடிக்கல் நண்பர் பிறகு -  ஒவ்வொருவராக போனில் சொல்ல தொடங்கினேன்...

செவ்வாய், 5 மார்ச், 2013

சூரிய வணக்கத்திர்க்கு - ஒரு சூடான கேள்வி


          வழக்கம் போல இன்று பேசப்போவது சூரிய வணக்கம் பற்றியது .சில மாற்றங்களை அந்த நிகழ்சியில் செய்து பொலிவு பெற செய்தாலும்  அந்த நிகழ்சி பற்றிய கேள்விகள் நிறைய வருகிறது ...

         பொதுவாக ஒரு வரை பேட்டி காணும்போது அடிப்படைமரபில் தெரியாத விசயத்தை   அதை பற்றி தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் கேட்டு நமக்கு  புரியவைப்பது .அதை  நடிகை மற்றும் நடிகர்களாக இருப்பவர்களிடம் பேட்டி காணும்போது  மீறுவதாக உணர்கிறேன்.

               நேற்று காலை தலைவாசல் விஜய் அவர்களின் மகள் ஜெயவீணா பேட்டி ஒளிபரப்பபட்டது .நீச்சல் குளத்தின் இளவரசி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த பெண் பல சாதனைகளை  இந்திய மற்றும் உலக  அளவிலும் பல சாதனைகளை  சமீபத்தில் துருக்கியின் - இஸ்தான்புல் நகரில் கடந்த உலகஅளவிலான போட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார் .ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என்று தீவிரமாக பேசுகிறார்...


       இந்த மாதிரி தனி சாதனையாளர்கள் மற்றும் வித்தியாசமான பேட்டியை காலை நேரத்தில் பார்க்கும் போது நிறைய நல்ல விசயங்கள் , உத்வேகம் அனைத்து தரப்பினருக்கும் வரும்


                    அதை விட்டு விட்டு ஒரு நடிகரை அல்லது நடிகயையோ பேட்டி எடுக்கப்படும்போது கவர்ச்சி மட்டுமே பிரதானமாய் இருக்கிறது .காரணம் அவர்கள் உழைப்பு தனிப்பட்டது இல்லை அவர்களுக்காக ஒரு மேக்கப் மேன் ,ஒருகதை ,வசனம் ,அவர்களை அழகாக காட்டும் கேமரா மேன் உடை அலங்காரம் ,இவர்களை பயன்படுத்தினால் இந்த ஏரியா நல்லா போகும் என்று காசு போடும் தயாரிப்பாளர் ,இந்த கதைக்கு சரியானவர் என்று யோசித்த இயக்குனர் இத்தனை பேர் இருக்கும் போது அவர்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன சாத்திக்க போகிறார்கள்? அதுவும் சமீபத்தில் நடிகை ஓவியா பேட்டி பார்த்தேன் .அடேங்கப்பா !எனக்கு தமிழ் தெரியாது என்பதை மிக கௌரவமாக சொல்லிக்கொண்டு இருந்தார் .கணக்கே தன்க்கு வராது ,கோஎஜுக்கேசன் படிக்ககாததால் பெரிய இழப்பு என்ற கூடுதல் தகவல் வேறு ...இது எந்த அளவுக்கு தேவை?

யோசிக்க வேண்டும் சூரிய வணக்கமே..

வியாழன், 21 பிப்ரவரி, 2013

வாழ்வை நேசிக்காத காதல் அபத்தம் .

காதலில் தோற்ற பிறகு..1
காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . )

காதலில் தோற்ற பிறகு..2

                         
 தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!                   
                           இந்த விசயத்தை எழுதும்போது வழக்கம் போல ஒரு கேள்வி வந்தது. காதல் தோல்வி ஆணுக்கு மட்டும்தானா இங்கு பேசிக்கொண்டு இருக்கிறோம்?.இல்லையே .தோல்வி என்பது இருவருக்கும் பொதுதானே!.அந்த வலி எப்படி போகிறது அல்லது போகலாம் என்பது மட்டுமே இங்கு விசயம்.இதில் முக்கியம் என்னவென்றால் காதல் அழகியது என்பதை யாரும் மறுக்கவில்லை.அதை அறிமுகப்படுத்த ஆயிரம் வழிகள் கைகாட்ட காத்து இருக்கிறது .ஆனால் தோல்வி என்ற உணர்வு வந்த பின்னால் நடக்கும் சகல விசயமுமே நமக்கு எதிரே கட்டம் கட்டி நிற்பது போல ஒரு பிரம்மை .எந்த சானல் திருப்பினாலும் சோக பாடலையே பார்ப்பதாக ஒரு கனவு சுழல்கிறது .அந்த சோக சுகமே தனி என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள் .யானை மாதிரி காதல்.யானை  இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் .காதல் இருக்குபோதும் சுகம் - பிரிந்த அல்லது தோல்விக்கு பின் வேறு சுகம் 
.
காதல் என்பது உணர்வு
                           கடவுள் கூட காதலிடம் தோற்று போய்விடுகிறார் .ஆமாம் அவர் எழுதிய ஆயுள் ரேகை சில காதல் தோல்விகளில் காதலர்கள் மரணத்தை சந்திக்கும்போது தோற்று போகிறதே ! இங்கு நாம் பேச விரும்புவது வாழ்வை நேசிக்க வைக்கும் காதலை.’என்ன சத்தம் இந்த நேரம்’ என்று கைகோர்த்து தற்கொலைக்கு போகும் பாலசந்தர் பாணி இல்லை .காதல் என்பது உணர்வு .அது நமக்குள் நம்மை காதலிக்க தூண்டும் அற்புதம் .

 ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை
                          நாம் எழுதிய உரைநடை உடையும்போது அதர்க்கு கவிதை என்று வாதிக்க செய்வது .நம்மை நம் மனதின் மெல்லிய  இசைக்கு சரணம் , பல்லவியை துணைக்கு அழைக்காமல் பார்வை நரம்புக்களை பின்னி தனி ஆவர்த்தனம் பண்ணும் தனி உலகம் .பீத்தோவானின் I Love to Listen To புதிதாய் ஒரு அர்த்தம் சொல்லும் இசை .நீதானே என் பொன்வசந்தம் - சமந்தா பார்வை ஆயிரம் பேர் கூடி படம் பார்க்கும் தியேட்டரில் எனக்கு மட்டுமே ஏதோ ஒரு விசயம் அல்லது ரகசியம் பேசுவதாய் ஒரு பிரம்மை  .இத்தனை இருக்கும் இன்னும்கூட காதல் தோல்வி எனும்போது மட்டும் தவறான அர்த்தம் கொடுத்துவிடுமா?
நான் இன்னும் இருக்கிறேனே ...
                      என்னை எனக்கு சொல்லும் காதல் , என்னை கொல்லும் தன்மையுடையதா ...சே சே .இருக்கவே முடியாது .எப்படியோ தோல்வி வந்துவிட்டது .இப்போ நான் என்ன செய்ய ? இந்த இடத்தில் நாம் நின்றுகொண்டு இருக்கிறோம்..தோல்வியை அல்லது அந்த மனப்பான்மையை எப்படி எதிர்கொள்ள  வேண்டும் .அவர் அல்லது அவள் இல்லை என்றபோது என் வாழ்கை சூன்யமா ? இந்த முறை இந்த தோல்வி என் மொத்த வாழ்வையுமா தீர்மானித்துவிடுகிறது ? இது ஒரு அனுபவம் .அதிலும் என் மனசின் முகவைரியை எனக்கு சொல்லி கொடுத்த அற்புத அனுபவம் .இதை இழக்க கூடாது .அந்த குறிப்பிட்ட நபர் என் வ்ழியிலிருந்து விலகிவிட்டதால் என் பயனம் நின்றுவிடவில்லயே .இதோ நான் இன்னும் இருக்கிறேனே .

 ஏதாவது ஒன்றில்...
                           அடுத்து என்ன என்பதே என் நிலை .சரி என் கனக்கும் மனதை  திருப்பவேண்டுமே .படிக்கலாமா ? அது ஏற்கனவே படிக்கும் பழக்கம் இருந்தால் நல்லது .இல்லாவிட்டால் புத்தகம் மட்டுமே கையில் இருக்கும் நினைவுகள் ஏதோ ஒரு வரி பழைய நினைவுகளை தொட்டு விட்டால் பின்னாலே போய் விட கூடும்.காதல் இல்லாத துப்பறியும் நாவல்கள் நல்லது .அது ஆங்கிலமாக இருந்தாலும் .அதை விட நூலகம் போய் படிப்பது ,புதிதாய் புத்தகம் தேடுவது நல்லது .


பார்வைகள் துரத்துவது போல ..              
                     அல்லது வேறு ஏதேனும் ஊருக்கு போய்விடலாம? இந்த ஊரில் இருந்தால் அவள் மட்டும்தான் பார்க்குபோது அவளாகவோ அல்லது அவனாகவோதெரிவார்கள் ..மத்த எந்த ஊர்போனாலும் பார்ப்பவரெல்லாம் அவளாகவோ அவனாகவோ தெரியலாம் .எங்கிருந்தோ நம்மை சதா சில பார்வைகள் துரத்துவது போல தோன்றும்.அது ஆபத்து .

                              நல்ல திரைப்படம் ? அது கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும் அங்கும் புத்தகத்தில் வரும் ஆபத்து இருக்கிறது . 


 இசை...                   
      இசை பற்றி  கேட்கும் பழக்கம் கொஞ்சம் காயா கனியா என்ற இரு நிலை .இசை பற்றி தெரியாமல் அதில் ஆர்வம் என்பதை தாண்டி தேடல் என்பது இருக்கும் பட்சத்தில் இசை ஒரு மருந்து .ஆனால் அந்த லயம் வேறு எதிலும் ஈடுபடவிடாமல் செய்யும் ஆபத்து இருக்கிறது .
                  மேலை நாடுகளில்  குறிப்பாக  ஹெவி மெட்டல் இசையைக் கேட்கும் போது எனது மன அழுத்தம் முற்றிலுமாக வெளியேறிவிடுகிறது' என்ற நம்ப்பிகை இருக்கிறது .  மிகபெரிய விரக்தியும் கோபமும் இந்த இசையோடு சேர்ந்து  கத்துவதன் மூலம் வெளியேறிவிடுகிறது என்றூ நம்புகிறார்கள்.அது நமக்கு அந்த சாத்தியம் இல்லை .


  பார்க்காத நட்பு                   
        வேலையிருப்பவர்கள் அடுத்தவகள் வேலையை சேர்த்து எடுத்து பார்ப்பார்கள்.இது ஆறுதலான விசயம்.ஆனால் வீட்டுக்கு வந்தால் அதே தனிமை துரத்துமே .எனவே தனிமை தவிர்ப்பது மிக முக்கியமான் விசயம்.அது காதலின் தம்பி தங்கை மாதிரி.மீண்டும் குழப்பம் கூடிவிடும்.
நம் இந்த விசயம் தெரியாத நட்புக்களை தேடிப்போவது நல்ல விசயம் .அதிலும் வெகுநாளாய் விட்டு போன பார்க்காத நட்பு மிக நல்லது.முக்கியமாய் நம்மை தவறாக புரிந்து கொண்ட நட்பை மதிப்பது நம்மை நாம் மாற்றி கொண்டு இருக்கும் மனோபாவத்தை உடனே ஏற்படுத்தும்.

 புதிதாய் ஏதேனும்..
.              நாம் உணர்வுகளுக்கு தகுந்தார்போல படம் வரைவது , ஃபோட்டோ எடுப்பது போன்ற சமாசாரங்கள் நல்லது .ஆனால் கவிதை , கதை  - மூச் ,அந்த பக்கம் வேண்டவே ,வேண்டாம் ,புதிதாய் ஏதேனும் மொழியறிவது மிக நல்லது .கம்யூட்டரில் சாஃப்ட் வேர் , ஹார்டுவேர் படிப்பது நல்லது .( ஏற்கனவே தெரியாவிட்டால் ) மேலும் நீச்சல் போன்ற உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற விசயம் மிகவும் நல்லது


         
                 வீட்டு வளர்ப்பு கிளிகள் ,பறவைகள் ,மீன்கள்,பிராணிகளுடன் பழகுவது , தாவரங்கள் வளர்ப்பது  நல்லது.


            
                   நமது வாகனங்களை அதிகம் பராமரிப்பது சுத்தமாக வைத்து இருப்பது ,அதனுடன் மதித்து உரையாடுவது நல்லது - கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதா ? செய்து பாருங்களேன் மாற்றம் தெரியும் .
இது வேண்டாம் .
                        முப்பது வயதிர்க்கு உட்பட்டவர்கள் பக்திக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஆபத்து .அங்கும் மனரீதியாய் தனிமை மீண்டும் விட்ட இடத்திற்க்கு அழைத்து சென்றுவிடும் .அது மட்டுமல்ல கோவில் , பொது இடம் ,நாம் பார்க்க தவிர்க்க விரும்புபவரை முன் நிறுத்தி விடாலாமே .கொஞச நாள் இது வேண்டாம் .

  குடும்பத்துடன்...
                      முக்கியமாக இம்மாதிரி தோல்விகளின் வெளிப்பாடு ஒரு வித விரக்தி மனோபாவத்தை தரும் .ஏதோ நம் தோல்விக்கு ஒரு அங்கீகாரம் ஆறுதலாக அமைய வேண்டும் என்ற மனப்பான்மை கீழ் கண்ட முயற்சி நல்ல பலன் தரும். 
                                குடும்பத்துடன் இருப்பவர்கள் ( பாவமாக நம்மை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ) தங்கை ,அக்கா ,அண்ணன் , தம்பி அம்மா , அப்பா இவர்களோடு அதிகம் உதவி செய்து  பழகும்போது சட்டெனெ உலகமே மாறிப்போன சந்தோசம் வரும் .இது எல்லாவற்றிலும் நல்லது .கொஞ்சம் நடிப்பதாய் ( நமக்கே )தோணலாம் .ஆனால் அது நல்லது .இன்னும் கூடுதலாய் .வீட்டை பராமரிப்பது , சின்ன வேலைகளை தெடிப்பெறுவது இந்த மாதிரி சின்ன விசயங்கள் ரொம்பவுமே நல்லது .நம் வீட்டு ஆளே நமக்கு புதிதாய் தெரிவார்கள் அப்போது .



தாயை வணங்கும் பழக்கம்..
          நம் தேசத்தில் இப்போதெல்லாம் இந்த அவசியம் இல்லை .மேலை நாடுகளில் பின் பற்றி ஒருகாதல் போனால் இன்னொரு காதல் , அதிக குடி , வன்முறைகள் , கற்பழிப்புகள் ,என நிரம்பி வழிகிறார்கள் நீ பேசும் சைவ வழிமுறைகள் வழக்கொளிந்து போய் விட்டது என சொல்லாம் ஆனால் தாயை வணங்கும் பழக்கம் இந்த தேசத்தில் எப்போது போகுமோ அப்போது வேண்டுமானால் இத விசயம் வழக்கொளிந்து போகலாம் .மேலை நாட்டு பழக்க வழகத்தை கொண்டாடும் அவர்கள் தன்னுடய பிற்காலங்களில் தனக்கு நடக்கும் அத்தனைக்கும் வேறு யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

 ஒரு விலாசம் அவ்வளவே !
                           இங்கு நான் இதை ஒரு வழி என்று சொல்லவில்லை . ஒரு விலாசம் அவ்வளவே ! இந்த தேசத்து காதலர்கள் முதல் காதலில் தோற்றவர்கள் அல்லது தொலைத்தவர்களை பற்றி  பேச ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்  .   

 முதல் பயனம்..
                             காதலை கொண்டாட ஆயிரம் வ்ழிகள் காட்டப்படுகின்றன இங்கு .ஆனால் வலிகளை சுமந்து ,நடமாடும் கோடிக்கணக்கான தாஜ்மகால்களை நேசிக்கும் ஒரு அடையாளாமாக என்னை காட்டி கொள்ள என் முதல் பயனம் இதுவே !

சனி, 16 பிப்ரவரி, 2013

காதலில் தோற்ற பிறகு..


 
 தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம்...
          இந்த நிலையை விரும்பாவிட்டாலும் நாம் சந்திக்கவோ ,அனுபவிக்கவோ ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் இழுத்து செல்லப்பட்டு இருக்கிறோம்.மீண்டு வரும்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.ஏனென்றால் தோற்ற காதலின் மேல் தான் சரித்திரம் பிரமிப்பாய் வாழ்கிறது.

காதலின் வகை 

         அது ஒருதலை காதலாகட்டும் ,சொல்ல தெரியாத காதலாகட்டும் , தவறாக ( பழகிய சில காலங்களில் ) புரிந்து கொள்ளப்பட்ட காதலாகட்டும்,சூழ்நிலையால் பிரிந்து போனதாகட்டும்,அவசர காதலாகட்டும்,அக்கறையினால் எழுந்ததாகட்டும்,தியாகத்தால் பிரிந்த - ஒருவர் நல்லதிர்க்காக விட்டு கொடுத்த காதலாகட்டும்,வெளிப்படுத்தாத காதலாகட்டும் ,இன்னும்...எல்லாமே ஒரு வகையில் தோல்வி என்ற ஒப்புக்கொள்ளப்பாடாத ஏமாற்றம்தான்.( இதில் வயதுக்கே வராதவர்கள் காதல்அவசர காதல் ,அடுத்தவர் மனைவி மேல் வந்த முந்தய பிந்தய காதல், நம்பிக்கை வைத்து பழக விட்ட நண்பனின் தங்கை மேல் காதல் , உதவியதால் எதிபார்க்கும் கைமாற்று  காதல்  இங்கு வேண்டாம்.) 

 அந்த பெண் மரணத்திர்க்கு முன்..

             பாலகுமாரனின் எழுத்தை தவம் என உணர்ந்து படித்து கொண்டு இருந்தபோது சொந்த தாய் மாமன் மகள் மீது நண்பர் காதல்கொண்டு அவருக்கு தராமல் வேறு ஒருவருக்கு மணப்பேச்சு பேசியபோது தாங்காமல் தூக்கு போட்டு கொண்டு அந்த பெண் இறந்த சோகத்தை என் நண்பருடன் எப்படி பகிர்ந்து கொள்ளுவது என்ற பக்குவம் இல்லாமல் தவித்து,அந்த பெண் மரணத்திர்க்கு முன் ஒரு கடிதம் எழுதினால், எப்படி இருக்கும் என்று நான் எழுதிய கடிதம் படித்து நண்பர்கள் வீடே அழுதபோது ஏதோ கொஞ்சம் காதல் தோல்வியின் வலி புரிந்த மாதிரி இருந்தது .அது எனக்கு எற்படாதவரை...
 
 வேட்டை நுட்பம் தெரிந்தவன் ஆனால்..
      அதர்க்கு சில ஆண்டுகளுக்கு பிறகு திண்டுகல்லுக்கு அருகே மேட்டுர் டேம் காட்டுப்பகுதியில் சுமார் பதினெட்டு வயதுள்ள பையன், வேட்டை நுட்பம் தெரிந்தவன் .கொக்கு,காட்டுப்பூனை,காட்டுப்பன்றி , முயல் ,என மிக பல வேட்டை பறவை மற்றும் மிருகங்களை - அனாயசமாக தனது சொந்த தயாரிப்பான பால்ரஸ் குண்டுகளை நிரப்பி வேட்டை ஆடுவதில் கில்லாடி அவன் .தனது காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொண்டபோது காதலின் ஆழம் சுத்தமாக புரியவில்லை..அது எனக்கு நடந்த பின்னால் கூட .

 எப்படி இந்த அலங்காரம்?
இதர்க்கு அடுத்து சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்தபோது பெண்பார்க்கும் நிகழ்சியில் ஒரு நண்பரின் நண்பன் கலாட்டா செய்து விசாரணைக்கு போனபோது அவள் சம்மதமில்லாமல் எப்படி இது நடக்கிறது என்று அந்த பையன் அங்கு போய் கேட்டானாம் .அப்பா ஏற்பாடு என்று சொன்ன பெண்ணை அப்புறம் எப்படி இந்த அலங்காரம் என்று அடித்து இருக்கிறான் .காதல் குருட்டுத்தனமான தைரியம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஆம் அந்த துணிவு பாடம் புகட்டியது.

 வாழ்கையை நேசிக்க தெரியாதவன் !
            காதலை தர சொல்ல முடியாது.அது கிடைக்காதபோது எங்கோ தூக்கி வீசபட்ட உணர்வை த்ந்தாலும் காதல் மட்டுமே வாழ்கை இல்லை. மறுக்கபட்ட காதல் தோற்றுப்போன காதலுக்கு நிகர் இல்லை.அதர்க்கு மரணம் தீர்வும் இல்லை .தன்னுடைய வாழ்கையை நேசிக்க தெரியாதவன் காதலுக்கு லாயக்கில்லாதவன் அதுமட்டுமல்ல காதலை காதலாக பார்க்க தெரியாதவன் நிஜ வாழ்கைக்கு பொருத்தமானவன் இல்லை . 

 அந்த சோகத்தை..
          சிலர் இன்னும் வேடிக்கை செய்வதுண்டு .அந்த சோகத்தை சிகரெட்,தண்ணி,கோபத்தில் கெட்ட சகவாசம் ,என்ற வடிகால் மூலம் தீர்க்கமுயற்சிப்பது..அதாவது தன்னை விரும்பிய காதலை தன்னை அழிப்பதுமூலம் சந்தோசிப்பது...சில நாட்கள் அது சரி..
           ஆனால் அதைவிட சில பேர் தியானம் செய்து தீர்க்க கிளம்பி இருப்பது இன்னும் வேடிக்கை.என்னதான் இமயமலை போனாலும் கண்ணைமூடி உட்கார்ந்தால் உன் சுமை கூடவேதானே வரும்..

 சும்மா டைம்பாஸ்!
 
          அது அந்த காலம் .இப்போல்லாம் சும்மா டைம்பாஸ் அவ்வளவுதான் என்று வாய் சொன்னாலும் மனசின் இடறல் தொடரத்தானே செய்கிறது இந்த நூற்றாண்டிலும் ..ஏதோ குறுகுறுப்பு விடாது துரத்துகிறதே! ஏன்?

 காதல் வலி!
            எதுவுமே விளங்காமல்தான் எழுதுவதுதான் என் நோக்கமா?  இல்லை.காதல் வலி அனுபவிக்க பழகலாம் வாருங்கள் ...

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் நீண்டகால பயணம்..


காதலர் தினமா ?



THE BIBLICAL MEANING OF LOVE
1 JOHN 4:7-10
Purposeful commitment to sacrificial action for another         
(மற்றொருவருக்காக அர்பணிக்கும் நோக்கமுள்ள செயல் – காதல் )

                மேற்படி வாசகத்தை, எந்த வயதில் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதை விட என்னதான் சொல்லுகிறார்கள் என்று அறியும் முன் இந்தியாவின் துயரம் – அரசியல் களம் இப்போது இதை வழக்கம்போல் கையில் எடுத்துகொண்டு ஆடுவது  மிக பெரிய துயரம் .( படிக்க முந்தைய செய்தியை...)

       
  திரைப்படங்கள் ஒருபக்கம் , சில புத்தகங்கள் வேறு ஒருபக்கம் , அவசர கால வளர்ச்சி  கண்டபக்கம் ...இதில் காதல் படும்பாடு அரசியலை விட பாவம் .

           நமது காதல் என்ற தேர் - எப்படியோ இப்போது ஆணுக்கும் + பெண்ணுக்கும் ( வயதை இன்னும் தமிழ் சினிமா தீர்மானிக்க வில்லை ) இருவருக்கும் மட்டும் நடக்கும் ஒரு வேடிக்கை விசயமாக ஆக்கி தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள்.


            காதலை கடவுளிடம் எதிர்பார்த்த ஆண்டாளை மறந்து போனது கூட தவறில்லை .நமது சுஜாதா சொன்னாற் போல அது ஹார்மோன்களின் சாகஸம் என்றோ இன்னும் கொஞ்ச தூரம் போய் இதை ஆராய்ந்து பகர்ந்த திரு செமிர் ஜெகியின் கட்டுரை (http://earthsky.org/human-world/semir-zeki-beauty-is-in-the-brain-of-the-beholder) சொல்வதுபோல அது மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் உணர்வுகளுக்கு காரணம் என்று கூட சொல்லி சந்தோசப்படலாம். 


             ஆனால் இந்த வார்த்தை எதோ ஒரு வசீகரத்தை தந்து கொண்டு இருப்பதால்தான் அது இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது .அது மட்டுமல்ல அது இன்னும் முழுமையாக படிக்கப்பாடாத புத்தகம் . அதன் அர்த்தம் படிப்பவர்களை பொறுத்து மாறுபடலாம் - காலத்திர்க்கு தகுந்தார்போல . ..


                 ஆம் உலகின் முதல்  கவிதை வடிவிலான காதல் கடிதம் சுமேரிய நாட்டின் உயர்நிலை பாதிரியான இன்னானா என்ற பெண்ணால் தன்  கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில் எழுதி இருக்கின்றார். ( http://mristanblue.wordpress.com/first-love-letter-of-the-world-istanbul-archaeological-museum/
  ) கி.மு 2200களில்  எழுதபட்ட அந்த காதல் கவிதை  புரிந்துகொள்ளவே 58 வருடங்கள் ஆனதாம்.

                               

                     எனவே காதல் என்பது ேடல் நிந்த   உண்ணதமான உணர்வு என்பதை  அதன் நீண்டகால பயணம் சொல்கிறது...


புதன், 13 பிப்ரவரி, 2013

அந்த நம்பிக்கை எனக்கும் பிடித்திருந்தது ..

           
சமீபதில் எனது ! ( கம்பெனி ) ஏர்டெல் பயன்பாட்டில் தவறுதலாக ரூ-198 /- பிடிக்கபட்டது.அதர்க்கு புகார் அளித்து இருந்தோம்.அதர்காக அழைத்தார்கள்.அதர்க்கான தொகை ரத்து செய்ததாக சொல்லிவிட்டு அதர்க்கான Message வரும் ,அத்துடன் எங்கள் சேவையை பற்றி .கேட்போம் ,என்று இப்படி கேட்டார்கள்.

."Are you happy with resolution .We provided for your airtel mobile? text YES else NO to 247 "
நான் Yes என்று அனுப்பினேன்.மீண்டும் ,

“ Thank you for your feedback. We would like to know more about your experience .Would you like to response to a few questions? Reply with YES or NO (toll free )"
அடபாவிகளா மீண்டுமா ?

"Q 1of 3:Are you satisfied with the time taken to resolve your query / problem ? Reply with YES or NO."
Yes அனுப்பினேன். அடுத்து ..

“Q2 of 3 .was the Executive  knowledgeable to provide information / resolution that you needed? Reply with YES or NO.? "
Yes அனுப்பினேன்.அடுத்து...

“Q3 of 3 .Are you satisfied with the overall quality of the resolution provided to you ? Reply with YES or NO. "
NO அனுப்பினேன்  ஒரு கடுப்பில் ..

உடனே ஒரு Message " Thank you for your valued feedback .It will assist us to serve you better ." 

முதல் SMS பதிலுக்கு NO போட்டு இருந்தால் இத்தனை துன்பம் இல்லை .என்னதான் Auto Reply Message ஆக இருந்தாலும் இது கொஞ்சம்  ஓவர் இல்லையா 

சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் Customer care கூப்பிட்டு தன்னுடய டூ வீலர் ப்ஞ்சர் ஆகிவிட்டது ,வல்கனைசிங் நல்லதா / டூயூப் மாத்திடலமா ? என்று கேட்டாராம் .எங்களிடம் இதைப்போய் ஏன் கேட்கிறீர்கள் என்று காரணம் கேட்டதர்க்கு என்னுடய ஃப்ரண்ட் சொன்னான் எது கேட்டாலும் கரெக்ட்டா ஒரு பதில் சொல்லுவாங்கன்னு . ( எப்படீ? )

அந்த நம்பிக்கை  எனக்கும்  பிடித்திருந்தது ..